Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்..
Trigrahi Yog In Cancer On 22 June 2026: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றியும், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தும் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார்.

அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் கடக ராசியில் நுழையவுள்ளார். இதனால் கடக ராசியில் குரு, சுக்கிரன் , புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.
இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பது மட்டுமின்றி, லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகத்தால் தொழில் ரீதியாக நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ள ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலைமை படிப்படியாக வலுவடையும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் வேலையைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். பணியிடத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் வேலைகளை உரிய நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். மாணவர்கள் போட்டிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வெளிநாட்டு செல்லும் கனவு இருந்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கலை துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



