Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்..
2018 லேக்மீ ஃபேஷன் வீக்கில் மனைவியுடன் ராம்ப் வாக் நடந்த ஷாஹித் கபூர்!
நடந்து கொண்டிருக்கும் 2018 ஆம் ஆண்டின் லேக்மீ ஃபேஷன் வீக்கில் பல்வேறு டிசைனர்கள் தங்களது புதிய கலெக்ஷன்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் டிசைனர் அனிதா டாங்ரேவின் கலெக்ஷன்களும் வெளிவந்தன. அனிதா டாங்ரே தனது கலெக்ஷன்களுக்கு அழகிய இளம் தம்பதியரான ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி மிரா ராஜ்புட் அவர்களை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

பத்மாவத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாஹித் கபூர், இந்த லேக்மீ ஃபேஷன் வீக்கில் தனது மனைவியுடன் ஷோஸ்டாப்பராக வந்தது பலரது கவனத்தையும் இந்த டிசைனரின் ஷோவைக் காண வைத்தது எனலாம். குறிப்பாக ஷோஸ்டாப்பராக வந்த ஷாஹித் கபூர் அழகிய வெள்ளை நிற ஷெர்வானி சூட்டையும், மிரா ராஜ்புட் வெள்ளை நிற லெஹெங்கா சோளியும் அணிந்து க்யூட்டாக இருந்தனர்.
ஷாஹித் கபூர் அணிந்திருந்த ஷெர்வானியில் எவ்வித டிசைன்களும் இல்லை. மிரா ராஜ்புட் அணிந்து வந்த லெஹெங்கா மோடிஃப் பிரிண்ட்டுகளை உடல் முழுவதும் கொண்டிருந்தது, அவரை மிகவும் அழகாக காட்டியது. அதோடு லெஹெங்காவிற்கு மிரா அணிந்து வந்த மேட்ச்சான ஆபரணங்கள் மற்றும் தலையில் வைத்திருந்த பூ ஹேர் பேண்ட் மிராவை இன்னும் சிறப்பாக காட்டியது எனலாம்.
இந்த ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்த இந்த ஜோடி தங்களது திருமண தருணத்தை உணரும் வகையில் இருந்தது என்று கூறினர். இந்த தம்பதிகளைத் தொடர்ந்து, மாடல்களும் அனிதா டாங்ரே வடிவமைத்த உடைகளை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தனர்.
உங்களுக்கு இந்த ஜோடியின் ராம்ப் வாக்கைக் காண ஆசையாக உள்ளதா? அப்படியெனில் தொடர்ந்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications






