Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
நடிகை அனுஷ்கா பாதிக்கப்பட்டுள்ள அரிய வகை சிரிக்கும் நோய்: இது எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?
Actress Anushka Shetty suffering from a rare 'laughing Disease': பல ஆண்டுகளாக தென்னிந்தியாவில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்து வரும் அனுஷ்கா ஷெட்டிக்கு 42 வயதாகியும் திருமணமாகவில்லை.
இன்னும் சிங்கிளாக சுற்றி வரும் அனுஷ்கா ஷெட்டி, பாகுபலி திரைப்படத்தில் நடித்த பின், இவருக்கும், நடிகர் பிரபாஸிற்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாக உள்ளது, இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இருப்பினும் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகை அனுஷ்கா பேட்டி ஒன்றில் தனக்கு ஒரு அரிய வகை நோயான சிரிப்பு நோய் இருப்பதாக தெரிவித்தார். இவர் ஒருமுறை சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நிறுத்தாமல் சிரிப்பாராம். நகைச்சுவை காட்சிகளை படமெடுக்கும் போது அல்லது பார்க்கும் போது, இடைவிடாது சிரிப்பு வருமாம்.
இந்த காரணத்தினாலேயே பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று அனுஷ்கா பேட்டியில் கூறியதாக இந்தியாகிளிட்ஸ் தெரிவித்துள்ளது. சரி, அனுஷ்கா பாதிக்கப்பட்டுள்ள இந்த சிரிப்பு நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான காரணங்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சிரிப்பு நோய் என்றால் என்ன?
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். அதே சமயம் அளவுக்கு அதிகமானால் அது நஞ்சாகும் என்றும் கூறுவார்கள். அதற்கேற்ப அளவுக்கு அதிகமாக சிரிப்பதும் ஒருவித நோய். இதை சூடோபுல்பார் பாதிப்பு (PBA) என்று அழைப்பர். சூடோபுல்பார் பாதிப்பு என்பது ஒரு அரிய நரம்பியல் கோளாறு. இது கட்டுப்பாடற்ற அல்லது பொருத்தமற்ற சிரிப்பு அல்லது அழுகையை ஏற்படுத்தும். இந்நிலையின் அத்தியாயங்கள் ஒருவரின் உள் உணர்ச்சியுடன் பொருத்தியிருக்காது.
இந்த கோளாறு மூளை காயம் அல்லது அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்ளீரோசிஸ் போன்ற அடிப்படை நரம்பியல் நோயின் விளைவாக ஏற்படும். இருந்தாலும், சிரிப்பு அல்லது அழுக்கையின் அத்தியாயங்கள் தூண்டுதல் நிகழ்வுக்கு பொருத்தமானதாக தோன்றலாம். ஆனால் ஒருமுறை சிரிக்க அல்லது அழத் தொடங்கிவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் இது பொதுவாக எதிர்பார்ப்பதை விட நீண்ட நேரம் நீடித்திருக்கலாம்.
சிரிப்பு நோய் அல்லது சூடோபுல்பார் பாதிப்பானது ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் அது சங்கடத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் மற்றும் சமூக தனிமைப்படுத்தலுக்கும் வழிவகுக்கும்.
சிரிப்பு நோய் எவ்வளவு பொதுவானது?
க்ளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 மில்லியன் முதல் 7 மில்லியன் பேர் சூடோபுல்பார் பாதிப்பால் (PBA) பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சிரிப்பு நோய்க்கான காரணங்கள்
சூடோபுல்பார் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் என்றால் அடிக்கடி அழுவது அல்லது சிரிப்பது மற்றும் இது ஒருவரது மனநிலையுடன் பொருந்தாமல் இருக்கும். இப்போது இந்த சிரிப்பு நோய்க்கான சில பொதுவான காரணங்களைக் காண்போம்.
* மூளை காயம்
* அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS)
* மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (MS)
* அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியாவின் பிற வடிவங்கள்
* பக்கவாதம்
* பர்க்கின்சன் நோய்
* மூளை கட்டிகள்
* வலிப்பு நோய்
* வில்சன் நோய்
இவற்றில் ஏதேனும் ஒரு பிரச்சனையைக் கொண்டிருந்தாலும், அந்நபருக்கு சிரிப்பு நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.
சிரிப்பு நோயின் அறிகுறிகள்
சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் மனநிலையும் வேறுபட்டிருக்கும். அதில் ஒருவரின் உள்ளுணர்வு சோகமாகவோ, கோபமாகவோ அல்லது மகிழ்ச்சியாகவோ இருக்கும். இந்த உணர்ச்சிகளைப் பொறுத்து, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிரிப்பு அல்லது அழுகை போன்றவற்றை வெளிப்படுத்தக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications