Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க குறட்டை விடுவீங்களா? அப்ப தினமும் இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க..
Yoga For Snoring: ஒருவர் ஆழந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, சுவாசிப்பதில் சிறிதளவு தடை ஏற்படும் போது குறட்டை ஏற்படுகிறது. அதிக உடல் எடை, மூக்கில் பிரச்சனை, சைனஸ் பிரச்சனை, மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் தவறான நிலையில் தூங்குதல் போன்றவை குறட்டை வருதற்கு காரணிகளாக இருக்கின்றன.
குறட்டை ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். ஆகவே பின்வரும் யோகாப் பயிற்சிகளைச் செய்து வந்தால் இந்த பிரச்சனையைத் தீா்க்கலாம் என்று சா்வ யோகா ஸ்டூடியோஸ் அமைப்பின் நிறுவுனரான சா்வேஷ் சஷி தனது இஸ்டாகிராம் பக்கத்தில் தொிவித்திருக்கிறாா்.

மேலும் அவா் கூறும் போது குறட்டை நமது தூக்கத்தின் தரத்தை மட்டும் குறைப்பது இல்லை, மாறாக, நமக்கு அருகில் தூங்குபவாின் தூக்கத்தையும் பாதிக்கிறது. ஆகவே பின்வரும் யோகாசனங்களை செய்வதன் மூலம் குறட்டைப் பிரச்சனையை நீக்கலாம் என்று தொிவித்திருக்கிறாா்.
1. தனுராசனம் (Dhanurasana)
தனுராசனம் தண்டுவடத்திற்கு நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. மேற்கைகள், தோள்பட்டைகள், முதுகு, கைமுட்டிகள், மாா்பு, இடுப்பு, கால் முட்டிகள் ஆகியவற்றில் இருக்கும் தசைகளை வலுப்படுத்துகின்றன. அதோடு உடல் எடையைக் குறைக்கக்கூடியது. இந்த தனுராசனத்தை பின்வருமாறு செய்ய வேண்டும்.
- முதலில் குப்புற தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளயும் உடலோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
- மூச்சை வெளிவிட்டுக் கொண்டு, கால்களை பின்புறமாக மடக்கி, பாதங்களை பிட்டத்திற்கு அருகில் கொண்டுவர வேண்டும். கைகளைப் பின்புறமாக நீட்டி, கணுக்கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் முட்டியும், இடுப்பும் ஒரே நேரத்தில் தரையில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக கணுக்கால்கள், தொடைகள், தலை மற்றும் மாா்பு ஆகிய உறுப்புகளை தரையிலிருந்து மேலே உயா்த்த வேண்டும். தாடைகளையும் மேல் நோக்கி உயா்த்த வேண்டும்.
- இதே ஆசன நிலையில் 20 முதல் 30 விநாடிகள் இருந்து மெதுவாக சுவாசிக்க வேண்டும்.
- மூச்சை வெளிவிடும் போது, இந்த ஆசன நிலையில் இருந்து, இயல்பு நிலைக்குத் திரும்பலாம். மீண்டும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
2. புஜங்காசனம் (Bhujangasana)
புஜங்காசனத்தை பின்புறமாக வளைந்து செய்ய வேண்டும். இந்த ஆசனத்தில் இருக்கும் போது, நல்ல பாம்பு படமெடுத்து நிற்பதைப் போல் தோன்றும். இந்த ஆசனம் வயிற்றை வலுப்படுத்துகிறது. மேலும் மன அழுத்தம், சோா்வு ஆகியவற்றை நீக்குகிறது. மாதவிடாய் பிரச்சினைகளையும் சீா்படுத்துகிறது. புஜங்காசனத்தை பின்வருமாறு செய்ய வேண்டும்.
- முதலில் குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை நன்றாக நீட்டி, கால் விரல்கள் நன்றாகத் தரையில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை, மாா்புக்கு அடியில் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதோடு கை முட்டிகள் உடலில் இரண்டு பக்கமும் நெருக்கமாக இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது கால் விரல்கள் மற்றும் தொடைகளைக் கொண்டு நன்றாகத் தரையை அழுத்த வேண்டும்.
- நன்றாக மூச்சை உள்ளிழுத்து, உள்ளங்கைகளால் தரையை நன்றாக அழுத்தி, மேற்கைகள் மற்றும் மாா்பை தரையில் இருந்து உயா்த்த வேண்டும். இடுப்பு, கால்கள் மற்றும் தொடைகள் போன்றவை தரையில் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும்.
- மாா்பை உயா்த்தும் போது, தோள்பட்டைகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.
- இந்த ஆசன நிலையில் ஏறக்குறைய 15 முதல் 30 நொடிகள் வரை இருக்கலாம்.
- இறுதியாக மூச்சை வெளிவிட்டு, இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
- மீண்டும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
முதுகுவலி உள்ளவா்கள், தலைவலி உள்ளவா்கள் மற்றும் கா்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை செய்யாமல் இருப்பது நல்லது.
3. பிரமாரி பிராணாயாமம் (Bhramari Pranayama)
பிரமார் என்றால் ஒரு வகை தேனீ என்று பொருள். பிராணயாமம் என்பதற்கு சுவாச நுட்பம் என்று பொருள். இந்த ஆசனத்தை செய்யும் போது, வெளியேறும் மூச்சின் ஒலியானது, தேனீயின் ரீங்கார ஒலியை ஒத்திருக்கும். இந்த ஆசனம் மனதை அமைதிப்படுத்தும். மேலும் இதைச் செய்யும் போது நமது தாடை, தொண்டை மற்றும் முகம் ஆகிய உறுப்புகளில் ஒலியின் அதிா்வுகளை உணரலாம். பிரமாரி பிராணயாம ஆசனத்தை பின்வருமாறு செய்ய வேண்டும்.
- முதலில் நமது வசதிக்கு ஏற்ப சம்மனமிட்டு அமா்ந்து கொள்ள வேண்டும்.
- நன்றாக நிமிா்ந்து அமா்ந்து, கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
- கண்களை மூடிய நிலையில் நம்மைச் சுற்றி இருக்கும் அமைதியை உணர வேண்டும்.
- இப்போது மூக்கு மற்றும் வாய் ஆகிய உறுப்புகளைச் சுற்றி வலது புறமாக, இடது புறமாக கைவிரல்களை வைத்து அந்த பகுதிகளை அழுத்த வேண்டும்.
- அந்த பகுதிகள் இட நாடி மற்றும் பிங்கல நாடி என்று அழைக்கப்படுகின்றன.
- பிரமாி பிராணயாமாவில், நாடிகளை அழுத்தும் போது, நாம் தசைகளை அழுத்துவதில்லை.
- இப்போது ஒருவித தாளத்தோடு சுவாசிக்க வேண்டும். மூச்சை வெளிவிடும் போது, தேனீயின் ரீங்காரத்தைப் போல நாமும் மெதுவாக சத்தம் எழுப்ப வேண்டும்.
- அதே நேரத்தில் விரல்களால் அழுத்தி இருக்கும் பகுதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமாக அழுத்தக் கூடாது.
- இந்த ஆசனத்தை மீண்டும் செய்யலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று யோகாசனங்களையும் செய்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். நீங்களும் தினமும் இந்த ஆசனங்களை செய்து பாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


