For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய் பாலூட்டிய படி, ஸ்விம் சூட்டில் ஒய்யாரமாக ரேம்ப் வாக் வந்த அசத்தல் மாடல்!

|

கடந்த திங்களன்று மாடல் மாரா இன்ஸ்டாகிராமில் பதிவின் மூலம் தனக்கு கிடைத்த அந்த பெரும் வரவேற்ப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஸ்விம் சூட் ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு தான் மாராவுக்கு இந்த ஆராவார வரவேற்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் உலகளவில்.

Image Source: si_swimsuit / Instagram

உலகின் பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் மாரா மார்டின் பற்றி புகழந்து எழுதி தள்ளிவிட்டனர். அப்படி என்ன செய்தார் மாடல் மாரா மார்டின்? ஸ்விம் சூட் ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் நடந்து வரும் போது பசியில் தாய் பால் பருகி கொண்டிருந்த தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த மாரா, தாய் பாலூட்டிய படியே ரேம்ப் வாக்கை முடித்தார். இதுதான் மாராவுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்க காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கனவு!

ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஸ்விம் சூட் ரேம்ப் வாக்கில் நடந்து வந்தது குறித்து கூற வார்த்தைகள் போதாது. நான் மிகவும் அற்புதமான உணர்வை பெற்றிருக்கிறேன் என்று கூறிய மாரா மார்டின், என்னை குறித்து பிறர் அறிந்துக்கொல்வாரா என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால், இப்போது என்னாலேயே நம்ப முடியவில்லை. பல ஊடகங்களில் நான் தலைப்பு செய்தியாகி இருக்கிறேன். அதுவும் எனது மகளுடன். அவளுக்கு நான் நாள்தோறும் செய்துவரும் கடமைக்காக, என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

நம்ப முடியவில்லை!

இன்னும் என்னால் இது நிஜமா என்று நம்ப முடியவில்லை. எந்த இடமாக இருந்தாலும் தைரியமாக தாய் பாலூட்டலாம். இந்த செய்தியை அனைவருடன் பகிர்ந்துக் கொள்ள நான் மிகவும் நன்றியுடையவளாக கருதுகிறேன். இது மற்ற பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். நேர்மையாக சொல்ல வேண்டும் எனில், இது தலைப்பு செய்தியாக வந்ததை என்னாம் நம்ப முடியவில்லை. ஏன் என்றால், இது தலைப்பு செய்தி அளவுக்கு பெரிய விஷயம் அல்ல. தாய் பாலூட்டுவது என்பது எனது அன்றாட தினசரி வேலை தான். என்றும் தான் அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார் மாரா மார்டின்.

சிறப்பு ரேம்ப் வாக்!

என்னுடன் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஸ்விம் சூட் ரேம்ப் வாக்கில் பங்கெடுத்துக் கொண்ட அனைவரையும் நான் நினைவில் கொள்கிறேன். அனைவருமே சிறந்தவர்கள், ஒருவர் நாட்டுக்காக போராடுபவர், ஒருவர் புற்றுநோயில் இருந்து பிழைத்து வந்தவர், ஒருவர் பாராலிம்பிக்கில் தங்கம் வேன்றவ்வர், ஒருவர் மார்பக புற்றுநோய் காரணமாக தனது மார்பினை இழந்தவர்.

அனைவருமே தங்கள் வாழ்வில் சிறந்த இடத்தையும், பிறருக்கு ஒரு முன்னோடியாகவும் இருப்பவர்கள். நான் நேற்று (கடந்த திங்களன்று) தைரியமாக தாய் பாலூட்டியபடி ரேம்ப் வாக் வர உதவிய, தைரியம் ஊட்டிய @MJ_DAYவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாரா மார்ட்டின் தெரிவித்திருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்!

ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் ஃபேஷன் பத்திரிகை. அவர்கள் பெண்களுக்கென ஒரு தனி சிறப்பு ரேம்ப் வாக் நிகழ்ச்சி ஏற்படாது செய்திருந்தனர். அதில் தான் மாரா மார்டின் தனது ஐந்து மாத குழந்தையுடன் ஸ்விம் சூட் உடையில் ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினார். இந்த வாய்ப்பளித்த ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிகை நிறுவனத்திற்கும் இவர் தனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் என பெருமையுடன் கூறியிருக்கிறார்.

திட்டமிட்டது அல்ல...

ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிகையின் எடிட்டர் @MJ_DAY இதை முன்கூட்டியே திட்டமிட்டு எல்லாம் செய்யவில்லை. அடுத்தடுத்து பெண்களுக்கான ஸ்பெஷல் ரேம்ப் வாக்கில் வர வேண்டியவர்கள் தயாராக இருக்கிறாரா என்று சரி பார்க்க சென்றிருக்கிறார் @MJ_DAY. அப்போது தான் மாரா மார்டின் தனது குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்ததையும், குழந்தை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறார். உடனே, நீங்கள் அப்படியே ரேம்ப் வாக் வர தயாரா என்று @MJ_DAY கேட்டவுடன், சற்றே திகைத்த மாரா மார்டின் பிறகு, தான் தாய் பாலூட்டிய படியே ரேம்ப் வாக் வர தயார் என்று கூறியிருக்கிறார்.

அழகிய முடிவு!

இந்த எதிர்பாராமல் நடந்த சம்பவம், இன்று உலகின் தலைப்பு செய்தியாக பல ஊடகங்களில் இடம்பெற்றிருக்கிறது. மேலும், தாய் பாலூட்டுதலின் நன்மைகளையும், சிறப்புகளையும் மிக அழகாக எடுத்துரைக்கும் ஒரு கருவியாகவும் மாறி இருக்கிறது @MJ_DAY மற்றும் மாரா மார்டின் சேர்ந்து எடுத்த இந்த முடிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Swim Suit Model Walked in Runway Show While Breastfeeding Her baby!

Sports Illustrated Swim Suit Runway Show: Model Mara Martin Walked While Breastfeeding Her baby!
Story first published: Wednesday, July 18, 2018, 17:30 [IST]