Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 5 அறிகுறியும் மாரடைப்பு வருவதற்கு 1/2 மணிநேரத்துக்கு முன்னாடி தெரியுமாம்.. எச்சரிக்கும் இதய நோய் நிபுணர்!
Heart Attack Symptoms In Tamil: சமீப காலமாக மாரடைப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். மாரடைப்பு என்பது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது வரக்கூடியது. மாரடைப்பு ஏற்பட்டால் அதற்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் போது உயிரிழக்க நேரிடுகிறது.
முக்கியமாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படப்போகிறது என்றால் அதற்கு முன்னரே ஒருசில அறிகுறிகளை நமது உடல் நமக்கு தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் காரணமின்றி திடீரென்று ஒருசில பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்தால், அதைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

nourishnest888 என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதய நோய் நிபுணர் ஒருவர் மாரடைப்பு வருவதற்கு 30 நிமிடத்திற்கு முன் உடலானது 5 எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார். அதோடு அந்த அறிகுறிகள் என்னவென்பது குறித்தும் அந்த டாக்டர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "மாரடைப்பு ஏற்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் உடல் 5 எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அப்படி புறக்கணித்தால், மரணத்தை சந்திக்க நேரிடும்" என்றும் கூறியதோடு, 5 அறிகுறிகளையும் விளக்கமாக கூறியிருந்தார்.
1. நெஞ்சு அசௌகரியம்
"மாரடைப்பின் முதல் அறிகுறி நெஞ்சு அசௌகரியம். அதாவது நெஞ்சு பகுதியில் அழுத்துவது போன்றோ, இறுக்குவது போன்றோ அல்லது பாரமாகவோ இருக்கும். ஏனெனில் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் தடை ஏற்பட்டுள்ளது" என்று டாக்டர் கூறினார். எனவே காரணமின்றி இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
2. இடது கை, தோள்பட்டை மற்றும் தாடையில் வலி
"மாரடைப்பின் இரண்டாவது அறிகுறி இடது கை, தோள்பட்டை மற்றும் தாடையில் வலியை சந்திப்பது. எப்போது இதயத்தில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லையோ, அப்போது வலி சமிக்ஞைகள் அருகிலுள்ள நரம்புகள் வழியாகப் பயணிக்கின்றன" என்று டாக்டர் கூறினார். ஆகவே திடீரென்று இடது கையிலோ, தோள்பட்டையிலோ அல்லது தாடையிலோ வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி அவரிடம் கூறி பரிசோதனை செய்து பாருங்கள்.
3. மூச்சுத் திணறல்
மாரடைப்பின் மூன்றாவது அறிகுறி மூச்சுத் திணறல். இதயம் எப்போது சரியாக இரத்தத்தை அழுத்தாமல் உள்ளதோ, அப்போது குறைவான ஆக்ஸிஜன் நுரையீரலை அடைகின்றன. இதன் விளைவாக சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்களால் சரியாக சுவாசிக்க முடியாமல் போனால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. வியர்வை
மாரடைப்பின் நான்காவது அறிகுறி வியர்வை. இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்தால், நரம்பு மண்டலமானது தப்பிக்கும் நிலைக்கு சென்று, உடல் குளிர்ச்சியான நிலையில் இருந்தாலும் அதிகமாக வியர்க்கும் என்று டாக்டர் கூறினார். ஆகவே காரணமின்றி அதிகம் வேலை செய்யாமல் வியர்வை அதிகமாக வெளியேறினால், உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகுங்கள்.
5. குமட்டல் அல்லது தலைச்சுற்றல்
மாரடைப்பின் ஐந்தாவது எச்சரிக்கை அறிகுறி குமட்டல் அல்லது தலைச்சுற்றல். எப்போது ஒருவரது மூளை மற்றும் வயிற்றுக்கு இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக இருக்கிறதோ, அப்போது தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் உணர்வு தூண்டப்படுகிறது என்று டாக்டர் கூறினார். அதுவும் காரணம் ஏதும் இல்லாமல் இந்த அறிகுறிகளை சந்தித்தால் சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
எனவே நண்பர்களே! உங்களிடம் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளானது சமீப காலமாக அதிகமாக தெரிவதாக உணர்ந்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் தெரிவித்து உடனடி பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications