Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
Beans Pattani Poriyal Recipe in Tamil: பீன்ஸ் பலருக்கும் பிடிக்காத காய்கறிகளில் ஒன்றாகும், குறிப்பாக குழந்தைகள் பீன்ஸ் பொரியல் என்றால் தலைதெறிக்க ஓடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் பீன்ஸ் என்றாலே தலைத்தெறிக்க ஓடுவார்களா? அத்தகையவர்களை பீன்ஸ் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒருமுறை அவர்களுக்கு பீன்ஸை இந்த பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள்.

பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இப்படி பொரியல் செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பொரியலின் ஸ்பெஷலே, அதில் சேர்க்கப்படும் பட்டாணியும், தனியாக அரைத்து சேர்க்கப்படும் மசாலாவும் தான். இது தான் இந்த பொரியலின் சுவையை கூட்டுகிறது. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பட்டாணி சேர்த்து செய்யப்படுவதால் இந்த பொரியல் புரோட்டீன் சத்து நிறைந்ததாக உள்ளது.
உங்களுக்கு பீன்ஸ் பட்டாணி மசாலா பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீன்ஸ் பட்டாணி மசாலா பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பீன்ஸ் - ஒன்றரை கப்
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைக்க:
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 4
தாளிக்க:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கடலைப் பரப்பு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- பீன்ஸைக் கழுவிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பட்டாணியை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். நறுக்கிய பீன்ஸ் மற்றும் பச்சைப் பட்டாணியை ஒரு பிரஷர் குக்கரில் போடவும்.
- பின்னர் அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் ஊற்றவும்.
- அடுப்பை முழு தீயில் வைத்து 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கிய பிறகு குக்கரைத் திறக்கவும்.
- காய்கறிகள் சரியான பதத்தில் வெந்திருக்க வேண்டும், குழைந்து போகக்கூடாது.
- பின்னர் மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகை சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- பருப்பு பொன்னிறமாக மாறியதும் அதனுடன் வேகவைத்த பட்டாணி மற்றும் பீன்ஸ் கலவையைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- தீயை அதிக அளவில் வைத்து, கலவையில் உள்ள அதிகப்படியான நீர் வற்றும் வரை வதக்கவும்.
- இப்போது அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.
- அவ்வளவுதான் ஆரோக்கியமான பீன்ஸ் பட்டாணி பொரியல் ரெடி. இது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு சூப்பர் சைடிஷாக இருக்கும்.
பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்: பீன்ஸில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து ஆகியவை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென உயர்வதைத் தடுக்கின்றன. இதனால், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த காயாக இருக்கும்.
இதயத்தை பாதுகாக்கும்: பீன்ஸில் இயற்கையாகவே கொலஸ்ட்ரால் இல்லை, மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, LDL கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
எடை குறைப்பிற்கு உதவும்: பீன்ஸில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகின்றன. இது அளவுக்கு அதிகமாக உண்பதைத் தடுத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்: பீன்ஸில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மலத்தின் அளவை அதிகரித்து, குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது; இதன் மூலம் மலச்சிக்கல் தடுக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுவதுடன், செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது.



Click it and Unblock the Notifications