For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரீனாவின் இந்த கேட்சூட்டில் அப்படி என்ன இருக்கு?

செரீனா அணிந்திருக்கும் கேட்சூட் எனப்படும் இந்த முழு கருப்பு நிற உடை வெறும் ஃபேஷன் மட்டுமல்ல. இதற்கு பின்னால்... செரீனா உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார்.

|

கிரிக்கெட்டில் எப்படி விராத் கோலியோ அப்படி தான் டென்னிஸ் உலகில் செரீனா வில்லியம்ஸ். உண்மையில், விராத்துக்கு முன்னோடி செரீனா. இவர் ஒரு ஆக்ரோஷமான டென்னிஸ் வீராங்கனை. கருப்பாக இருப்பதை பலரும் அழகற்றதாக கருதுவார்கள்.

ஆனால், கருப்பும் அழகு, தாங்களும் ஃபேஷன் ஐகானாக ஆகலாம் என்பதற்கு உதாரணம் செரீனா வில்லியம்ஸ். ஒருபுறம் உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழும் செரீனா வில்லியம்ஸ். மறுபுறம் ஃபேஷனிலும் பேரார்வம் கொண்டிருந்தார்.

Serena Williams Black Catsuit Makes All The Mothers Out There!

கர்ப்பமாக இருந்த போதிலும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி பட்டம் வென்றார் செரீனா. அதன் பிறகு டென்னிஸ் உலகில் இருந்து சற்று விலகி இருந்த செரீனா வில்லியம்ஸ் ஏறத்தாழ 15 மாத காலம் கழித்து மீண்டும் களம் கண்டுள்ளார். அவருக்கு குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கி இருக்கும் செரீனாவை காணும் பலருக்கும் அடடே என்ற ஆச்சரியம், சிலருக்கு என்னடா என்ற வியப்பு... அப்படி என்ன செரீனா செய்துவிட்டார் என்று இவர்கள் இப்படி திகைத்துப் போயுள்ளனர்...? இதற்கு காரணம் செரீனா பிரெஞ்சு ஓபனில் விளையாட அணிந்திருந்த உடை தான்.

டென்னிஸ் போலவே ஃபேஷனிலும் ஆர்வம் மிகுந்தவர் செரீனா வில்லியம்ஸ் என்பது அனைவரும் அறிந்தது தான். அதனால் அனைவருக்கும் இந்த திகைப்பு. ஆனால், செரீனா அணிந்திருக்கும் கேட்சூட் எனப்படும் இந்த முழு கருப்பு நிற உடை வெறும் ஃபேஷன் மட்டுமல்ல. இதற்கு பின்னால்... செரீனா உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார்.

ஆம்! பிரசவத்திற்கு பிறகு உடலளவில் பெண்கள் நிறைய மாற்றங்கள் காண்கிறார்கள். சில உடல்நல தாக்கங்கள்.. பிரச்சனைகள் எழும். இந்த பிரச்சனைகள் செரீனா வில்லியம்ஸ்யும் விட்டுவைக்கவில்லை. குழந்தை பிறந்ததில் இருந்து அடிக்கடி செரீனா வில்லியம்ஸ்ற்கு இரத்தக்கட்டு ஏற்படுட்டு கொண்டிருந்திருக்கிறது. இதை தடுக்கவும், இதில் இருந்து வெளிவரவும் தான் செரீனா இப்படியான பிரத்தியேக உடையை உடுத்தி வருகிறார்.

மேலும், இந்த உடையில் தான் ஒரு சூப்பர் ஹீரோ போல உணர்வதாகவும் கூறியிருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். சில பெண்களுக்கு திருமணம் ஆனவுடனேயே அவர்களது கனவுகள் தடைப்பட்டு போய்விடுகிறது. பல பெண்களுக்கு குழந்தை பிறந்தபிறகு கனவுகளை அதற்கடுத்த நிலைக்கு எடுத்து செல்வது தடைப்பட்டு போய்விடுகிறது.

ஆனால், செரீனவோ கர்ப்பமாக இருக்கும் போதே விளையாடி பட்டம் வென்றவர். இப்போது மீண்டும் உலக தாய்மார்களுக்கு தன்னை ஒரு உதாரணமாக முன்னெடுத்து காண்பித்திருக்கிறார். என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கான தீர்வை கண்டறிந்து முன்னேறி செல்லவேண்டும் துவண்டு போய்விட கூடாது என்பதை தனது விடா முயற்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

இந்த கேட்சூட் உடை என்பது டென்னிஸ் உலகிற்கு ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே, 1985ல் அண்ணா ஒயிட் என்பவர் விம்பிள்டன் தொடரின் போது வெள்ளை நிற கேட்சூட் அணிந்து விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது செரீனாவுக்கும் கூட புதியது அல்ல. ஏழு வருடங்களுக்கு முன்னர் 2011ம் வருடமே பிங்க் நிற கேட்சூட் உடையில் செரீனா வில்லியம்ஸ் விளையாடி ஒரு படத்தை வெளியிட்டிருந்தார்.

சிலர் செரீனா தனது ஃபேஷன் பேரார்வத்தால் தான் இப்படியான உடை உடுத்தியிருக்கிறார் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கான தகுந்த தெளிவான பதிலை அளித்து டென்னிஸ் ரசிகர்கள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் பெரும் சபாஷ் பெற்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். நிஜமாகவே இவர் ஒரு வண்டர் வுமன் தான்.

English summary

Serena Williams Black Catsuit Makes All The Mothers Out There!

Serena Williams This Black Cat Suit is Not a Fashion But, it is Also Proud Element For All The Mothers Out There!
Story first published: Wednesday, May 30, 2018, 18:32 [IST]
Desktop Bottom Promotion