21 நாட்களில் ஜிம்முக்கே போகாமல் மாதவன் எப்படி டக்குனு எடையை குறைத்தார் தெரியுமா? இவ்வளவு ஈஸியா ?

Weight Loss Tips: தமிழ் சினிமாவில் எப்போதும் அழகாக இருக்கும் சாக்லேட் பாய் ஹீரோக்களில் நடிகர் மாதவனும் ஒருவர். மேடி என்று அனைவராலும் அழைக்கப்படும் மாதவன் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்ற முன்னணி நடிகராக விளங்கினார்.

Actor Madhavan s Incredible Weight Loss Journey

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி, ஷைத்தான் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று இப்போதும் அவரின் மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ளது. இடைப்பட்ட காலத்தில் சற்று எடை அதிகமாக இருந்த மாதவன் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் எடையை வேகமாக குறைத்து பழைய இளமையான தோற்றத்திற்கு வந்துள்ளார். இவ்வளவு விரைவாக மாதவன் எடையைக் குறைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் எடையைக் குறைத்த முறை மிகவும் எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனராக அறிமுகமான ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்திற்காக எடையை அதிகரித்திருந்த மாதவன், தற்போது தீவிர உடற்பயிற்சிகள் அல்லது ரன்னிங் இல்லாமல் வெறும் 21 நாட்களில் அந்த கூடுதல் எடையைக் குறைத்துள்ளார். இந்த எடையைக் குறைக்கும் தனது சுவாரஸ்யமான பயணத்தை மாதவன் பகிர்ந்துள்ளார்.

21 நாட்களில் உடல் எடையை குறைக்கும் மாதவனின் ரகசியங்கள்

சமீபத்தில் அளித்த பேட்டியில், மாதவன் தனது உடற்தகுதி ரகசியங்களை பகிர்ந்து கொண்டார், அதில் முக்கியமானது உணவை மெல்லுவது. உண்மைதான் அவர் தனது ஒவ்வொரு உணவையும் 45-60 முறை மென்று சாப்பிட்டார். 54 வயதான நடிகர், "உங்கள் உணவைக் குடித்துவிட்டு, உங்கள் தண்ணீரை மெல்லுங்கள் (Drink your food and chew your water)" என்று கூறி, கவனத்துடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இரவு உணவின் ரகசியம்

மதியம் 3 மணிக்குப் பிறகு பச்சையாக எதையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதால், சமைத்த உணவை மட்டுமே விரும்பி, 6:45க்குள் தனது கடைசி உணவை சாப்பிட முயற்சிப்பதாகவும் மாதவன் கூறினார். அதிகாலையில் நீண்ட நடைப்பயிற்சி, ஆழ்ந்த உறக்கத்துடன் கூடிய இரவுகள் மற்றும் படுக்கைக்கு குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன் திரை நேரம் இல்லாமல் இருப்பதன் நன்மைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

பதப்படுத்தப்பட்ட எந்த உணவையும் அவர் அருகில் கூட அனுமதிக்கவில்லை மற்றும் எளிதில் வளர்சிதை மாற்றமடைந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

X தளத்தில் பகிர்ந்த வீடியோவில், மாதவன், அப்ளைடு கினீசியாலஜியைப்(applied kinesiology) பயன்படுத்தி விரைவாக உடல் எடையை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் தனது அணுகுமுறையை விளக்கினார். "எடையை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் அதை விரைவாகக் குறைப்பது எப்படி என்பதைக் கண்டறிய நான் நிறைய ஆராய்ச்சி செய்தேன். இந்த ஆராய்ச்சி என்னை அப்ளைடு கினீசியாலஜி எனப்படும் சோதனைக்கு அழைத்துச் சென்றது, இது அனைவருக்கும் சொல்வது என்னவெனில், நமது உணர்ச்சி நிலையின் காரணமாக சில வகை உணவை தவிர்க்க முடியாத நிலைக்கு சென்று விடுகிறோம், "என்று அவர் கூறினார்.

மாதவன் மூன்று மாதங்கள் கேக் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தை விவரித்தார், மேலும் "நான் சகிப்புத்தன்மையற்றதை மட்டுமே சாப்பிட்டேன். எனவே, முழு உடலும் வீங்கியது. குனிந்து என் லேஸைக் கட்டுவது கடினமாக இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்திற்குப் பிறகு, நான் என் உடலுக்கு நல்ல உணவை மட்டுமே சாப்பிட்டேன். உடற்பயிற்சி இல்லை, ஓட்டம் இல்லை, அறுவை சிகிச்சை இல்லை, மருந்து இல்லை." என்று விவரித்தார். அவரது உணவுக்கட்டுப்பாடே அவரின் எடையை இவ்வளவு விரைவில் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, July 22, 2024, 22:29 [IST]
Desktop Bottom Promotion