Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
எச்சரிக்கை! இந்த 527 இந்திய மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் இருக்காம்... உஷார்..
Cancer Causing Chemicals In Indian Foods: உலகில் உணவுகளானது ஒரு நாடுகளில் இருந்து மற்றொரு நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து பல உணவுப் பொருட்கள் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.
அப்படி ஒரு நாட்டிற்கு மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் அந்நாட்டில் விற்கப்படுவதற்கு முன், அந்த உணவுப் பொருட்களின் தரத்தை இந்நாட்டு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்வர்.

இந்நிலையில் ஐரோப்பாவிற்கு இந்தியாவில் இருந்து ஒருசில உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போது ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தியாவில் இருந்து தயாரிக்கப்படும் 527 உணவுப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
முக்கியமாக இந்த உணவுப் பொருட்களானது இந்தியாவில் மிகவும் பிரபலமான MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவற்றினுடையது. இந்த உணவு பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எத்திலீன் ஆக்ஸைடு என்ற கெமிக்கல் இருப்பது ஆய்வின் போது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த தயாரிப்புகளானது ஹாங்காங், சிங்கப்பூரில் திடை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக ஐரோப்பாவில் எத்திலீன் ஆக்ஸைடு உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அப்படி இந்த கெமிக்கல் இருக்கும் உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டால், அவை விற்க தடைசெய்யப்பட்டும் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் 527 உணவுப் பொருட்களில் கெமிக்கல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 525 உணவுப் பொருட்கள் மற்றும் 2 தீவனப் பொருட்கள். இவற்றில் 332 உணவுப் பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்றும், மீதமுள்ளவை பிற நாடுகளைச் சேர்ந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்திலீன் ஆக்ஸைடு என்றால் என்ன?
எத்திலீன் ஆக்ஸைடு என்பது ஒரு பூச்சிக் கொல்லியாகவும், கிருமிகளை அழிக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான நிறமற்ற வாயு ஆகும். இந்த எத்திலீன் ஆக்ஸைடு எரியக்கூடியது. இது முதலில் மருத்துவ துறையில் மருத்துவ சாதனங்களை கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. போக போக அது விவசாயத் துறையில் நுழைய ஆரம்பித்துவிட்டது.
புற்றுநோயை உண்டாக்குமா?
சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமானது, இந்த எத்திலீன் ஆக்ஸைடு புற்றுநோயை உண்டாக்கும் என்பதை கண்டறிந்துள்ளது. இப்படிப்பட்ட கொடிய எத்திலீன் ஆக்ஸைடை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவது என்பது கவலைக்குரியது. ஏனெனில் இது எத்திலீன் கிளைகோல் உருவாக வாழிவகுக்கும். முக்கியமாக ஆப்பிரிக்காவில் இருமல் மருந்துகளில் இந்த எத்திலீன் ஆக்ஸைடு அதிகமாக இருந்ததால், நிறைய குழந்தைகள் இறந்துள்ளனர்.
இதனால் ஐரோப்பாவின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எத்திலீன் ஆக்ஸைடுக்கு 0.1 மிகி/கி என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த அளவை விட அதிகமாக இந்திய தயாரிப்பு உணவுப் பொருட்களில் இருந்துள்ளன.
எத்திலீன் எவ்வளவு ஆபத்தானது?
எத்திலீன் ஆக்ஸைடு உடலினுள் சென்றால், அது லிம்போமா, லுகேமியா போன்ற பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். முக்கியமாக இது உடலில் உள்ள டிஎன்ஏ-வை கடுமையாக சேதப்படுத்தி புற்றுநோயை எளிதில் குணமாக முடியாத அளவில் தீவிரமாக்குகிறது. மேலும் இதன் தாக்கமானது நீண்ட காலத்திற்கு இருக்க வைக்கிறது.
இந்த கெமிக்கல் பல தொழில்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கெமிக்கல் மார்பக புற்றுநோயை உண்டாக்கலாம். இது தவிர இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் சேதப்படுத்துகிறது. இந்த வாயுவின் வெளிப்பாடு கண்கள், தோல் மற்றும் சுவாசக் குழாயில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். இதன் நீண்ட கால வெளிப்பாடானது புற்றுநோய், இனப்பெருக்க கோளாறுகள் மற்றும் நரம்பியல் விளைவுகள் போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளையும் உண்டாக்கலாம்.
இந்தியாவிலும் இந்த இரண்டு பிராண்டுகளின் மசாலாப் பொருட்களும் பெரும்பாலான மக்களால் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருவதால், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், இந்த பிராண்டுகளின் பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்யத் தொடங்கியுள்ளது.
எதுவாயினும், இனிமேல் கடைகளில் விற்கப்படும் மசாலா பொருட்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றியது போன்று வீட்டிலேயே மசாலா பொருட்களை அரைத்து பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications