பாலிவுட் நடிகைகள் தங்கள் திருமண உடைக்கு மட்டும் எவ்வளவு செலவு செஞ்சாங்கன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் நடிகைகள் தங்களது திருமணத்தன்று மிகவும் அழகாக காட்சியளிப்பார்கள். அதுவும் அவர்கள் அணியும் உடைகள், ஆபரணங்கள் போன்றவை தனித்துவமாக அனைவரும் அதைப் பற்றியே பேசும் அளவில் இருக்கும்.

The Most Expensive Wedding Dresses Worn By Bollywood Celebrities

சரி, அப்படி பாலிவுட் நடிகைகள் அழகாக ஜொலிப்பதற்கு, தங்கள் திருமண உடைக்கு என்று எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்று தெரியுமா? இக்கட்டுரையில் திருமண உடைக்கு மட்டும் பல லட்சங்கள் செலவு செய்த நடிகைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி தனது திருமணத்தன்று 8000 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்ட அழகிய சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையின் விலை 50 லட்சம் ஆகும். இந்த புடவையை வடிவமைத்தவர் பிரபல டிசைனர் தருண் தஹிலியானி ஆவார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் மஞ்சள் மற்றும் தங்க நிறங்கள் கலந்த பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையிலும் ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பதிக்கப்பட்டிருப்பதோடு, புடவையின் பார்டர் தங்க நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. இந்த புடவையின் விலை 75 லட்சம். இந்த புடவையை வடிவமைத்தவர் நீத்தா லுல்லா ஆவார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் அணிந்திருந்த திருமண உடையை வடிவமைத்தவர் ரித்து குமார் மற்றும் இந்த உடையின் விலை சுமார் 50 லட்சம் இருக்கும். அதோடு கரீனா கபூர் அணிந்திருந்த நெக்லேஸ் 40 லட்சம் இருக்கும்.

ஜெனிலியா

ஜெனிலியா

காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை ஜெனிலியா அழகிய கோல்டன் மற்றும் சிவப்பு நிற புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையை வடிவமைத்தவர் டிசைனர் நீத்தா லுல்லா ஆவார். இந்த திருமண உடை சுமார் 17 லட்சம் இருக்கும்.

தியா மிர்சா

தியா மிர்சா

நடிகை தியா மிர்சா பச்சை மற்றும பழுப்பு நிற லெஹெங்காவை அணிந்திருந்தார். இந்த திருமண உடையை வடிவமைத்தவர் டிசைனர் ரித்து குமார் ஆவார். இந்த உடைக்குப் பொருத்தமாக தியா மிர்சா வைரம் மற்றும் தங்கம் கலந்த நெக்லேஸ் அணிந்திருந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக காட்சியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Expensive Wedding Dresses Worn By Bollywood Celebrities

Check out the most expensive lehengas/sarees worn by Bollywood brides. Also, pick your favourite bridal lookbook here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter