இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் அதிக நன்மை கிடைக்கும்-ன்னு தெரியுமா?

When to Drink Coconut Water in Tamil: இளநீர் உடலில் பல அற்புதங்களை செய்யக்கூடிய ஒரு அதிசய பானமாக கருதப்படுகிறது. சொல்லப்போனால், இது இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இப்படிப்பட்ட இளநீர் ஒரு சிறந்த கோடைக்கால பானமாகும். ஏனெனில் இளநீர் கோடைக்கால வெப்பத்தை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது மற்றம் இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல் பானமும் கூட.

இளநீரில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் இயற்கை நொதிகளும், பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்களும் உள்ளதால், இது ஒரு அற்புதமான மற்றும் அனைவரும் பருகக்கூடிய பானமாக இருக்கிறது. பலருக்கும் இளநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி இருக்கும்.

What Is The Right Time To Drink Coconut Water In Tamil

ஏனெனில் இளநீரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கும் போது, அதனால் இருமடங்கு நன்மைகளைப் பெறக்கூடும். இப்போது இளநீரை ஒரு நாளில் எப்போது குடிக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

இளநீரைக் குடிக்க சிறந்த நேரம் எது?

உண்மையைக் கூற வேண்டுமானால், இளநீரைக் குடிப்பதற்கு இது தான் சிறந்த நேரம் என்ற எதுவும் இல்லை. இளநீரை ஒருவர் ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். பகல் வேளை, இரவு வேளை என்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கும் போது, அந்த நேரத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பது

இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது பல வழிகளில் நன்மை பயக்கும். ஏனெனில் இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்த, எடை இழப்பிற்கு உதவி புரியும். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள் இளநீரைக் குடிப்பது நல்லது. ஏனெனில் இது உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடும். மேலும் இது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் மசக்கை மற்றும் நெஞ்செரிச்சல் அறிகுறிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கும்.

உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின்

இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு சிறந்த ஆற்றல் பானம். எனவே இந்த இளநீரை ஒருவர் உடற்பயிற்சியி ஈடுபடுவதற்கு முன் குடித்தால், உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும். அதேப் போல் உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், அது உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவும். இது தவிர இளநீர் உடல் சோர்வைப் போக்கி, உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

உணவுக்கு முன் மற்றும் பின்...

இளநீரை ஒருவர் உணவு உண்பதற்கு முன் குடித்தால், அது அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும் மற்றும் உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவி புரியும். அதுவே உணவு உண்ட பின் இளநீரைக் குடிக்கும் போது, அது வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். தினமும் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், அது உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமஅளவில் பராமரிக்க உதவி புரிவதோடு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.

படுக்கைக்கு முன்...

நல்ல சுவையான இளநீரை இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதயத் துடிப்பை மெதுவாக்கும் மற்றும் மனதை அமைதிப்படுத்தி, இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். மேலும் இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, தொற்றுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தடுக்கிறது.

ஹேங்ஓவரை சரிசெய்யும்

மது அருந்தியதால் சந்திக்கும் ஹேங்ஓவரில் இருந்து உடனடி நிவாரணம் பெற இளநீர் உதவி புரியும் என்பது தெரியுமா? ஆம், எப்படியெனில் ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்கிறது மற்றும் இது சரக்கு அடித்த மறுநாள் தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை வரத் தூண்டும். இந்நிலையில் ஒரு இளநீரைக் குடித்தால், அது இப்பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, இழந்த எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவி புரிந்து, நன்கு உணர வைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion