Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உடம்புல மாரடைப்பைத் தூண்டும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடாதா? அப்ப இந்த பாலை டெய்லி குடிங்க..
Best Milk To Lower High Cholesterol In Tamil: கொலஸ்ட்ரால் என்பது நமது உடல் செல்களில் உள்ள மெழுகு போன்ற வழுவழுப்பான பொருள். இந்த கொலஸ்ட்ரால் உடலில் பல முக்கியமான செயல்பாடுகளை செய்கின்றன. அதில் செல்கன் வளர்ச்சி மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி போன்றவை அடங்கும்.
இப்படிப்பட்ட கொலஸ்ட்ராலை நமது உடலே உற்பத்தி செய்கின்றன. இந்நிலையில் நாம் உண்ணும் உணவுகளிலும் கொலஸ்ட்ரால் இருக்கின்றன. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க நிறைய வாய்ப்புள்ளன. இப்படி கொலஸ்ட்ரால் உடலில் அதிகரித்தால், அது இதய நோய், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

எனவே குறிப்பிட்ட வயதை எட்டியதும் ஒவ்வொருவரும் தங்களின் உணவில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக நாம் குடிக்கும் பாலை முதலில் கவனிக்க வேண்டும். ஏனெனில் பாலில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளன. அதுவும் ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், சாதாரண பாலைக் குடிக்கக்கூடாது.
அப்படி குடித்தால் கொலஸ்ட்ரால் இன்னும் அதிகரித்து, மாரடைப்பின் அபாயம் அதிகரிக்கும். அப்படியானால், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எந்த மாதிரியான பாலைக் குடிக்கலாம் என்று கேட்கலாம். கீழே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் எந்த வகையான பாலைக் குடிக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
1. பாதாம் பால்
பாதாம் பால் சாதாரண பாலுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். இந்த பாலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளன. அதோடு மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் சிறந்தவை. ஆய்வுகளும், பாதாம் பாலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்த பால் என்று கூறுகின்றன.
இருப்பினும், இந்த பாலைத் தேர்ந்தெடுத்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சர்க்கரை சேர்த்தால், அது கொலஸ்ட்ரால் அளவில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைத்தால், பாதாம் பாலைக் குடியுங்கள்.
2. ஓட்ஸ் பால்
ஓட்ஸ் பால் ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பாலில் பீட்டா-க்ளுக்கன்கள் என்னும் ஒரு வகையான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. ஆய்வுகளில் பீட்டா-க்ளுக்கன்கள் குடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளன. எனவே மாரடைப்பு வரக்கூடாது என்று நினைத்தால், ஓட்ஸ் பாலைக் குடியுங்கள்.
3. ஆளி விதை பால்
ஆளிவிதை பால் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் மற்றொரு சிறந்த பாலாகும். ஆளி விதையில் ஆல்பா லினோலினிக் அமிலம் என்னும் ஒரு வகையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மேலும் ஆளி விதை பாலில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இதுவும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகின்றன. எனவே இந்த வகை பாலையும் உணவில் சேர்க்கலாம்.
4. ஸ்கிம் பால்/கொழுப்பு நீக்கப்பட்ட பால்
கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளன. அதே சமயம் இந்த பாலில் அத்தியாவசிய சத்துக்களான கால்சியம், வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளன. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்கள் இந்த வகை பாலை தேர்ந்தெடுத்து குடிப்பது மிகவும் நல்லது.
5. சோயா பால்
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க வழக்கமான பாலுக்கு பதிலாக சோயா பாலைக் குடிப்பது நல்லது. சோயாவில் எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் ஐசோஃப்ளேவோன்ஸ் எனப்படும் உயர் தாவர கலவைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சோயா புரோட்டீனானது கொலஸ்ட்ரால்-குறைக்கும் விளைவைக் கொண்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த பால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
