Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கப்பிங் தெரபி பண்ணுவதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Cupping Therapy In Tamil: கப்பிங் தெரபி என்பது ஒரு மாற்று சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையை பரவலான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சிகிச்சை முறையில் கப்பிங் என்ற பொருளை பயன்படுத்தி உறிஞ்சுதல் என்ற செயல்முறையை செய்கின்றனர். இது உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
உங்கள் உடம்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளை குணப்படுத்த இந்த கப்பிங் முறை உதவுகிறது. இந்த தெரபி பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த கப்பிங் தெரபி செய்வதன் மூலம் எந்த மாதிரியான நன்மைகளை நாம் பெறலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

கப்பிங் தெரபி என்றால் என்ன?
கப்பிங் தெரபி என்பது சீனாவில் தோன்றிய ஒரு பழங்கால சிகிச்சை முறையாகும். இதை ஹிஜாமா கப்பிங் அல்லது வெற்றிட கப்பிங் என்று அழைக்கப்படுகிறது. இந்த கப்பிங் மசாஜ் சிகிச்சையானது உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆசிய பல்வேறு, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க கலாச்சாரங்களில் நடைமுறையில் உள்ளது.
இந்த கப்பிங் சிகிச்சை ஆனது உடலில் 'குய்' அல்லது உயிர் சக்தியின் ஓட்டத்தை தூண்டுகிறது. இது நேர்மறை மற்றும் எதிர்மறை ஆகியவற்றிற்கு இடையே உடலின் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்க்கிருமிகளுடன் போராட வைக்க உதவுகிறது.
கப்பிங் தெரபி செய்யும் முறை:
உலர் கப்பிங் முறை:
* கப்பிங் தெரபியில் ஒவ்வொரு அமர்வும் சுமார் 20 நிமிடங்கள் செய்யப்படுகிறது.
* முதலில் பயிற்சியாளர் கப்பிங்கிற்கான உடம்பில் குறிப்பிட்ட புள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்தப் பகுதிகளை கிருமி நீக்கம் செய்வார்.
* பிறகு கோப்பைக்குள் ஆல்கஹால் அல்லது மூலிகைகளை வைத்து தீ வைக்க வேண்டும்.
* பிறகு தீ அணைந்த உடன் அந்த கோப்பையை உங்கள் தோலில் தலைகீழாக வைக்க வேண்டும்.
* கோப்பைகளுக்குள் உள்ள காற்று குளிர்ச்சியடையும் போது அது ஒரு வித உறிஞ்சுதலை உருவாக்குகிறது. இதனால் தோல் உயர்ந்து சிவக்க ஆரம்பிக்கிறது.
* 3-5 நிமிடங்கள் கோப்பைகள் உங்கள் தோலில் அப்படியே விடப்படும்.
ஈரமான கப்பிங் முறை:
* ஈரமான கப்பிங் முறையில் ஊசி அல்லது கத்தியைப் பயன்படுத்தி தோலில் சிறிய வெட்டுக்களை ஏற்படுத்திய பிறகு கோப்பைகளை மீண்டும் தோலில் இரண்டாவது முறையாக வைக்கப்பட்டு சிறிய அளவு இரத்தம் எடுக்கப்படுகிறது.
* கோப்பைகள் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை வைக்கப்படுகின்றன.
* கோப்பைகளை அகற்றிய பிறகு, குறிப்பிட்ட சருமத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, தொற்றுநோயைத் தவிர்க்க உடை அணிவிக்கப்படுகின்றன. இந்த கப்பிங் முறை பல்வேறு விதமான பிரச்சினைகளை களைய உதவுகிறது. இதை நன்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் மூலம் செய்து பயன் அடையலாம்.
கப்பிங் தெரபியின் நன்மைகள்:
1. வலி தொடர்பான சிகிச்சைகள்
பல ஆண்டுகளாக வலி தொடர்பான சிகிச்சைக்கு கப்பிங் முறை உதவுகிறது. 2011 ஆம் ஆண்டின் மதிப்பாய்வு படி , வழக்கமான மருந்து சிகிச்சையுடன் ஒப்பிடுகையில் குறைந்த முதுகுவலியைக் குறைப்பதில் உலர் கப்பிங் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கப்பிங் தெரபியானது கழுத்து வலி, நாள்பட்ட முதுகு வலி, ஒற்றைத் தலைவலி ஆகியவற்றைக் குறைக்கிறது. இது உங்கள் வலி தொடர்பான பிரச்சினைகளை போக்கி உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
2. சரும நோய்கள்
முகப்பருக்கள், தோல் அரிப்பு, படை நோய் மற்றும் ஹெர்பெஸ் ஜோஸ்டெரி போன்ற சரும நோய்களுக்கு கப்பிங் தெரபி உதவுகிறது என்று 2012 ஆம் ஆண்டு மதிப்பாய்வு பரிந்துரைக்கிறது.
ஃபைப்ரோமியால்ஜியா :ஃபைப்ரோமியால்ஜிய என்பது ஒரு வித தசைக்கூட்டு வலியாகும்.இது சோர்வு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. ஃபைப்ரோமியால்ஜியா நோயாளிகளின் அறிகுறிகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் கப்பிங் சிகிச்சை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 18 நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டவர்களின் வலி குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றத்தைக் காணலாம்.
3. கார்பல் டன்னல் சிண்ட்ரோம்
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் படி, கையில் வலி மற்றும் கூச்சத்தை ஏற்படுத்தும் நரம்பு நிலையான கார்பல் டன்னல் சிண்ட்ரோம் உள்ள நோயாளிகளுக்கு கப்பிங் சிகிச்சை சிறந்த பலனை தருகிறது. இது உடல் சிகிச்சை உடன் இணைந்து அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது.
4. மூட்டு வலி
மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க கப்பிங் தெரபி பயன்படுகிறது. முடக்கு வாதம், கீல் வாதம், வீக்கம் மற்றும் முழங்கால் வலியை போக்க கப்பிங் தெரபி உதவுகிறது.
5. உயர் இரத்த அழுத்தம்
கப்பிங் தெரபி உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
கப்பிங் தெரபியின் பக்க விளைவுகள்
கப்பிங் தெரபியை பயிற்சி பெற்ற மருத்துவ நபர்களால் மேற்கொள்ளுங்கள். கப்பிங் தெரபியில் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
* காயங்கள் ஏற்படுதல்
* வடுக்கள் உண்டாதல்
* குமட்டல்
* கப்பிங் செய்யும் இடத்தில் வலி
* சரும எரிச்சல்
* இரத்த சோகை ஏற்படுதல்
* மயக்கம் ஏற்படுதல்
* கீறல்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
யாரெல்லாம் கப்பிங் தெரபியை செய்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்?
* சொரியாஸிஸ்
* எலும்பு முறிவுகள்
* ஆழமான நரம்புகளில் இரத்த உறைவு உள்ளவர்கள்
* கர்ப்பம்
* மாதவிடாய் பிரச்சினை இருப்பவர்கள்
* நாள்பட்ட இதய நோய் இருப்பவர்கள்
* அல்சர் இருப்பவர்கள்
* பக்கவாதம்
* ஹீமோபிலியா
* ஆஸ்துமா
* புற்றுநோய்
* சந்தேகத்திற்கிடமான கட்டிகள் போன்றவை இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையை பெற்ற பிறகு கப்பிங் தெரபியை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











