Latest Updates
-
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க..
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்!
Breast Cancer Awareness Month: 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது காலத்தால் அங்கீகரிக்கப்பட்ட கூற்று. அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயாகும். இந்நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், தவறான தகவல்களும் அச்சங்களும் இன்னும் பலரிடம் காணப்படுகின்றன. மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் குறித்த அறிவியல் உண்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெண்கள் அதிகம் பயன்படுத்தும் டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை போன்றவை உண்மையிலேயே மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா என்பது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் K.G.ரம்யாலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
டியோடரண்ட்டுகள் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துமா?
"வாசனைத் திரவியம், டியோடரண்ட் (Deodorant) போன்றவை உடல் மணத்தை மாற்றப் பயன்படுகிறது. வியர்வைத் தடுப்பான் (antiperspirant) வியர்வையைக் குறைக்கிறது. அதுவும் அலுமினியம் கலந்த வியர்வைத் தடுப்பான்கள் தோல் வழியாக உடலுக்குள் சென்று, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாட்டைப் பாதித்துப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இருப்பினும், அமெரிக்க தேசியப் புற்றுநோய் நிறுவனத்தின் (NCI) தகவல்களின்படி, இவற்றின் பயன்பாட்டுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் இடையே உறுதியான காரணத் தொடர்பு நிறுவப்படவில்லை.
தற்போது பல முன்னணி தயாரிப்புகளில் பாரபென்கள் பயன்படுத்தப்படுவதில்லை; சிலவற்றில் இருக்கலாம். ஆனால் பாரபென்கள் மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்று முடிவு செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையாகச் சிலர் பாரபென்கள் இல்லாத தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
மேமோகிராம் எடுப்பதற்கு முன்பு வியர்வைத் தடுப்பானைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதற்குக் காரணம் புற்றுநோய் அபாயம் அல்ல. அவற்றில் உள்ள துகள்கள் பரிசோதனைப் படத்தில் சிறிய வெள்ளைப் புள்ளிகளாகத் தோன்றி, மார்பகத்தில் காணப்படும் நுண்ணிய சுண்ணாம்புப் படிவங்களைப் (microcalcifications) போலத் தோற்றமளித்து, படத்தை விளக்குவதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்." என்று டாக்டர் கூறினார்.
ப்ரா அணிவதால் புற்றுநோய் வருமா?
"இறுக்கமான உள்ளாடை அணிவதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது அல்லது கம்பி பொருத்தப்பட்ட உள்ளாடைகள் (underwire bra) நிணநீர் ஓட்டத்தைத் தடுத்து நச்சுப் பொருட்களைச் சேர்க்கின்றன என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. உள்ளாடையின் வகை, அளவு அல்லது அணியும் நேரம் ஆகியவை மார்பகப் புற்றுநோய்க்கான நிரூபிக்கப்பட்ட காரணிகள் அல்ல.
தவறான அளவிலான அல்லது மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் தோலில் உராய்வு, அழுத்தம், அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தலாம். உள்ளாடை அணியாமல் இருப்பதால் புற்றுநோய் அபாயம் குறையும் என்பதற்கும் ஆதாரம் இல்லை. எனவே, அச்சத்தின் அடிப்படையில் உள்ளாடை அணிவதைத் தவிர்க்க வேண்டியதில்லை. உடலுக்குப் பொருத்தமான, வசதியான உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம்." என்று டாக்டர் கூறினார்.
ஹேர் டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
"ஹேர் டை பயன்படுத்துவதற்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வுகள் தெளிவான முடிவைத் தரவில்லை. முன்பு பயன்படுத்தப்பட்ட சில ஹேர் டைகளில் இருந்த அரோமாட்டிக் அமீன்கள் (aromatic amines) போன்ற ரசாயனங்கள் குறித்து புற்றுநோய் அபாயம் தொடர்பான கவலைகள் எழுந்தன. பின்னர், சில தீங்கு விளைவிக்கக்கூடிய மூலப்பொருட்கள் நீக்கப்பட்டு, தயாரிப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இருப்பினும், இன்றைய ஹேர் டைகளைப் பயன்படுத்துவதால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹேர் டைகளை அடிக்கடி பயன்படுத்துபவர்களும், தொழில்முறையாக அவற்றைக் கையாளும் சிகை அலங்கார நிபுணர்களும் ரசாயனங்களுடன் அதிகமாகத் தொடர்பில் இருக்கலாம். ஆனால், இந்தத் தொழில்சார் வெளிப்பாட்டிற்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு உறுதியாக நிரூபிக்கப்படவில்லை. சில ஹேர் டைகள் தோல் எரிச்சல், அரிப்பு மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே, நம்பகமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து, வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையற்ற வகையில் உச்சந்தலையில் படுவதைத் தவிர்ப்பது நல்லது." என்று டாக்டர் கூறினார்.
மார்பகப் புற்றுநோய்க்கான உண்மையான அபாயக் காரணிகள் யாவை?
"வயதான பெண்களுக்கு மட்டுமே இந்நோய் ஏற்படும், குடும்பத்தில் புற்றுநோய் இருந்தால் மட்டுமே வரும், மேமோகிராம் செய்வதால் புற்றுநோய் பரவும், மார்பகத்தை முழுமையாக அகற்றுவதுதான் ஒரே சிகிச்சை போன்ற தவறான கருத்துகளும் மக்களிடையே உள்ளன. மார்பகப் புற்றுநோய்க்கான உண்மையான அபாயக் காரணிகள் பின்வருமாறு:
மாற்றக்கூடிய காரணிகள்: உடல் பருமன், மது அருந்துதல், புகைப்பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை.
மாற்ற முடியாத காரணிகள்: பெண் பாலினம், வயது அதிகரித்தல், குடும்பத்தில் மார்பக அல்லது கருப்பை முட்டைப் புற்றுநோய் இருந்திருத்தல், சிறு வயதிலேயே மாதவிடாய் தொடங்குதல், தாமதமாக மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுதல்.
குழந்தை பெறாதிருத்தல் மார்பகப் புற்றுநோய் அபாயத்தைச் சற்றே அதிகரிக்கலாம். தாய்ப்பால் கொடுப்பது அபாயத்தைக் குறைக்க உதவலாம். ஆனால், இவை ஒவ்வொருவருக்கும் ஒரே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. அபாயக் காரணி இருப்பதால் ஒருவருக்குக் கட்டாயம் புற்றுநோய் வரும் என்று பொருளல்ல. அதேபோல், அறியப்பட்ட அபாயக் காரணிகள் இல்லாதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்." என்றும் டாக்டர் ரம்யாலட்சுமி கூறினார்.
எப்போது மருத்துவரை அணுகுவது முக்கியம்?
"மார்பகத்தில் புதிய கட்டி, தோலில் பள்ளம் அல்லது மாற்றம், முலைக்காம்பு உள்நோக்கி இழுக்கப்படுதல், முலைக்காம்பில் தானாக ஏற்படும் இரத்தக் கலந்த வெளியேற்றம் அல்லது ஆறாத தோல் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். வலி இல்லை என்பதற்காகப் பரிசோதனையைத் தாமதிக்கக் கூடாது. யாருக்கு, எப்போது, எத்தனை இடைவெளியில் பரிசோதனை தேவை என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துத் தீர்மானிக்க வேண்டும்.
முக்கியமாக எல்லா அபாயக் காரணிகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஆரோக்கியமான தேர்வுகளாலும் விழிப்புணர்வாலும் அபாயத்தைக் குறைக்கவும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறியவும் முயற்சி செய்யலாம்." என்று டாக்டர் கூறினார்.



Click it and Unblock the Notifications





