54 வயதில் 20 கிலோ எடையை நடிகை குஷ்பு எப்படி குறைத்தார் தெரியுமா? அந்த ரகசியம் இதான்...

Actress Kushboo Sundar's Weight Loss: நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் தான் குஷ்பு சுந்தர். நன்கு கொழுகொழுவென்று இருந்த நடிகை குஷ்பு, சமீபத்தில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். குஷ்பு அவர்களின் போட்டோவைப் பார்த்த பலரும் அசந்து போனதோடு, ஆச்சரியப்பட்டார்கள்.

ஏனெனில் குஷ்பு அவர்கள் யாரும் நம்ப முடியாத அளவில் ஒல்லியாக மாறியுள்ளார். இதைப் பார்க்கும் பலரும் இவர் சர்ஜரி ஏதாவது செய்தாரா அல்லது அதற்காக மருந்துகளை உட்கொண்டாரா என்ற கேள்வியைக் கொண்டிருப்பார்கள்.

Actress Kushboo Sundar s Weight Loss How did Khushboo lose 20 Kg weight at 54

ஆனால் உண்மையில் குஷ்பு இப்படி ஆள் தெரியாத அளவில் உடல் எடையைக் குறைத்து மாறியதற்கு காரணம் அவரது டயட்டும், உடற்பயிற்சியும் தான். இப்போது நடிகை குஷ்பு எப்படி 54 வயதில் 20 கிலோ எடையை குறைத்தார் என்பதைக் காண்போம்.

54 வயதில் குஷ்பு எப்படி எடையைக் குறைத்தார்?

பொதுவாக பெண்கள் 40 மற்றும் 50 வயதை எட்டிவிட்டால், உடல் எடையைக் குறைப்பது என்பது இயலாத ஒன்று என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், குஷ்பு அவர்கள் இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறிந்து, அனைவரது வாயையும் அடைத்துள்ளார். நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் நிறுத்தம் தொடங்கும் போது உடலில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மெட்டபாலிசம் குறைவதால், எடை இழப்பு என்பது மிகவும் சவாலானது.

இருப்பினும், குஷ்பு எடையைக் குறைக்க வயது ஒரு தடையல்ல, ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் இருந்தாலே போதும் என்பதை நிரூபித்துள்ளார். இதற்காக குஷ்பு எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் தவறாமல் 10,000 முதல் 15,000 அடிகள் வரை தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

50 வயதை எட்டிய பெண்கள் குஷ்புவைப் போன்று எப்படி உடல் எடையைக் குறைக்கலாம்?

40 மற்றும் 50 வயதுகளில், உடலில் மெட்டபாலிசம் மிகவும் குறைவாக இருக்கும். அத்துடன் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து குறைவான உணவுகளை உண்பது போன்றவை அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணிற்கு வயது அதிகரிக்கும் போது உடல் பருமனை ஏற்படுத்தும். இந்நிலையில் ஒருசில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் மட்டும் உடல் கொழுப்பைக் குறைக்க முடியாது.

உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றுவதன் மூலம் எந்த வயதிலும் உடல் எடையைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது, நினைவாற்றலைப் பயிற்சி செய்வது போன்ற பழக்கங்களும் உதவி புரியும். இப்போது பெண்கள் உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரியான விஷங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதைக் காண்போம்.

வலிமைக்கான பயிற்சிகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் கார்டியோ பயிற்சிகளை மட்டுமின்றி, வலிமைக்கான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் வயது அதிகரிக்கும் போது தசைகளின் அடர்த்தி குறையும். அதுவும் இப்படி தசைகளின் அடர்த்தி 50 வயதுகளில் குறையத் தொடங்கும் மற்றும் மெட்டபாலிசம் குறைந்து உடல் பருமனை உண்டாக்கும். இந்நிலையில் வயது தொடர்பான தசை இழப்பைக் குறைப்பதற்கும், மிதமான உடல் எடையை ஊக்குவிப்பதற்கும் தினசரி வழக்கத்தில் தசையை வளர்க்கும் பயிற்சிகளைச் சேர்ப்பது அவசியம்.

சுறுசுறுப்பாக இருக்கவும்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால் அதிக கலோரிகளை எரிக்க வேண்டியது முக்கியம். அதற்கு ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல், நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும்.

புரோட்டீனை அதிகம் எடுக்கவும்

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் புரோட்டீனை அதிகம் எடுக்க வேண்டும். அதுவும் விலங்கு மற்றும் தாவர அடிப்படையிலான புரோட்டீனை உட்கொள்வது மிகவும் முக்கியம். இதன் மூலம் வயது தொடர்பான தசை இழப்பை தடுக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion