சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையில் உள்ள சிறப்பம்சத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவிற்கு ஞாயிறு மாலையன்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு நடிகை சமந்தா அணிந்திருந்த புடவை அற்புதமாக மட்டுமின்றி, தனது காதல் கணவரின் மீதுள்ள அன்பை வெளிக்காட்டும் வகையில் சிறப்பம்சம் கொண்ட அழகிய புடவையை அணிந்திருந்தார்.

சமந்தாவின் நிச்சயதார்த்தப் புடவையில் அப்படி என்ன உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். கீழே தொடர்ந்து படித்துப் பாருங்கள். பின்பு உங்களுக்கே புரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தன நிற புடவை

சந்தன நிற புடவை

இது தான் நடிகை சமந்தா நிச்சயதார்த்தத்தின் போது அணிந்திருந்த கோல்டன் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சந்தன நிற அழகிய புடவை.

மேக்கப் மற்றும் ஆபரணங்கள்

மேக்கப் மற்றும் ஆபரணங்கள்

நடிகை சமந்தா இந்த சந்தன நிற புடவைக்கு பொருத்தமான மேக்கப்பை மேற்கொண்டதோடு, பளிச்சென்று வெளிக்காட்டும்படியான அழகிய ஆபரணங்களை அணிந்திருந்தார்.

புடவையின் சிறப்பம்சம்

புடவையின் சிறப்பம்சம்

சமந்தா அணிந்திருந்த புடவையில் செய்யப்பட்டுள்ள எம்பிராய்டரி, நாக சைதன்யாவுடன் எடுத்த சில போட்டோக்கள் மற்றும் மறக்க முடியாத சில நினைவுகளாகும். வேண்டுமெனில் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

அகில் நிச்சயதார்த்த போட்டோ

அகில் நிச்சயதார்த்த போட்டோ

சமந்தாவின் நிச்சயதார்த்த புடவையில், அகிலின் நிச்சயதார்த்தத்தின் போது மாமனார் நாகார்ஜுனனுடன் சேர்ந்த எடுத்த போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

மோதிரம்

மோதிரம்

முக்கியமாக இந்த நிச்சயதார்த்த புடவையில், கடற்கரை ஒன்றில் நாக சைதன்யா மற்றும் தன் கையில் உள்ள மோதிரத்தை ஒன்றாக சேர்த்து எடுத்த போட்டோவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Samantha’s Engagement Saree Has Special Moments

Samantha Ruth Prabhu makes Naga Chaitanya’s marriage proposal a part of her engagement saree. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter