Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Chennai Rains: நெஞ்சு சளியை வெளியேற்றணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த கசாயத்தை குடிங்க...
Chennai Rains: கடந்த சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி கொட்டும் மழையின் காரணமாக நிறைய பேர் சளி, இருமலால் அவதிப்படுவதுண்டு. உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் மழை பெய்தாலே சளி பிடித்துக் கொள்ளுமா? அப்படியானால் இந்த மாதிரியான காலநிலையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயங்களை தயாரித்து குடித்து வந்தால், உடலுக்கு இதமாக இருப்பதோடு, சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
ஆயுர்வேதத்தில் பெரும்பாலும் சளி, இருமலுக்கு கசாயங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பல பொருட்கள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டதால், அவற்றைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிக்கும் போது, சளி இருமலில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து நிபுணரான ஸ்வேதா ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற உதவும் ஒரு அற்புதமான கசாயம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த கசாயத்தை சளி பிடித்திருக்கும் வேளையில் தயாரித்து குடித்து வந்தால், ஒரு நல்ல நிவாரணத்தைப் பெறலாம். இப்போது அந்த கசாயம் என்னவென்றும், அந்த கசாயத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அதை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் காண்போம்.
கசாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* கிராம்பு - 2
* மிளகு - 2
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* ப்ளாக் சால்ட் - 1 சிட்டிகை
* சுக்கு பவுடர் - 1 சிட்டிகை
* ஓமம் - 1 சிட்டிகை
தயாரிக்கும் முறை:
* இந்த கசாயம் தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின் அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
கசாயத்தின் நன்மைகள்:
* இந்த கசாயத்தை குடிப்பதன் மூலம், நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.
* மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட்டு, சுவாசிப்பது எளிதாகும்.
* செரிமானம் மேம்படும்
* நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.
எனவே நண்பர்களே! கடுமையான இருமல் மற்றும் நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வந்தால், இந்த கசாயத்தை தினமும் தயாரித்து குடித்து வாருங்கள். இப்படி குடிப்பதன் மூலம் ஒரு நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
