Latest Updates
-
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நீரிழிவு நோய் இருக்கா? அப்ப வெண்டைக்காய் சாப்பிடுங்க...

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?
* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?
* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
* நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.
* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.
எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
