மூளைப் புற்று நோய் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

மூளைப் புற்று நோய் மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவெனில், செல்களின் பெருக்கத்திற்கு புற்று நோய் அல்லது சாதாரண உடல் மாற்றம் காரணமாக இருக்கலாம்.

Shocking symptoms of brain tumour that you must never ignore

மூளைக் கழலையை ஏற்படுத்தும் செல் தொடர்பான கோளாறுகள் இரண்டு வகைப்படும். முதல் வகை மூளையில் தோன்றி அங்கேயே வளரும்.

இரண்டாவது வகை உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடங்கும் ஒரு புற்று நோய் கட்டி ஆகும். இவை உடலின் ஏதேனும் ஒரு பாகத்தில் தொடங்கி படிப்படியாக மூளையை நோக்கி பயனித்து அங்கு கட்டியாக உருமாற்றம் அடையும்.

கான்சர் மூளைக் கழலைகளின் சிகிச்சை மிகவும் கடினமானது. மேலும் இதன் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதமும் மிக அதிகம்.

எனவே, இங்கே நீங்கள் புறக்கணிக்க கூடாத மூளைக் கழலை நோயின் அறிகுறிகள் சிலவற்றை பட்டியளிட்டுள்ளோம். இதை புறந்தள்ளாமல் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தாறுமாறான உடல் இயக்கம்

1. தாறுமாறான உடல் இயக்கம்

தடுமாற்றம் மற்றும் கீழே விழுவது, பூட்டுக்களை திறக்க கஷ்டப்படுவது, பொருட்களை தவறவிடுவது, போன்ற விஷயங்களை அடிக்கடி சந்திப்பது மூளைக் கழலை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். ஏனெனில் இந்த அறிகுறிகள் உங்களுடைய நரம்புகள் பலவீனமடைவதை குறிக்கலாம்.

2. உணர்வின்மை

2. உணர்வின்மை

மூளைக் கழலை அதிர்ச்சி நோயின் மற்றொரு முக்கியமான அறிகுறி இதுவாகும். கைகள் மற்றும் கால்களில் உணர்ச்சி இல்லாமல் போகலாம். மேலும் உடல் முழுவதும் ஒரு கூச்ச உணர்வு தோன்றலாம். இவை அனைத்தும் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படும்.

 3. ஞாபக மறதி :

3. ஞாபக மறதி :

சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது வார்த்தைகள், முதலியவற்றை நீங்கள் மறந்து விடலாம். மேழும் உங்களுக்கு குழப்பம், சிரமம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் மூளைக் கழலை நோயின் அடையாளமாக இருக்க முடியும்.

4. குமட்டல்

4. குமட்டல்

எந்த ஒரு வெளிப்படையான காரணம் இல்லாமல் குமட்டலை அனுபவிப்பது மூளைக் கழலை நோயின் மிக நுட்பமான அறிகுறிகளில் ஒன்றாக இருக்க முடியும். இந்த அறிகுறியை பெரும்பாலான மக்கள் அலட்சியம் செய்கின்றனர்.

5. மங்களான பார்வை

5. மங்களான பார்வை

உங்களுடைய கண்களை சோதனை செய்யும் பொழுது சோதனை முடிவுகள் எந்த ஒரு பிரச்சனைகளைகும் குறிப்பிடாமல் இருக்கலாம். எனினும் உங்களுக்கு மங்களான பார்வை போன்ற கண் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் அது மூளைக் கழலை நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

6. பேசுவதில் சிரமம்

6. பேசுவதில் சிரமம்

மூளைக் கழலை நோய் உள்ள சிலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்படுகின்றது. அவர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமத்தை சந்திக்கின்றார்கள். இவை அனைத்தும் அவர்களுடைய புலனுர்வு செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களிலான ஏற்படுகின்றது.

 7. முக வலி

7. முக வலி

நீங்கள் உங்களுடைய முகத்த்தின் பல்வேறு பகுதிகளில் கூர்மையான வலியை அனுபவிக்கின்றீர்கள் எனில் அது நிச்சயமாக மூளைக் கழலை நோயின் மற்றொரு அடையாளமாக இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shocking symptoms of brain tumour that you must never ignore

Shocking symptoms of brain tumour that you must never ignore
Story first published: Sunday, January 8, 2017, 9:30 [IST]
Subscribe Newsletter