ஒருவருக்கு டெங்கு அல்லது மலேரியா இருக்கு-ன்னு அறிகுறிகளை வெச்சு எப்படி தெரிந்து கொள்வது?

Dengue, Malaria Case Rise In Lucknow: தற்போது மழைக்காலம் என்பதால் கொசுக்களின் மூலம் பல்வேறு நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வழக்குகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், லக்னோவில் டெங்கு மற்றும் மலேரியாவின் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதுவும் லக்னோவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 39 டெங்கு வழக்குகளும், 3 மலேரியா வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதுவரை இப்பகுதியில் மட்டும் சுமார் 429 டெங்கு மற்றும் 408 மலேரியா வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே வேளையில் இப்படி இவ்விரு நோய்களும் பரவி வருவதால், காய்ச்சல் வந்தால் பலருக்கும் இது டெங்குவா அல்லது மலேரியாவா என்ற கேள்வி மனதில் எழலாம். ஆகவே கீழே டெங்கு மற்றும் மலேரியாவின் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வாருங்கள் அவை என்னவென்பதைக் காண்போம்.

Dengue Malaria Case Rise In Lucknow How To Know If Someone Has Signs Of Dengue Or Malaria

டெங்குவின் அறிகுறிகள்

* காய்ச்சல் - டெங்கு இருந்தால் முதலில் உயர் வெப்பநிலையில் காய்ச்சல் அடிக்கும். அதுவும் இந்த காய்ச்சல் 2 முதல் 7 நாட்கள் வரை நீடித்திருக்கும்.

* கடுமையான தலைவலி - தீவிரமான தலைவலியை, அதுவும் கண்களுக்க பின் வலியை அனுபவித்தால், அது டெங்குவின் அறிகுறியாகும். அதுவும் இந்த தலைவலி மிகவும் கடுமையானதாக இருக்கும்.

* கண்களுக்கு பின் வலி - முன்பே கூறியது போன்று, ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபருக்கு கண்களுக்கு பின் வலி ஏற்படும். குறிப்பாக கண்களை அசைக்கும் போது வலியை சந்திக்க நேரிடும்.

* தசை மற்றும் மூட்டு வலி - டெங்கு காய்ச்சல் இருந்தால், கால்களை அசைக்கமுடியாத அளவில் தீவிரமான தசை மற்றும் மூட்டு வலியை சந்திக்க நேரிடும்.

* சோர்வு - மிகுந்த உடல் சோர்வு மற்றும் களைப்பு தீவிரமான டெங்குவின் அறிகுறியாகும். டெங்கு முற்றிய நிலையில் இருந்தால் ஒருவர் மிகுந்த பலவீனத்துடன், ஆற்றலின்றி இருப்பார்.

* குமட்டல் மற்றும் வாந்தி - டெங்குவால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். இவை அனைத்தும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

* சரும அரிப்பு - டெங்கு காய்ச்சல் இருந்தால், காய்ச்சலுடன் சரும அரிப்புக்களையும் சந்திக்க நேரிடும். அதுவும் அரிக்கும் இடத்தில் சிவப்பு நிற தடிப்புகள் இருப்பதோடு, உடல் முழுவதும் பரவியும் இருக்கும்.

* லேசான இரத்தக்கசிவு - டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள சில நோயாளிகளுக்கு மூக்கு அல்லது ஈறுகளில் இருந்து இரத்தம் ஒழுகக்கூடும். தீவிரமான இரத்தக்கசிவு என்பது மிகவும் அரிது. ஆனால் இந்த டெங்கு தீவிரமான நிலையில் இருந்தால், அது ஏற்படக்கூடும்.

* பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறைவு - டெங்கு காய்ச்சல் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை குறைக்கும், இரத்தக்கசிவின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே டெங்கு இருந்தால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டியது அவசியம்.

* டெங்கு ஷாக் சிண்ட்ரோம் - டெங்கு காய்ச்சல் தீவிரமானால் அது டெங்கு ஷாக் சிண்ட்ரோம்மை உண்டாக்கும். அதாவது இந்நிலையில் இரத்த அழுத்தம் சட்டென்று குறையும் மற்றும் உறுப்பு செயலிழப்பிற்கு வழிவகுக்கும். இந்த நிலைக்கு உடனே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மலேரியாவின் அறிகுறிகள்

* காய்ச்சல் - மலேரியாவால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்நபருக்கு உயர் காய்ச்சல் இருக்கும். அதுவும் இந்த காய்ச்சலானது வந்து வந்து போகும், திடீரென்று குளிரும் மற்றும் வியர்க்கும்.

* தலைவலி - கடுமையான தலைவலியும் மலேரியாவின் அறிகுறியாகும். அதுவும் இந்த தலைவலியுடன், காய்ச்சலும் இருக்கும்.

* சோர்வு - மலேரியாவானது கடுமையான உடல் சோர்வு, பலவீனம் போன்றவற்றை உண்டாக்கும். அதுவும் லேசான வேலையை செய்தாலும், மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும்.

* குமட்டல் மற்றும் வாய்ந்தி - மலேரியாவால் பாதிக்கப்பட்டால், அந்நபரிடம் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளும் தென்படும்.

* தசை வலி - மலேரியா தசை வலி மற்றும் உடல் வலியை சந்திக்க வைக்கும். அதுவும் இந்த வலியானது தாங்க முடியாத அளவில் மிகவும் அதிகமாக இருக்கும்.

* மூட்டு வலி - மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியை சந்திக்க நேரிடும். குறிப்பாக முழங்கால் மூட்டு, தோள்பட்டை போன்ற பகுதிகளில் உள்ள மூட்டுக்களில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

* அடிவயிற்று வலி - மலேரியா அடிவயிற்றுப் பகுதியில் பிடிப்பு மற்றும் வலியை போன்றவற்றை ஏற்படுத்தி மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். சில சமயங்களில் இது கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, பலவீனமாக்கும்.

* மஞ்சள் காமாலை - மலேரியா தீவிரமானால், அது கல்லீரலை பாதித்து, கண்களை மஞ்சள் நிறத்தில் மாற்றி, மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.

* இரத்த சோகை - மலேரியா இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை குறைத்து, இரத்த சோகைக்கு வழிவகுத்து, வெளிரிய சருமம், மூச்சுவிடுவதில் சிரமம், பலவீனம் போன்றவற்றை உண்டாக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion