ஐ.பி.ல் வி.ஜே அர்ச்சனா விஜயா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - பிகினி போட்டோஷூட்!

Posted By: Staff
Subscribe to Boldsky

அர்ச்சனா விஜயா 1982ல் கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். கல்கட்டா பல்கலைகழகத்தில் இவர் தனது இளங்கலை பட்டதை முடித்தார்.

2004ம் ஆண்டு வரை ஒரு சாதாரண பெண்ணாக, கல்லூரி பயின்ற வந்த அர்ச்சனா கெட் கிளாமர் என்ற மாடல் தேடுதல் வேட்டை ரியாலிட்டி ஷோவில் வென்று ஸ்டார் மாடலாக மாறினார். இவர் சுற்றுலா, கிரிக்கெட், ரியாலிட்டி ஷோ என பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பல ஃபேஷன் டிசைனர்களுக்கு ராம்ப் வாக் மாடலாக சென்றிருக்கிறார். இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தீராஜ் புரி என்பவருடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்தார். பிறகு துபாயில் நிச்சயம் செய்து, 2015ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திடீர் புயல்!

திடீர் புயல்!

அர்ச்சனா விஜயாவின் வாழ்க்கை 2004ம் ஆண்டு வரையிலும் சாதாரன இளம்பெண்ணின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி நகருமோ அப்படியாக தான் இருந்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண் போன்றவராக தான் இருந்தார்.

அதிக கூச்ச சுபவாம், கல்லூரியில் படித்து வந்த பெண். 2004ம் ஆண்டு தான் அர்ச்சனா விஜயாவின் வாழ்வில் அந்த திடீர் புயல் வீசியது.

மாடலிங்!

மாடலிங்!

அந்த காலக்கட்டத்தில் மாடலுக்கான தேடுதல் வேட்டை என்ற ஒரு ரியாலிட்டி ஷோ... என்பது இந்தியாவில் அதுதான் முதல் முறையாக இருந்தது. கெட் கார்ஜியஸ் சீசன் 1ல் பட்டம் வென்றார் அர்ச்சனா. அதன் பிறகு தான் அர்ச்சனா விஜயா ஒரு மாடலாக மாறினார். ரோம் ஃபேஷன் வீக்கில் தோன்றினார்.

அதுவரை அர்ச்சனாவின் வாழ்வில் இல்லாத கிளாமர், புகழ், மேக்கப், அட்டகாசமான போட்டோஷூட்கள் என வாழ்க்கையே மாறியது. அதன் பிறகு என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை என்கிறார் அர்ச்சனா.

பயணங்கள்!

பயணங்கள்!

"என்னுள் நானே அறியாத ஒரு பயணி இருப்பாள் என்று நான் அறியவில்லை. வேலை விஷயமாக பல இடங்களுக்கு நான் பயணிக்க வேண்டி இருந்தது. நான் அதுவரை டிவியில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது, நான் செய்யும் வேலையாக மாறியது. உலகம் முழுவதும் சுவாரஸ்யங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நான் பயணித்தேன். அந்த நினைவுகள் எல்லாம் என் வாழ்வில் வாழ்நாளில் மறக்க முடியாதவை." என்று தனது வாழ்வின் முக்கிய அங்கங்கள் பற்றி கூறுகிறார் அர்ச்சனா.

ஃப்ரீடம் எக்ஸ்பிரஸ்

ஃப்ரீடம் எக்ஸ்பிரஸ்

மாடலிங்கில் இருந்து அர்ச்சனா விஜயாவிற்கு டிவியில் நிகழ்சிகள் தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் இவர் சுற்றுலா நிகழ்ச்சியான ஃப்ரீடம் எக்ஸ்பிரஸ் சீசன் 1 & 2 வை தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சிக்காக இவர் இந்தியா முழுவதும் ரயிலில் பயணித்து வந்தார். இந்தியாவில் கால்தடம் பதியாத இடங்களில் எல்லாம் பயணித்ததாகவும், ஜவான்கள், குஜராத்தில் வாழும் ஆப்ரிக்கா மலைவாழ் மக்கள் என பல அழகான மக்கள், வியக்க வைக்கும் தருணங்களை அந்த நிகழ்ச்சி தனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்கிறார் அர்ச்சனா விஜயா.

நான், நானாக...

நான், நானாக...

அந்த சுற்றலா நிகழ்ச்சி தான் நான் யார், என்னுள் இருக்கும் உண்மையான நபர் யார் என்பதை கண்டறிய ஒரு கருவியாக அமைந்தது. இந்தியாவின் பல்வேறு கோணங்களை அந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை, அவர்கள் வாழ்க்கை சார்ந்து காணும் உத்வேகம் போன்றவை ஒரு பெரிய படிப்பினையாக அமைந்தது. என்று தன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சம்பவமாக அந்த காலக்கட்டத்தை குறிப்பிடுகிறார் அர்ச்சனா விஜயா.

கிரிக்கெட் சுற்றுலா!

கிரிக்கெட் சுற்றுலா!

ஃப்ரீடம் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, நியோ ஸ்போர்ட்ஸ்ன் டூர் டைரி என்றச நிகழ்ச்சியை தொகுத்து வழங்க துவங்கினார் அர்ச்சனா விஜயா. இது இந்திய கிரிக்கெட் அணியுடன் பயணிக்கும் நிகழ்ச்சியாகும். அவர்கள் விளையாட செல்லும் இடங்களில் இருக்கும் பல சுற்றுலா இடங்களை, அங்கு வரும் பார்வையாளர்களை, கிரிக்கெட்டின் பயணத்தை ஒரு ரசிகையாக இவர் தொகுத்து வழங்கி வந்தார்.

லைவ்!

லைவ்!

அதுவரை ரெகார்டு நிகழ்சிகள் செய்து வந்த அர்ச்சனா விஜயாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணி சுற்றுலா நிகழ்ச்சியானது லைவ் நிகழ்சிகள் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இங்கே ரீ-டேக் எடுக்க முடியாது, ரெகார்டு ஆரம்பித்தால் நிறுத்தும் வரை தவறு இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்ற சவால் அர்ச்சனா விஜயாவிற்கு புதியதாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்தது.

தொகுப்பாளினி!

தொகுப்பாளினி!

இப்படியாக டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டே தனத் மாடலிங் வேலைகளையும் செய்து வந்தார் அர்ச்சனா விஜயா. மேலும், பல பிரைவேட் நிகழ்சிகளையும், விழாக்களையும் கூட அர்ச்சனா விஜயா தொகுத்து வளங்கியுள்ளார். ரியாலிட்டி நிகழ்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஐ.பி.எல்

ஐ.பி.எல்

ஹர்ஷா போகலே, சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி என்று கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கியவர்களை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே மந்திரா பேடிக்கு பிறகு, ரசிகர்களை ஈர்த்த ஒரு கிரிக்கெட் தொகுப்பாளினியாக உருவெடுத்தார் அர்ச்சனா விஜயா. இன்னிங்க்ஸ் ப்ரேக்கில் கூட சேனலை மாற்றாமல், இவர் பேசுவதை பார்க்க ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

2011!

2011!

2011ம் ஐபிஎல் நான்காவது சீசனில் அறிமுகமானார் அர்ச்சனா. இதன் பிறகு நிறையவே புகழ் அடைந்தார் என்று குறிப்பிடலாம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகே பயம் இல்லாமல், லைவாக நிகழ்சிகளை தொகுத்து வழங்க துவங்கினேன் என்கிறார் அர்ச்சனா. ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்குவது தனக்கு புதிய வியப்பை, ஆச்சரியத்தை, உற்சாகத்தை அளித்தது என்று கூறியுள்ளார் அர்ச்சனா.

ஆவல்!

ஆவல்!

டிவி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதில், அதன் மூலம் நான் பெரும் வாய்ப்புகளுக்கு என்று நன்றிக்கடன் பெற்றுள்ளேன். பல்வேறு நிகழ்சிகளை நான் தொகுத்து வழங்கியுள்ளேன். அது தான் எனது கால்களுக்கு வலிமை சேர்க்கின்றன.

அதனால் தான் இந்த துறையில் நான் இன்னும் நிற்க இயல்கிறது. ஒவ்வொரு நாளும் நான் புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.

இதுதான், என்னை இன்னும் இந்த துறையில் பயணிக்க தூண்டுகிறது. மேலும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலை ஏற்படுத்துகிறது என்று அர்ச்சனா விஜயா கூறியுள்ளார்.

All Image Credit: archanavijaya

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts and Biography about Indian Model and IPL Anchor Archana Vijaya!

Facts and Biography about Indian Model and IPL Anchor Archana Vijaya!