Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
தினமும் காலையில் 5 கறிவேப்பிலை, 1 பல் பூண்டு சாப்பிடுவதால் உடலினுள் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?
Curry Leaves Garlic Benefits In Tamil: ஒவ்வொருவருமே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புவோம். அதற்காக ஆரோக்கியமான பழக்கங்களை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டும் வருகிறோம்.
ஒருவரது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைப் பெற சிறந்த வழி நல்ல சத்துள்ள உணவுப் பொருட்களை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது தான். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 5 கறிவேப்பிலை மற்றும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடித்தால் உடலினுள் பல அதிசயங்கள் நிகழும்.

என்ன தான் கறிவேப்பிலையும், பூண்டும் தினசரி உணவில் சேர்க்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான பொருட்களாக இருந்தாலும், அவற்றை நாம் பச்சையாக, அதுவும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட்டு, உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். இப்போது ஒரு மாதம் தொடர்ந்து தினமும் காலையில் 5 கறிவேப்பிலை, 1 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் என்னென்ன அற்புதங்கள் நிகழும் என்பதைக் காண்போம்.
1. தொப்பை குறையும்
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், காலையில் கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை உண்பது நல்ல பலனைத் தரும். அதுவும் ஒரு மாதம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஏனெனில் கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ பண்புகள் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிகின்றன. அதேப் போல் பூண்டில் இருக்கும் அல்லிசின், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை திறம்பட கரைக்கும் ஆற்றல் கொண்டது.
2. இரத்த சர்க்கரை கட்டுப்படும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை மற்றும் பூண்டு உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல், கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும்.
ஆகவே உயர் இரத்த சர்க்கரையைக் கொண்ட சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இவற்றை உட்கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.
3. இரத்த அழுத்தம் கட்டுப்படும்
பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவக்கூடிய உணவுப் பொருள். இதற்கு பூண்டில் உள்ள அல்லிசின், டயாலில் டைசல்பைட், டயல் ட்ரைசல்பைட் போன்ற சல்பர் கொண்ட கலவைகள் தான் காரணம்.
அதேப் போல் கறிவேப்பிலையில் உப்பு குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். குறிப்பாக, இவ்விரு பொருட்களையும் தினமும் உட்கொண்டு வரும் போது, இதய ஆரோக்கியம் மேம்படும்.
4. செரிமானம் சிறப்பாக இருக்கும்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையையும், பூண்டு பல்லையும் உட்கொள்ளும் போது, செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். ஒருவரது செரிமான மண்டலத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் தான், அது உடலில் பல பிரச்சனைகளை வரத்தூண்டும்.
சொல்லப்போனால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய மூல காரணமே செரிமான பிரச்சனைகள் தான். எனவே செரிமான மண்டலம் எப்போதும் ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமானால், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சாப்பிடுங்கள்.
5. நச்சுக்கள் வெளியேறும்
உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கினால், அது உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை வரவழைக்கும். இந்த ஆரோக்கிய பிரச்சனைகளை தடுத்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பினால், பூண்டு மற்றும் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடியுங்கள்.
6. நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால் தான் அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுக்களால் அவதிப்படக்கூடும். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை சிரமமின்றி வலுப்படுத்த விரும்பினால், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பற்களை காலையில் உட்கொண்டு வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும்.
7. கொலஸ்ட்ரால் குறையும்
உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க கறிவேப்பிலை உதவி புரிவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதுவும் கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் உருவாக்கத்தைத் தடுத்து, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்க உதவி புரிகிறது.
அதேப் போல் ஒரு பல் பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால், அது உடலில் இருந்து 10% கொலஸ்ட்ராலைக் குறைக்கும். எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள் அல்லது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருக்க நினைப்பவர்கள், கறிவேப்பிலை மற்றும் பூண்டு பல்லை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள். நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications