For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் :

|

மார்பக பகுதிகளில் பால் சுரக்கும் நாளங்கள் இருக்கிறது. அவைகளின் வழியாகத்தான் தாய்மை அடைந்ததும் பால் சுரக்கும். அந்த நாளங்களில் புற்றுநோய் தாக்கினால், டக்டல் புற்றுநோய் என்று பெயர். இது அப்படியே மற்ற இடங்களுக்கும் பரவி, நோய் தீவிரமாகிறது. மார்பக புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே.

Consumption of saturated fat leads to cancer

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

பொதுவாகவே மாதவிடாயின் ஒரு வாரம் முன்னும் பின்னும் சிறு சிறு கட்டிகளாய் உருண்டையாய் வருவதும் லேசான வலியும் சாதரணமானது. ஆனால் பல நாட்களாய் தொடர்ந்து கட்டி இருப்பதும், அந்த கட்டி வித்தியாசமாய் தெரிவதும், வலி எடுப்பதுமாக இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மனோபாஸிற்கு பிறகு, அதிகப்படியாக உடல் பருமனால், கொழுப்புத் திசுக்கள் மார்பில் சென்று தங்கும் என்று நியூ யார்க்கிலுள்ள, லங்கோன் மெடிக்கல் சென்டர் தெரிவித்துள்ளது.

மெனோபாஸிற்கு பிறகு நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் மார்பகத்தில் தங்கி, அவை மார்பக புற்று நோய்க்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்கள். அதிகப்படியான நிறைவுறும் கொழுப்பு அமிலங்கள் உள்ள சீஸ், இறைச்சி மற்றும் எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது தான் இதற்கு காரணம்.

கொழுப்பு செல்கள் மார்பகத்தில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்று நடத்தப்பட்ட ஆராய்ச்சியை ஜர்னல் ஆஃப் ரேடியாலஜி என்ற இதழ் வெளியிட்டுள்ளது.

மார்பக புற்று நோயை தடை செய்வதில் ஈஸ்ட்ரோஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் மெனோபாஸ் நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால், புற்றுநோய் வாய்ப்புகள் அதிகமாகிறது.

சுமார் 89 சதவீத மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களின் மார்பகத்தில் உள்ள அடிப்போஸ் திசுக்களை ஆய்வு செய்து, அவர்களின் உடல் எடையை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் தெரிய வந்தது என்னவென்றால், அதில் பங்கேற்ற நோயாளிகளிடம், நிறைவுறும் கொழுப்பு அமிலங்களின் அளவு அதிகமாகவும், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வின் இறுதியில் ஆராய்ச்சியாளர்கள், அதிகப்படியான எண்ணெய், கொழுப்பு உணவுகளே மார்பக புற்றுநோய் வர காரணம் என ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்

English summary

Consumption of saturated fat leads to cancer

Consumption of saturated fat leads to cancer
Desktop Bottom Promotion