Latest Updates
-
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்..
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
Foods To Eat During Exams In Tamil: தற்போது தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கிவிட்டது. தேர்வுகளானது ஒருவரது அறிவை சோதிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது மூளை சிறப்பாக செயல்படும், தேர்வு நேரத்தில் மனம் பதட்டமடையாமல் இருக்கும், நீண்ட நேரம் கவனம் சிதறாமல் படிக்க முடியும்.

உங்கள் பிள்ளைகள் தேர்வு நேரத்தில் அதிகமாக பதட்டமடைவார்களா அல்லது படித்தது நினைவில் நிற்காமல் மறந்துவிடுகிறது என்று கூறுகிறார்களா? அப்படியானால் உங்கள் பிள்ளைகளுக்கு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து கொடுங்கள். உங்களுக்கு தேர்வு நேரத்தில் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா? கவலை வேண்டாம்.
உங்களுக்காகவே தேர்வு காலங்களில் கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கவும், உடல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் சில சிறந்த உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகளை அறிந்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து வாருங்கள்.
1. பழங்கள்
தேர்வு காலங்களில் பழங்களை உண்பது மிகவும் நல்லது. ஏனெனில் பழங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் இயற்கை சர்க்கரையையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன.
* வாழைப்பழம் - உடலுக்கு உடனடி ஆற்றலைத் தந்து, உடல் சோர்வைத் தடுக்கும்.
* ஆப்பிள் - நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும் மற்றும் விழிப்புடனும் வைத்திருக்க உதவும்.
* ஆரஞ்சு - வைட்டமின் சி நிறைந்த இப்பழம் புத்துணர்ச்சி அளித்து, உடல் சோர்வை போக்கும்.
இவற்றைத் தவிர பப்பாளி, கொய்யா, தர்பூசணி போன்ற போன்ற பழங்களையும் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
2. நட்ஸ்
நட்ஸ் அளவில் சிறியதாக இருந்தாலும், அவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. நட்ஸ்களை சிறிது சாப்பிட்டாலே, வயிறும் நிரம்பும், அறிவாற்றலும் அதிகரிக்கும்.
* பாதாம் - நினைவாற்றலையும், கவனத்தையும் மேம்படுத்தும்.
* வால்நட்ஸ் - மூளையின் தோற்றத்தைக் கொண்ட இந்த நட்ஸ் மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
* வேர்க்கடலை - இது விலை குறைவானது மற்றும் மூளைக்கு நல்ல ஆற்றலை தரக்கூடியது.
தேர்வு காலங்களில் பிள்ளைகளுக்கு இந்த நட்ஸ்களை ஒரு கைப்பிடி சாப்பிட கொடுத்தாலே, மூளையின் செயல்பாட்டிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்துவிடும்.
3. முழு தானியங்கள்
முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுப்பதும் நல்லது. ஏனெனில் இந்த வகை உணவுகள் ஆற்றலை மெதுவாக வெளியிடுவதால், நீண்ட நேரம் கவனம் சிதறாமல் இருக்கும். அதற்கு ஓட்ஸ், முழு கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி அல்லது திணை கஞ்சி போன்றவற்றை கொடுக்கலாம். கார்ப்ஸ் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
4. புரோட்டீன் உணவுகள்
புரோட்டீன் உணவுகள் வயிறு நிரம்பி உணர்வையும், விழிப்புடனும் இருக்க உதவுகிறது. எனவே முட்டைகள், பால், தயிர், பன்னீர், முளைக்கட்டிய தானியங்கள் போன்றவற்றை தேர்வு காலங்களில் உணவில் அதிகம் சேர்க்கும் போது அடிக்கடி பசியெடுக்காமலும் இருக்கும், படிப்பிலும் முழு கவனத்தை செலுத்த முடியும்.
5. நீர்ச்சத்து அவசியம்
உடலில் நீர்ச்சத்து சிறிது குறைந்தாலும், அது தலைவலி மற்றும் கவனச் சிதறலை ஏற்படுத்தும். எனவே தாகம் எடுத்தால் மட்டும் நீரை குடிக்காமல், அடிக்கடி நீரைக் குடிக்க சொல்லுங்கள். அதுமட்டுமின்றி, இளநீர், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்க கொடுக்கலாம். இது புத்துணர்ச்சியைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
