Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த மாதிரி சாப்பிடுறத உடனே நிறுத்துங்க.. இல்லன்னா சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்.. எச்சரிக்கும் இதய நிபுணர்!
Heart Attack: சமீப காலமாக மாரடைப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இப்படி மாரடைப்பு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையுடன், உண்ணும் உணவுகளும் தான் காரணம். நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அது நமது உடலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இதய ஆரோக்கியத்தில் நன்கு தெரியும்.
இது தெரியாமல் நிறைய பேர் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி வருகின்றனர். அதுவும் இந்த பழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதயத்தை சேதப்படுத்தி, நாளடைவில் மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுக்குறித்து இதய நிபுணர் டிமிட்ரி யாரனோவ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அன்றாட உணவுப் பழக்கங்கள் எவ்வாறு மாரடைப்பு அபாயத்தை அமைதியாக அதிகரிக்கக்கூடும் என்பது பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, "நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இதய நோய், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அமைதியாக அதிகரிக்கக்கூடும் என்பது தெரியுமா?" என்றார்.
மேலும் "நமது குடலில் உள்ள சில குடல் நுண்ணுயிரிகள் நாம் உண்ணும் உணவை TMAO ஆக மாற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த TMAO என்பது மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு சேர்மம் ஆகும். அதே வேளையில் குடலில் ஆரோக்கியமற்ற நுண்ணுயிரிகள் இருந்தால், அது வீக்கத்தை தூண்டும், இரத்த அழுத்தத்தை அதிரிக்கும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்." என்றும் கூறியுள்ளார்.
எனவே குடல் மற்றும் இதய ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது என்று டாக்டர் டிமிட்ரி ஐந்து அறிவியல் சார்ந்த டிப்ஸ்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. நார்ச்சத்துள்ள உணவை அதிகம் உண்ணவும் - பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நல்ல குடல் பாக்டீரியாக்களை அதிகரித்து, உடல் முழுவதும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும் - பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடலில் உள்ள பாக்டீரியாக்களை சீர்குலைப்பதோடு, இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே இந்த வகை உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
3. புளித்த உணவுகளை உண்ணவும் - புளித்த உணவுகளான தயிர், கெஃபிர், கிமிச்சி போன்றவற்றில் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் உள்ளன. இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அதிகரிக்கும்.
4. இறைச்சி மற்றும் முட்டைகளை அளவாக எடுக்கவும் - இறைச்சிகள் மற்றும் முட்டைகளை அளவாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அவை TMAO-ஐ அதிகரிக்கலாம். இது அடைபட்ட தமனிகள் மற்றும் இதயப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய ஒரு சேர்மமாகும்.
5. நீரேற்றத்துடன் இருக்கவும் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் - நீரேற்றம மற்றும் மன அழுத்தம் ஆகிய இரண்டுமே குடல் பாக்டீரியாக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தை பாதிக்கும் வீக்கத்திற்கு பங்களிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
