பட்ஜெட் டைரி: 750 ரூபாய்க்கு கீழ் ஸ்டைலான பெல்ட்கள்!

By: Ashok CR
Subscribe to Boldsky

அன்பார்ந்த ஆண்களே பெண்களே, உங்களுக்கான மற்றொரு பட்ஜெட் பொருள். உங்கள் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை இருந்தால் அல்லது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தால், மற்ற நாளில் நாம் பார்ப்பதை போல் இன்றும், மலிவான மற்றும் ஸ்டைலான ஒரு பொருளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். எப்படி பார்த்தாலும், உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப ஒரு சிறந்த பொருளை நீங்கள் தேர்ந்தெடுக்க போல்ட்ஸ்கை ஃபேஷன் உதவுகிறது.

பெல்ட்டை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை உங்கள் பாவாடை அல்லது பேன்ட் கழன்று விழாமல் இருப்பதற்கு மட்டுமே பயன்படும் என நினைக்கிறீர்களா? உங்கள் பின்பக்கத்தில் அதனால் உங்களுக்கு வலி ஏற்படுகிறதா? உங்கள் பெல்ட் அசிங்கமாகவும் பழைய டிசைனாகவும் உள்ளதா? அப்படியானால், வெறும் 750/- ரூபாயில் உங்கள் பெல்ட் தொகுப்பை சீரமைக்க நாங்கள் சில சிறந்த டிப்ஸ்களை வைத்துள்ளோம். சரி, தொடர்ந்து படியுங்கள்!


1. கிளாசிக் லெதர்

அது கருப்பு அல்லது பழுப்பு நிறமோ, ஃபார்மல் உடை என வந்து விட்டால், உங்களை எடுப்பாக காட்ட லெதர் பெல்ட் பெரிதும் உதவும். அனைத்து விதமான நேர்த்தியான ஃபார்மல் உடைகளுக்கும் இவை பொருந்தக்கூடியதாக இருக்கும். உங்களது ஆடைகளுக்கு ஏற்றாற்போல் அதனை மறுபயன்பாடும் செய்து கொள்ளலாம். பெல்ட்டின் மென்மையான மேற்பரப்பு பாதிப்படையாமல் இருக்க, பயன்படுத்தாத நேரத்தில் அதனை ஒரு வடை போன்ற வடிவத்தில் சுருட்டி வைத்துக் கொள்ளவும்.

 Stylish Belts Under Rs. 750!

விலை: 749 - இதனை வாங்க இங்கே சொடுக்கவும்

2. பின்னல் டிசைன்

கவர்ச்சியான பின்னல் டிசைன் கொண்ட பெல்ட்டினால் உங்களது காட்டுத்தனமான, பக்கா மாஸ் பக்கம் வெளிப்படும். ஆம், நீங்கள் செல்லும் இடமெல்லாம் இந்த பெல்ட் உங்களுக்கு பெற்று தரும் கவனிப்பை கையாளக்கூடிய அனைவருக்குமானது இந்த பெல்ட். உச்சகட்ட தோற்றத்தை பெற இதனை டிசைன் அல்லாத சாதாரண பேண்டுடன் அணியவும்.

 Stylish Belts Under Rs. 750!

விலை: 395 - இதனை வாங்க இங்கே சொடுக்கவும்

3. நியான்

உங்கள் பேன்ட் கீழே விழாமல் பிடித்துக் கொள்வதற்காக தான் பெல்ட் என நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா? இந்த பெல்ட்டை மட்டும் அணிந்து பாருங்கள், உங்களை அப்படியே தூக்கி சாப்பிட்டு விடும் பாருங்கள். நியான் பெல்ட் என்றாலே ஃபேஷன் மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாகும். இவற்றை ஆண் மற்றும் பெண் என இருவரும் அணிந்து கொள்ளலாம். இது உங்கள் புதுப்பாணியையும் எதிர்ப்பாரா திருப்பத்தையும் ஏற்படுத்தும்.

 Stylish Belts Under Rs. 750!

விலை: 179 - இதனை வாங்க இங்கே சொடுக்கவும்

4. சிந்தடிக் ஃபேப்ரிக் பெல்ட்

இவை அசலாகவும், சிந்தடிக் ஃபேப்ரிக்காகவும் இருக்கலாம். ஆனால் எப்படி இந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம்? சிந்தடிக் ஃபேப்ரிக் பெல்ட் காஷுவல் தோற்றத்தை அளிக்கும். அதனால் உங்களது லினன் மற்றும் காக்கி ஜோடிகளுக்கு இது அருமையாக பொருந்தும். இதனால் கிடைக்கும் சொகுசு, மற்றும் இதிலிருந்து கசியும் அழகை நீங்கள் கண்டிப்பாக விரும்புவீர்கள். சிந்தடிக் ஃபேப்ரிக் பெல்ட் ஒன்றை அணிந்து பார்த்தால் தான் நாங்கள் சொல்வது உங்களுக்கு புரியும்.

 Stylish Belts Under Rs. 750!

விலை: 650 - இதனை வாங்க இங்கே சொடுக்கவும்

5. பயணம்

பயணம் என்றால் உங்களுக்கு பேரார்வமா? அப்படியானால் உங்களது பணம் மற்றும் ஆவணங்களை, பயணத்திற்கு உதவியாக இருக்கும் இந்த பெல்ட்டுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பெல்ட்டில் மறைக்கப்பட்ட பைகள் இருக்கும். இவை உங்கள் உடைமைகளை நன்றாக மறைத்து வைத்துக் கொள்ளும். ஏதேனும் விடுமுறை அல்லது மலையேறுவதற்கு பயணம் மேற்கொள்ளப் போகிறீர்களா? அப்படியானால் இந்த பெல்ட்டை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

 Stylish Belts Under Rs. 750!

விலை: 750 - இதனை வாங்க இங்கே சொடுக்கவும்

English summary

Budget Diaries: Stylish Belts Under Rs. 750!

Ready to revamp your belt collection but dont know where to look? Fear not! We have some great ideas & tips for you to get some fantastic belts for cheap!
Story first published: Friday, December 4, 2015, 16:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter