Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
உங்களுக்கு அதிக வியர்வை வருதா? அப்ப சந்தோஷப்படுங்க... உங்களுக்கு இந்த நன்மையெல்லாம் கிடைக்கப்போகுது...!
வியர்வை என்பது நம் உடல் செயல்பாடுகளில் நாம் மிகவும் வெறுக்கும் ஒரு செயல்பாடாகும். குறிப்பாக கோடைகாலத்தில் அதிகமாக வியர்ப்பது நம் உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும், இதனால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். மேலும் வியர்வை உடல் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். ஆனால் வியர்வை மொத்தமாக கெட்டதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
வெப்பம், பதட்டம், காய்ச்சல், உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பயன்பாடு உள்ளிட்ட பல காரணிகள் ஒருவருக்கு வியர்வை உண்டாக்கக்கூடும். வியர்வை நீரிழப்பு, பதட்டம் அல்லது நம் உடல் ஒரு நோயுடன் போராடுகிறது என்பதை நினைவூட்டலாம். இந்த வியர்வை உங்கள் உடலுக்கு சில நன்மைகளையும் அளிக்கலாம். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது
வியர்வையின் முதன்மைப் பணி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுவதாகும். வியர்வை வியர்வை சுரப்பிகளால் தோலில் சுரக்கப்படுகிறது, அது ஆவியாகி உடல் வெப்பநிலையை குறைக்கிறது. நீங்கள் வெப்பமான பகுதியில் வாழ்ந்தால் வியர்வை மூலம் இழக்கும் திரவங்களை ஈடுசெய்ய நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சருமம் பொலிவு பெறும்
உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது, இது உங்கள் சருமத்திற்கு உள்ளே இருந்து ஆரோக்கியமான பிரகாசத்தை அளிக்கிறது. வியர்வை உண்மையில் உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. ஆரோக்கியமான இரத்த ஓட்டம் சருமத்தின் செல்களுக்கு ஊட்டமளித்து ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது
நீங்கள் வேலை செய்யும் போது வியர்க்க ஆரம்பித்தால் அது உங்கள் இதயத்திற்கு நல்லதாகும். அதிகமாக வியர்வையை அனுபவிப்பவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்றும், சரியான உடற்தகுதி உடையவர்கள் அடிக்கடி மற்றும் விரைவில் வியர்க்கிறார்கள் என்றும் தரவுகள் உள்ளது, ஆனால் மக்கள் எப்போது, எவ்வளவு வியர்க்கிறார்கள் என்பதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன, அதனை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.
உடலை தூய்மைப்படுத்துகிறது
உங்கள் உடலை சுத்தப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று வியர்வை. வியர்வை உடலில் இருந்து உப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை அகற்ற உதவுகிறது. வியர்வை நச்சுகளை வெளியேற்றுவதற்கான உடலின் வழிமுறையாக செயல்படுகிறது. வியர்வை, துளைகளைத் தடுக்கும் மற்றும் முகப்பரு மற்றும் பிற தோல் குறைபாடுகளை ஏற்படுத்தும் மாசுக்களிலிருந்து விடுபட உடலுக்கு உதவுகிறது.
சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது
உடற்பயிற்சி செய்வது அதிகப்படியான உப்பை வெளியேற்றவும், உங்கள் எலும்புகளின் கால்சியத்தை சரியான அளவில் வைத்திருக்கவும் உதவும். சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமான சிறுநீரகம் மற்றும் சிறுநீரில் உப்பு மற்றும் கால்சியம் அதிகரிப்பதை இது தடுக்கிறது. வியர்வை இயற்கையாகவே ஒருவர் அதிக தண்ணீர் மற்றும் பிற திரவங்களை உட்கொள்ள காரணமாகிறது, இது சிறுநீரக கல் உருவாவதைத் தவிர்க்கும் மற்றொரு வழியாகும்.
சளி மற்றும் இருமலைத் தடுக்கிறது
வியர்வையானது தீங்கு விளைவிக்கும் நோய்த்தொற்றுகள் மற்றும் காசநோய் கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்கு உதவும். வியர்வையில் காணப்படும் ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட இந்த பெப்டைடுகள் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட பாக்டீரியாக்களின் சவ்வுகளில் ஊடுருவி, அவற்றை அழிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

