Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஹரீஸ் கல்யாண் மாதிரி தாடி வளர்த்து பொண்ணுங்களோட ஆசை நாயகனாகணுமா? இத ட்ரை பண்ணுங்க
நம்ம ஹரீஸ் கல்யாணைப் போல அழகான தாடி வைத்து பெண்களைக் கவர்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம். அது பற்றிய அழகான தொகுப்பு தான்.
சாக்கலேட்பாய் லுக் தான் இளம்பெண்களுக்கு பிடிக்கும் என்ற காலம் மாறி, தாடி மீசை பெரிதா வளர்க்கும் ஆண்களே கவர்ச்சியானவர்கள் என்று யுவதிகள் நினைக்கும் காலத்திற்கு வந்தாச்சு. அதுவும் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, KGF யாஷ், நம்மூரு ஹரீஷ் கல்யாண் போன்றவர்கள் வந்த பிறகு தாடி மீதான மோகமும் காதலும் இளைய தலைமுறையிடம் அதிகரித்திருக்கிறது. அதனால் தான் மீசையையே விரும்பாத பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங் போன்றவர்கள் தற்போது அழகழகான தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் அது போன்று தாடியை வைப்பதும் பராமரிப்பதும் அவ்வளவு லேசான விஷயம் இல்ல. மரபு வழி வளர்ச்சி என்பதை தாண்டி ஆரோக்கியமான தாடி வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதுதான்

ஈரப்பசையை தக்கவைப்பது
முகச்சருமம் சுலபமாக ஈரப்பசையை இழந்து கடினமாகி விடும், தாடி வளர்க்க இந்த ஈரப்பசை முக்கிய காரணி, எனவே மாய்ஸ்ச்சரைசர் அல்லது தாடிக்கென்றே விற்கப்படும் பியர்டு ஆயில் (beard oil) மூலம் கடினமான சருமப்பகுதிகளில், குறிப்பாக மீசைக்கு கீழே உள்ள பகுதியில், ஈரப்பசையை தக்க வைக்க வேண்டும். .

சுத்தமாக வைப்பது
தாடி கடினமாக (rough) இருப்பதை தவிர்க்கவும் நமைக்காமல் இருக்கவும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

மெழுகு பயன்படுத்துங்கள்
மீசையை மென்மையாக்கவும் நீங்கள் விரும்பிய வடிவத்திற்கு வளைக்கவும் மெழுகு (wax) பயன்படுத்துவது அவசியம். அத்துடன் மீசைக்கு ஒரு பிரகாசத்தையும் இது கொடுக்கும்.

சிக்கு வராமல் தடுக்க சீப்பு உபயோகியுங்கள்
சீப்பு உபயோகிப்பதன் மூலம் தாடி மீசையில் சிக்கு வராமல் பார்த்துக்கொள்வது அவசியம். அத்துடன் சீப்பு உபயோகிப்பதால் தாடியில் படியும் அதீத எண்ணெயை தடுப்பதுடன் டேன்ட்ரஃப் வருவதையும் தடுக்கலாம்.

ஒழுங்கு படுத்துங்கள்
தாடியை அடிக்கடி கத்தரிப்பது மூலம் அதற்கு சரியான வடிவம் கிடைக்கும். கட்டுப்பாடற்று வளரும் தாடி மீசை உங்களது தோற்றத்தை கெடுக்கும்.

விளையும் பயிரை முளையிலேயே
தாடி வளர்ந்த பின் ஒழுங்கு படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். வளரும் பருவத்திலேயே அதற்கான வடிவத்தை ட்ரிம்மர், கத்தரி மூலம் கத்தரித்து உறுதி செய்யுங்கள்.
இதையெல்லாம் தவறாமல் கடைபிடித்தால் பியார் பிரேம காதல் படத்தில் வரும் ஹரீஸ் கல்யாண் மாதிரி நீங்கள் விரும்பிய மாதிரி தாடி உங்களுக்கு கிடைக்கும். ரைசா மாதிரி அழகழகான பெண்களை உங்களாலும் கவர்ந்திழுக்க முடியும். நீங்களும் பெண்களின் ஆசை நாயகனாக உலாவ முடியும்.



Click it and Unblock the Notifications