Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
நீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!!
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில் அதிகப்படியான சர்க்கரையை சேர்த்துக் கொள்வது ஒரு முக்கிய காரணமாகும். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை. அதிலும் ஆரோக்கியம் என்று நினைக்கும் காய்கறிகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த காய்கறிகளே உயிருக்கு ஆப்பு வைத்துவிடும். ஏனெனில் சில காய்கறிகளில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் அதிகம் இருக்கும். இத்தகைய காய்கறிகள் இனிப்பாக இருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் அனைத்து காய்கறிகளையுமே நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்பதில்லை. உதாரணமாக, பூசணிக்காய் இனிப்பாக தான் இருக்கும். ஆனால் இதனை நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிடலாம். மேலும் சில காய்கறிகளில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய உணவுகளை நீரிழிவு நோயாளிகள் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.
சரி, இப்போது நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில காய்கறிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, நீரிழிவு இருந்தால், அவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மாவுப்பொருள் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சேனைக்கிழங்கு
பொதுவாக கிழங்குகள் அனைத்திலுமே மாவுப்பொருளானது அதிகம் இருக்கும். அதிலும் சேனைக்கிழங்குகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சொல்ல முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே இந்த கிழங்கை உணவில் சேர்க்கக்கூடாது.

பீன்ஸ்
பீன்ஸ் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் ஸ்டார்ச் மிகவும் அதிகம் உள்ளது. அதற்காக பீன்ஸ்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அவற்றை நீரில் வேக வைத்து, அதுவும் அளவாக சாப்பிட வேண்டும்.

பீட்ரூட்
பீட்ரூட் ஒரு வேர் காய்கறி என்பதால், இது மண்ணில் உள்ள அனைத்து இனிப்புக்களையும் உறிஞ்சி, மிகவும் இனிப்பான சுவையில் உள்ளது. அதற்காக இதனை அறவே தவிர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனெனில் இதில் மற்ற நன்மைகளும் அடங்கியிருப்பதால், இதனை 2-3 வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்.

ஸ்குவாஷ் (Squash)
ஸ்குவாஷ் ஒரு இனிப்புச் சுவையுடைய குளிர்கால காய்கறி. இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் அதிகம் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள், இநத் காய்கறியில் எவ்வளவு தான் நன்மைகள் இருந்தாலும், அறவே தவிர்க்க வேண்டும்.

பச்சை பட்டாணி
பச்சை பட்டாணியில் ஸ்டார்ச் அதிகம் நிறைந்திருப்பதால், இந்த உணவுப் பொருளையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தக்காளி
தக்காளி சேர்க்காத உணவுகளை பார்க்கவே முடியாது. இருப்பினும் இது இனிப்புச் சுவையுடையதால், இதனை பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவுகளிலும் தக்காளியை அளவாக பயன்படுத்த வேண்டும்.

சோளம்
சோளத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஸ்வீட் கார்ன். இதன் பெயரிலேயே, இது மிகவும் இனிப்பானது என்பது தெளிவாக தெரிவதால், இதனை நீரிழிவு நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இதில் எண்ணற்ற அளவில் ஸ்டார்ச் நிறைந்துள்ளது.

வாழை வகைகள்
இந்தியாவில் வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை அதிகம் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் இந்த உணவுப் பொருட்களிலும் ஸ்டார்ச் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக வாழைப்பழத்தில் இனிப்புச் சுவை அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி கிழங்கு
உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச் குறைவாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய கிழங்கை அறவே தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications