Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
ராமர் கோயில் வடிவத்தில் வாட்ச்.. விலை எத்தனை லட்சம் தெரியுமா?
அயோத்தியின் ராமர் கோயில் வடிவத்தை கொண்டு ராமர், அனுமன் உருவங்களுடனான வாட்சை சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
இந்திய சில்லறை விற்பனையாளருடன் இணைந்து சுவிஸ் வாட்ச் உற்பத்தியாளர் ராம் ஜனம்பூமி லிமிடெட் எடிஷன் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்..

அதன் விலை ரூ.34 லட்சம் ஆகும்.. இந்த வாட்ச் இரண்டு பதிப்புகளில் வருகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வட இந்திய நகரமான அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை நினைவுபடுத்துகிறது. எதோஸ் மற்றும் ஜேக்கப் & கோ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், எபிக் எக்ஸ் ஸ்கெலிட்டன் தொடரின் அடிப்படையில் இந்த வாட்ச் வெளியிடப்பட்டது.
"இந்த கடிகாரம் இந்தியாவின் ஆழமான கலாச்சார பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் தனித்துவமான வாட்ச்-களில் ஒன்றாக இது இருக்கும்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கடிகாரத்தில் 9 மணிக்கு ராமர் கோயிலைக் காட்டுகிறது, 6 மணிக்கு "ஜெய் ஸ்ரீ ராம்" என்று குறிப்பிடுகிறது. குங்கும கலர் பிரேஸ்லெட்டைக் கொண்ட கடிகாரத்தின் இரண்டு பதிப்புகளிலும் ராமர் மற்றும் ஹனுமான் ஆகியோர் முக்கியமாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த கடிகாரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணம் மிக ஆழமான அடையாளமாக உள்ளது, ஆன்மீகம், தூய்மை மற்றும் பிரார்த்தனையின் சாரத்தை பிரதிபலிக்கிறது.. இது இந்துத்துவத்தின் மதிப்புகளுக்கு மதிப்பு கூட்டுகிறது.. மேலும் இந்த வாட்ச்-ல் உள்ள ஒவ்வொரு விவரமும் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரையறுக்கப்பட்ட பதிப்பு வாட்ச்-களில் 49 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் இதுவரை 35 விற்கப்பட்டுள்ளன. இதில் உள்ள் ஒவ்வொரு விவரமும் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் ஆன்மீக விஷயங்களை உள்ளடக்கும் வகையில் மிக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடிகாரம் ஒரு நேரம் காட்டுவது மட்டுமல்ல, இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக உள்ளது..
பல ஆண்டுகளாக நீதிமன்ற வழக்குகள் மற்றும் பல சர்ச்சைகளுக்குப் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றம் 2019 இல் கோயில் கட்ட உத்தரவிட்டது.. பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் 2020 இல் அடிக்கல்லை நாட்டினார். அதன் பிறது (2024 )இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..



Click it and Unblock the Notifications
