25 சர்ஜரிகள் செய்தும் போதாது, இன்னும் வேண்டும் என அடம்பிடிக்கும் மாடல்!

Posted By:
Subscribe to Boldsky

அழகுக்காக இன்று உலகில் பெண்கள் அதிகம் மெனக்கெடுவது இயல்பாகிவிட்டது. இதனால், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவதும், தாய் பாலூட்ட மறுப்பது என இருந்த நிலை மாறி, இன்று அழகை பெரிதாக்கிக் கொள்ள பலரும் பல சர்ஜரிகள் செய்துக் கொள்கிறார்கள்.

மும்பையில் பெண்ணுறுப்பை அழகாக்கிக் கொள்ள தனி கிளினிக் இருக்கிறது என்றால் அதை நீங்கள் நம்புவீர்களா? இருக்கிறது என்பது தான் உண்மை.

அழகின் மீதான ஒரு மோகம் தான் இது. இதோ! அலீரா அவெண்டான்னோ எனும் மாடல் தனது அழகை மெருகேற்றிக்கொள்ள 25 சர்ஜரிகள் செய்த பிறகும், இன்னும் வேண்டும் என அடம்ப்பிடிக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
18 வயதில் இருந்தே...

18 வயதில் இருந்தே...

அலீரா அவெண்டான்னோ முதல் சர்ஜரி செய்துக் கொண்டபோது அவரது வயது 18. அப்போது அவர் தனது மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ள சர்ஜரி செய்துக் கொண்டார். அப்போதிருந்து இவருக்கு சர்ஜரி செய்துக் கொள்வதன் மீது ஒரு மோகம் துவங்கிவிட்டது.

முதல் சர்ஜரி...

முதல் சர்ஜரி...

முதல் அறுவை சிகிச்சை செய்த போது நீங்கள் என்ன மாற்றம் உணர்ந்தீர்கள் என கேட்ட போது, "வாவ்! ஆனால், ஒருசில முறை இம்பிளான்ட் மாற்றிய பிறகு ஏதும் மாறியதாக உணரவில்லை." அதனால், அதிக மாற்றங்கள் கொண்டுவர விரும்புவதாக கூறுகிறார்.

சர்ஜரி மட்டுமல்ல...

சர்ஜரி மட்டுமல்ல...

கச்சிதமான உடல்வாகு பெற இவர் சர்ஜரிகள் மட்டுமின்றி, பெண்கள் அணியும் இறுக்கமான மார்பு கச்சு அணிகிறார். கடந்த 7 வருடமாக நாளுக்கு 23 மணிநேரம் அதை அணிந்தே வாழ்ந்து வருகிறார். இதனால் இவரது இடை அளவு 20 இன்ச் ஆகியுள்ளது.

எண்ணிக்கை...

எண்ணிக்கை...

இதுவரை அலீரா அவெண்டான்னோ 25 சர்ஜரிகள் செய்துள்ளார். இதில் நான்கு மார்பக இம்பிளாண்ட் சர்ஜரி, ஆறு லிபோசக்ஷன், நான்கு பாட்டம் இன்ஜெக்ஷன், மூன்று மூக்கு சர்ஜரிகள். மேலும், அவரது எல்லா பற்களும் ஃபேக், அதாங்க போலியானவை. அனைத்தையும் பிடிங்கிவிட்டு, ஃபேக் டூத் ஃபிக்ஸ் செய்துள்ளார் அலீரா அவெண்டான்னோ.

இவர் செய்துக் கொண்ட சர்ஜரிகள் காரணத்தால், இவரால் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதுக்கும் மேல!

அதுக்கும் மேல!

அனைத்திற்கும் மேல் இவர் தனது நெற்றி நிலையை மாற்றியுள்ளார். இதனால் இவரது புருவங்கள் வில் போல இருக்கும் என மாற்றியுள்ளார். இதற்காக தான் மூக்கு சர்ஜரி, லிபோசக்ஷன் போன்றவை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது இவருக்கு பர்ஃபெக்ட் ஸ்மைல் கொடுத்துள்ளதாக அலீரா அவெண்டான்னோ கூறுகிறார்.

ரசிகர்கள்!

ரசிகர்கள்!

அலீரா அவெண்டான்னோவிற்கு நிறைய ஃபாலோவர்கள் இருக்கிறார்கள் இன்ஸ்டாகிராமில் மட்டுமே 80 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்கின்றனர். எப்போதுமே தனது உடல்வாகு பற்றி பறைசாற்றிக் கொள்வதே இவருக்கு வேலையாகிவிட்டது.

வாழ்க்கை மந்திரம்!

அலீரா அவெண்டான்னோ இவர் கெட்டது மட்டுமின்றி, இவரை போலவே மற்ற பெண்களும் தங்கள் அழகை அதிகரித்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகிறார்.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Model Got 25 Surgeries Done In 9 Years & There Is No Stopping Her!

This Model Got 25 Surgeries Done In 9 Years & There Is No Stopping Her!
Subscribe Newsletter