Latest Updates
-
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன?
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்!
Cardiac Arrest In UKG Kid: சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில், யூகேஜி படிக்கும் சிறுவன் ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பார்ப்பவர்களின் மனதையே பதறச் செய்துள்ளன.
சிசிடிவி காட்சிகளில், மாணவர்கள் வரிசையாக நின்று தாங்கள் ஸ்லேட்டில் எழுதியதை ஆசிரியையிடம் காண்பிப்பது தெரிகிறது. அப்போது ஒரு சிறுவன் சரியாக எழுதவில்லை என்று கூறப்படும் நிலையில், ஆசிரியை அவனை குலுக்கியதுடன், அவனது ஆடையை இழுக்க முயற்சிப்பதும், பின்னர் முகத்தில் அறைவதும் காட்சிகளில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அந்த சிறுவன் மயங்கி ஆசிரியையின் மீது விழுந்ததாகவும், பின்னர் அவன் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் பார்ப்போரின் மனது பதறும் வகையில் உள்ளது. மேலும் இதைப் பார்க்கும் போது அனைவருக்குமே அந்த ஆசிரியையின் மீது கோபம் வரக்கூடும். அதோடு பல கேள்விகளும் பலருக்கு எழலாம். அதில் முதலாவதாக "ஒரு குழந்தையை அறைந்தால் அந்த குழந்தை எப்படி இறந்துவிடும்?" என்ற கேள்வி எழக்கூடும். இப்படி பலரது மனதில் உள்ள கேள்விகளுக்கு டாக்டர் பிரகாஷ் மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "ஒருசில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயத்தில் வால்வு பிரச்சனைகள் இருக்கும். அதில் ASD (Atrial Septal Defect), VSD (Ventricular Septal Defect) போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த பிரச்சனைகள் 3-4 வயதில் சரியாகிவிடலாம். ஆனால் இந்த சிறுவன் யூகேஜி என்பதால், இவனுக்கு இதய வால்வுகள் சரியாக மூடாமல் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
மேலும் AAOCA (Anomalous Aortic Origin of a Coronary Artery) மற்றும் Congenital Aortic Stenosis போன்ற பிறவியிலேயே ஏற்படும் இதயக் குறைபாடுகளும் சில குழந்தைகளுக்கு இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயத்தின் மின் செயல்பாட்டில் உள்ள பிரச்சனை (Congenital Electrical Abnomalities Of The Heart) காரணமாக இருக்கலாம். இதை CPVT (Catecholaminergic Polymorphic Ventricular Tachycardia), Brugada Syndrome என்று கூறுவோம்.
இச்சம்பவத்தில் ஆசிரியை அவரை மிரட்டும் போது அந்த பையன் பயந்து நடுங்கி துடிக்கும் போது, அவனுடைய இதயத்துடிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. அதை Ventricular dyacardia என்று சொல்வோம். அதோடு மன அழுத்தமடையும் போது கார்டியாக் அரெஸ்ட் (Cardiac Arrest) என்னும் இதய முடக்கம் ஏற்பட்டிருக்கும். இது தான் CPVt-யின் முக்கியமான அறிகுறிகளாகும்.
பிறவியிலேயே வால்வு பிரச்சனைகள் உள்ள குழந்தைகளை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம்.
* உயரம் மற்றும் எடை மிகவும் குறைவாக இருப்பார்கள்.
* நெஞ்சு எலும்பு நன்கு தெரியும்.
* சிறிது நேரம் விளையாடினாலும் அவர்களால் மூச்சுவிட முடியாமல் திணறுவது,
* விளையாடும் போது அதிகமாக சோர்வடைந்துவிடுவார்கள்." என்று டாக்டர் கூறினார்.
இச்சம்பவத்தால் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்
"இந்த சம்பவத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதில் முதலாவது எல்கேஜி, யூகேஜி பிள்ளைகளிடம் சேட்டைத்தனம் அதிகம் இருக்கத் தான் செய்யும். ஆசிரியர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து அதை சகித்துக்கொண்டு தான் இருக்க வேண்டும். அவசரப்பட்டு கைநீட்டாதீர்கள். இந்த மாதிரி இன்னொரு சம்பவம் நடந்துவிடக்கூடாது.
பெற்றோர்களும் பிள்ளைகள் மிகவும் உடல் சோர்வாக இருந்தால், வளர்ச்சி போதவில்லை, நெஞ்சு கூடு கட்டியிருக்கு, இதயத்துடிப்பின் போது புஷ்புஷ் என்று சப்தம் கேட்டால், எப்போதும் பார்க்கும் மருத்துவரை சந்தித்து அதை கூறுங்கள். மேலும் குடும்பத்தில் யாருக்கேனும் பிறவி இதய நோய்/கோளாறு இருந்தால், ஒரு இதய மருத்துவரை பார்த்து, ECHO பரிசோதனை செய்து பார்த்துவிடுங்கள். இந்த சோதனையில் எந்த ஒரு கதிர்வீச்சு அபாயமும் இல்லை. ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், இப்படியான துயர சம்பவங்களை நடக்காமல் தடுக்கலாம்" என்றும் டாக்டர் கூறினார்.
ஒரு அறை உயிருக்கு ஆபத்தாகுமா?
குழந்தைகளை உடல் ரீதியாக தண்டிப்பது எந்த சூழலிலும் பாதுகாப்பானது என்று கருத முடியாது. குறிப்பாக தலை, முகம் அல்லது கழுத்துப் பகுதியில் ஏற்படும் காயங்கள் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை மருத்துவ ஆதாரங்கள் இல்லாமல் உறுதியாகக் கூறுவது சரியானதல்ல. "இதயப் பிரச்சனை இருந்ததால் தான் உயிரிழந்தார்" அல்லது "அடி காரணமாகவே இதயத் துடிப்பு நின்றது" என்று முடிவு செய்வதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வ மருத்துவ மற்றும் விசாரணை முடிவுகளுக்காக காத்திருப்பதே சரியான அணுகுமுறையாகும்.
இந்த சம்பவம் குழந்தைகளை பாதுகாப்பாகவும் அன்பாகவும் கையாள வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. குழந்தைகள் தவறு செய்யும்போது அவர்களை பயமுறுத்துவதற்கோ, அடிப்பதற்கோ பதிலாக, பொறுமையாக கற்றுக்கொடுப்பதே பாதுகாப்பான மற்றும் பொறுப்பான வழியாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications