Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் அழகிய நகரம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம்
தினமும் இத்தனை டம்ளர் ப்ளாக் டீ குடிச்சா.. சீக்கிரம் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம் தெரியுமா?
Black Tea Benefits In Tamil: உலகில் காபி பிரியர்களைப் போன்றே, டீ பிரியர்களும் ஏராளமானோர் உள்ளனர். இந்த டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை ப்ளாக் டீ, க்ரீன் டீ, ஊலாங் டீ மற்றும் ஒயிட் டீ. இவற்றில் ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ பெரும்பாலானோர் குடிக்கப்பட்டு வரும் டீயாகும். முக்கியமாக ப்ளாக் டீ பழங்காலம் முதலாக நம் முன்னோர்கள் குடித்து வருகின்றனர்.
ப்ளாக் டீ குடிப்பதால், மனநிலை தெளிவாக இருக்கும். அதோடு இது உடல் சோர்வை போக்கி, உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இது தவிர ப்ளாக் டீயை தினமும் குடித்து வந்தால், உயிரைப் பறிக்கும் பல்வேறு நோய்களின் அபாயத்தைத் தடுக்கலாம். இப்போது ஏன் ஒருவர் தினமும் ப்ளாக் டீயைக் குடிக்க வேண்டும், அப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் ஒரு நாளைக்கு எத்தனை கப் ப்ளாக் டீ குடிப்பது என்பன குடித்து காண்போம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வரி ப்ளாக் டீயை குடிப்பது தான். ஏனெனில் ப்ளாக் டீயில் தியாப்ளேவின்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன. அதோடு, இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ப்ளேவோனாய்டுகள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை 8% குறைக்கின்றன. ஆய்வுகளின் படி, வழக்கமாக ப்ளாக் டீயைக் குடித்து வந்தால், இரத்த அழுத்தம் சீராவதோடு, பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற இதய நோய்களின் அபாயம் குறைவதாக தெரிய வந்துள்ளது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
ப்ளாக் டீயில் சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், அது இரத்த க்ளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, உடலில் சர்க்கரையை நிர்வகிக்கும் திறனை மேம்படுத்தும். அதுவும் உணவு உட்கொண்டதும் ஒரு கப் ப்ளாக் டீயைக் குடிக்கும் போது, அதிகரித்த இரத்த சர்க்கரை அளவானது உடனடியாக குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சீரான இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க ப்ளாக் டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பெரும் பகுதி வயிற்றுப் பகுதியில் உள்ளன. மேலும் இந்த குடல் பகுதியில் பில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. ப்ளாக் டீயை ஒருவர் தினமும் குடிக்கும் போது, அதில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மேம்படும்
ப்ளாக் டீயில் காப்ஃபைன் உள்ளது. ஆனால் இதில் காபியை விட குறைவான அளவிலேயே காப்ஃபைன் உள்ளது. மேலும் இதில் L-தியானைன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது ஒருவரது கவனத்தையும், விழிப்புணர்வையும் ஊக்குகின்றன. இதுக்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், ப்ளாக் டீ குடிப்பவர்கள் மற்றும் தண்ணீர் குடிப்பவர்களின் அறிவாற்றல் செயல்பாடு ஆய்வு செய்யப்பட்டது. அதில் தண்ணீரைக் குடிப்பவர்களை விட, ப்ளாக் டீயை குடிப்பவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதோடு, அவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் திறனும் சிறப்பாக இருந்தது தெரிய வந்தது.
புற்றுநோயின் அபாயம் குறையும்
ப்ளாக் டீயில் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களை அழிப்பதோடு, சில வகையான புற்றுநோய்களின் வளர்ச்சியைக் குறைக்கவும் உதவுகின்றன. ப்ளாக் டீயை குடிப்பதால் புற்றுநோயை முழுமையாக போக்க முடியாவிட்டாலும், இந்த டீ புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை மெதுவாக்குவதோடு, சில வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். அதுவும் ப்ளாக் டீயைக் குடிப்பது வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆகவே புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க சிறந்த வழி ப்ளாக் டீயைக் குடிப்பது தான்.
ஒரு நாளைக்கு எவ்வளவு ப்ளாக் டீ குடிக்கலாம்?
ஆய்வுகளின் படி, ஒரு நாளைக்கு ஒருவர் மூன்று கப் ப்ளாக் டீ குடிக்கலாம். அப்படி குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் குறைவதோடு, பிற இயத நோய்களின் அபாயம் தடுக்கப்படுகிறது. இருப்பினும், எந்த ஒரு ஆரோக்கியமான பொருளும் அளவுக்கு அதிகமானால், அது கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முக்கியமாக ப்ளாக் டீயை அளவுக்கு அதிகமாக குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் காப்ஃபைன் நரம்பு மண்டலத்தை தூண்டிவிட்டு, பதட்டம், தலைவலி, தலைச்சுற்றல் போன்றவற்றையும் உண்டாக்கும். எனவே ப்ளாக் டீயினால் நன்மையைப் பெற விரும்பினால், ஒரு நாளைக்கு 2 கப் குடிப்பதே போதுமானது மற்றும் பாதுகாப்பானதும் கூட.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications