For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமாக டிவி பார்க்காதீங்க! நீரிழிவு வரும்!!

By Mayura Akilan
|

Too much television can give you diabetes
அதிக அளவில் தொலைக்காட்சி முன்பு நேரத்தை செலவழிப்பவரா? அது உங்களின் ஆரோக்கியத்திற்கு வேட்டுவைக்கும் வெடிகுண்டு என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். டிவி முன்பு பழியாக கிடப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதயநோய்கள், திடீர் மரணங்கள் போன்றவை ஏற்படும் என்றும் அவர்கள் அச்சுறுத்துகின்றனர்.

ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வு ஒள்றை மேற்கொண்டனர். 1970 முதல் 2011 வரை அவர்கள் அமெரிக்காவில் மேற்கொண்ட ஆய்வில் மனிதர்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதயநோய், திடீர்மரணங்கள் ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தினசரி அதிகபட்சம் மூன்று மணிநேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு குறைந்த வயதிலேயே திடீர் மரணங்கள் சம்பவிக்கும் வாய்ப்பு ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.

இன்றைய வாழ்க்கை சூழலில் தொலைக்காட்சி பார்ப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது. அதற்காக டிவி முன்பே பழியாகக் கிடக்காமல் அவ்வப்போது இடைவெளி விடுவது நீரிழிவு, இதயநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

நம் ஊரில் காலையில் நல்லநேரம் கேட்பது தொடங்கி இரவு அழுகை சீரியல்கள் வரை அனைவரும் டிவியே கதியாக கிடக்கின்றனர். அவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதை குறைத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

Too much television can give you diabetes | அதிகமாக டிவி பார்க்காதீங்க! நீரிழிவு வரும் !!

A new study from Harvard School of Public Health (HSPH) researchers has indicated that prolonged TV viewing is associated with increased risk of type 2 diabetes, cardiovascular disease, and premature death.
Story first published: Wednesday, July 11, 2012, 9:36 [IST]
Desktop Bottom Promotion