வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க...

Saturn Direct In Pisces 2026: ஜோதிடத்தில் சனி பகவானின் நிலையானது ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் மற்றும் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிக்கக்கூடியவர். அதுமட்டுமின்றி, அவ்வப்போது வக்ர நிலையில் பயணித்து வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.

Saturn Direct In Pisces 2026 These 6 Zodiac Signs Will Get More Benefits

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இந்த ராசியில் ஜூலை 27 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இப்படி சனி பகவான் வக்ர கதியில் இருக்கும் போது, அதன் விளைவாக சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை, தடைகளை சந்திப்பார்கள். அதுவும் எந்த ஒரு வேலையை செய்தாலும், அதில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

மொத்தத்தில் வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருக்கும். ஆனால் இந்த சனி பகவான் டிசம்பர் 11 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதனால் இதுவரை வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது. இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு சூப்பராக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ரிஷப ராசிக்காரர்களின் வேலையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்களும் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது தீர்ந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், டிசம்பர் முதல் நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

கன்னி

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். இதன் மூலம் நிதி நிலையிலும் உயர்வு ஏற்படக்கூடும்.

துலாம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மகரம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் முதல் பொற்காலமாக இருக்கப் போகிறது. குறிப்பாக பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் சனி பகவானின் அருளால் வெற்றிகரமாக முடிக்கப்படுவதோடு, அதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் செய்யும். இதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மனம் தெளிவு பெறும். மொத்தத்தில் முன்னேற்ற கதவு திறக்கும்.

கும்பம்

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் கும்ப ராசிக்காரர்கள் குறிப்பிடத்தக்க நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுவும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், சனியின் அருளால் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, September 16, 2026, 11:30 [IST]
Desktop Bottom Promotion