For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் கட்டாயம் அணிந்து பார்க்க வேண்டிய நான்கு விதமான பூ ஜடைகள்!

By Srinivasan P M
|

கல்யாண சீசன் தொடங்கிடுச்சு. நம்மில் பலர் பாரம்பரிய உடைகளை வாங்கத் தயாராக இருப்போம். புடவை, புடவை கவுன்கள், நகைகள், சல்வார் மற்றும் லெஹெங்காக்கள் ஆகியவை வாங்க ஆர்வமாக இருந்தாலும் ஆடைகளுடன் அணியும் அணிகலன்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நம் உடை வடிவமைப்பு வல்லுனர்கள் வியக்க வைக்கும் திறமைகளை வெளிப்படுத்தினாலும், ஆடைகளுடன் அணியக்கூடிய அணிகலன்களைப் பொறுத்த வரையில் பெரிய குறைகள் உள்ளன.

இந்தியர்களுக்கு மிக அருமையான திருமண ஆடைகளுக்கான பல்வேறு வசதிவாய்ப்புகள் உள்ளன. உடம்பின் ஒவ்வொரு பாகத்திற்கும் உண்டான நகைகள் உள்ளன. மூக்கிற்கு மூக்குத்தி, கைக்கு வளையல், செட் வளையல்கள், பின்னங்கைகளுக்கான வங்கி மற்றும் கால்களுக்கு கொலுசுகள் என பட்டியல் நீளும். இதில் முக்கிய இடம் பெறுவது பூ ஜடை. இதன் அழகு விளக்க இயலாதது.

மணமகளின் அலங்காரத்திற்கு அது சேர்க்கும் அழகும் மணமும் மிகவும் ரம்மியமாக இருக்கும். அருமையான மல்லிகை மலர்கள் நெய்யப்பட்ட சடைப் பின்னலுடன் கட்டினால் மணமகள் அலங்காரம் நிறைவுறும் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா? அதனால் மேற்கூறியது போல இப்போது நாம் மணமகள் அலங்காரத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படாத பூ ஜடையைப் பற்றி விவாதிப்போம். இந்த திருமண சீசனில் நீங்கள் முயன்று பார்க்க சில பூ ஜடை வகைகளை உங்களுக்காக தருகிறோம். ட்ரை பண்ணி பாருங்க.. உங்களுக்கே புடிச்சிருக்கும்.

பலர் இதை ஒதுக்கிவிட்டாலும் உங்கள் புடவை இந்த ஜடை அலங்காரத்தின் மூலம் சும்மா அதிரும்..

1. காஞ்சீபுரம் பட்டுப்புடவையுடன் தென்னிந்திய பூ ஜடை

Styles Of Gajra That You Must Try This Wedding Season

2. ரப்பர் பேண்டுடன் கூடிய ஜடையும் ஒரு காட்டன் (பருத்தி) புடவையும்

3. பட்டுப்புடவையுடன் கூடிய பிறை நிலா ஜடை

4. நெட்டட் புடவையுடன் கூடிய பூக்கொண்டை

English summary

Styles Of Gajra That You Must Try This Wedding Season

This wedding season pep that wedding outfit with these 4 styles of gajra. Accessorizing just got better!
Desktop Bottom Promotion