Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
Pasi Paruppu Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் எப்பவும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதுவும் சட்டென்று செய்யக்கூடியவாறான ஒரு குழம்பு ரெசிபியை செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு உள்ளதா? அப்படியானால் அந்த பாசிப்பருப்பைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து, சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு வறுவலையும் செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பாசிப்பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாசிப்பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* பூண்டு - 4
* பச்சை மிளகாய் - 3
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 2 சிட்டிகை
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* வரமிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 10-15 (பொடியாக நறுக்கியது)
* சின்ன தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த பாசிப்பருப்பு
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, நீரை ஊற்றி 2 முறை
நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 3 கப் நீரை ஊற்றி, அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய்,
நறுக்கிய பெரிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, குக்கரை அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை மசித்து விட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி, 5 நிமிடம் நன்கு
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications