Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
வயதான தோற்றத்தை தடுக்க வேண்டுமா?.. இந்த 3 வைட்டமின்கள் அவசியம்.. எந்த உணவில் கிடைக்குது தெரியுமா?
சென்னை: இளமையை விரும்பாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை. தான் வாழும் காலம் முழுக்க இளமையோடு இருக்க சொன்னால் சந்தோஷமாக அனைவருமே அதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அப்படி யாருக்கும் நடப்பதில்லை. பல பேர் 40 வயதை நெருங்கிவிட்டாலே முதுமையான தோற்றத்துக்கு மாறிவிடுவார்கள். 40 வயதில் அந்த முதுமை தோற்றத்திலிருந்து நாம் தப்பிக்க நமது உடலில் மூன்று வைட்டமின்கள் ரொம்பவே அவசியம்.
இளமை காலம்தான் ஒரு மனிதனுக்கு முக்கியமான காலகட்டம். சுறுசுறுப்பாக இயக்கும் உடலை கொண்டு அக்காலத்தில்தான் ஒரு மனிதன் தன்னுடைய கனவு, லட்சியம் உள்ளிட்டவைகளை நோக்கி ஓடுவான். ஆனால் பலருக்கும் தங்களது ஆசை, கனவு, லட்சியத்தை நிறைவேற்றுவதற்குள்ளாகவே அவர்களின் இளமை தோற்றம் மறைந்து முதுமை தோற்றம் வந்துவிடும். அப்படி வரும்போது சம்பந்தப்பட்ட நபர் மனரீதியாகவும் சோர்வடையும் நிலைமையும் உருவாகும். அதிலும் 40 வயதை நெருங்கும்போதே அந்த தோற்றம் வந்துவிட்டால் வருத்தத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள்.
உருவாகும் தாழ்வு மனப்பான்மை: அப்படி வயதான தோற்றத்தை கொண்டிருப்பவர்கள் ஏகப்பட்ட சிக்கல்களை மனதளவிலும், பொது வெளியிலும் சந்திக்கிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடுகிறது. பல பேர் 40 வயதிலேயே 60 வயது கொண்ட தோற்றத்தை கொண்டிருப்பவர்களை பார்த்திருக்கலாம். இந்நிலையில் 40 வயதை தொடும்போது ஏற்படும் முதுமையான தோற்றத்தை தடுப்பதற்கு தேவையான மூன்று வைட்டமின்களையும், அவை எந்தெந்த உணவு பொருளில் கிடைக்கும் என்பதையும் இதில் பார்க்கலாம்.

வைட்டமின் பி12: மேற்கூறிய மூன்று வைட்டமின்களில் பி12 வைட்டமின் ரொம்பவே முக்கியமான ஒன்று. உடலில் ஆரோக்கியமாக சிகப்பு ரத்த அணுக்கள் உருவாவதற்கு இந்த பி12 வைட்டமின் அவசியமான ஒன்றாகும். இந்த ரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும்தான் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும். இந்த வைட்டமின் குறையும்போது மூச்சு இரைச்சல், உடல் வலி உள்ளிட்ட பிரச்னைகள் வரும். இவை அனைத்தும் நாம் உணரும்போது நமக்கு வயதாகிவிட்டதோ என்று தோன்றும். அதை தடுக்கும் வல்லமை பி12 வைட்டமினுக்கு இருக்கிறது. இந்த வைட்டமின் இறைச்சி உணவுகள், பால், முட்டை உள்ளிட்டவைகளில் கிடைக்கும்.
வைட்டமின் சி: வைட்டமின் சியும் முக்கியமான ஒன்றாகும். இந்த வைட்டமின் நமது உடலில் செல்கள் டேமேஜ் ஆகாமல் பார்த்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலாஜன் என்ற புரதத்தை இந்த வைட்டமின் அதிகம் உற்பத்தி செய்கிறது. இந்த கொலாஜன் புரதம் நன்றாக இருந்தால்தான் உடலின் சருமம் பளீச்சென்று இருக்கும்; எலும்புகள் உறுதியாக இருக்கும். இந்த வைட்டமின் சியை அதிகளவு பெற வேண்டுமென்றால் ஆரஞ்சு, எலுமிச்சை,நெல்லிக்காய், கொய்யா, ஸ்ட்ராபெரி, தக்காளி, திராட்சை உள்ளிட்ட பழங்களிலும் பாலக்கீரை உள்ளிட்டவைகளிலும் இந்த வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இவைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
வைட்டமின் டி: இந்த லிஸ்ட்டில் அடுத்ததாக இருப்பது வைட்டமின் டி. எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு இந்த வைட்டமின் ரொம்ப ரொம்ப அவசியம் ஆகும். இது குறைவாக இருக்கும்பட்சத்தில் மூட்டு வலி, தோள்பட்டை வலி என எலும்பு தொடர்பான பிரச்னைகள் வரும். டி வைட்டமின் சூரிய ஒளியில் அதிகம் கிடைக்கும். காலையில் அடிக்கும் இதமான வெயிலில் நிற்பதன் மூலம் இந்த வைட்டமினை நாம் பெறலாம். உணவை பொறுத்தவரை, முட்டை,மீன், காளான்கள் உள்ளிட்டவைகளில் இந்த வைட்டமின் கிடைக்கும். 3 வைட்டமின்களும் சீராக கிடைக்கும்போது மூளை சிறப்பாக இயங்கும், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த மூன்று வைட்டமின்களும் அடித்தளம் மட்டுமே. இவை தவிர்த்து வைட்டமின் கே, ஒமேகே 3 ஃபேட்டி ஆசிட்ஸ் இருக்கும் உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உடல்நல தகவலை மருத்துவர் ரதி என்பவர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications