For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாடல்களிடம் என்ன வித்யாசமாக தெரிகிறது சொல்லுங்களேன்!!!!

|

ஃபேஷன் உலகம் எப்போதும் தன்னகத்தே புதுமைகளை அள்ளி அணைத்திருக்கும். வெளித்தோற்றத்தில் எவ்வித குறைபாடுகளை கூற முடியாதவர்கள் மட்டுமே மாடலாக ஜொலிக்க முடியும் என்றெல்லாம் நாம் கற்பனை செய்து வைத்திருக்கிறோம் அல்லவா... கற்பனை என்பதை விட முழுமையாக நம்பிக் கொண்டும் இருக்கிறோம்.

பொதுவாக தங்களுடைய பொருளை வெளிப்படுத்தும், விளம்பரப்படுத்தும் மாடல்கள் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று விளம்பரதாரர்கள் எதிர்ப்பார்ப்பது நிஜம். எடை,உயரம்,நிறம்,சருமம்,பற்கள்,முடி என வெளியில் தெரிகிற ஒரு இடத்தையும் விடாது வர்ணிக்கும் இன்றைய தினத்தில் தான் இந்த ஆச்சரியமும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த ஃபேஷன் உலகில் பிறரது பார்வைக்கு ஓர் குறையாக தெரிவதை மாற்றி அதையே தன்னுடைய ப்ளஸ்ஸாக நினைத்து மாடலாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அசத்தலான நபர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்லி க்ரஹாம் :

ஆஸ்லி க்ரஹாம் :

ஸ்போர்ட்ஸ் மாடலான இவர் தன் வடிவத்தில் வித்யாசத்தை கொண்டிருக்கிறார். நீண்ட ஒல்லியான கால்கள் என்பதை மாற்றி செல்லுலைட்டுடன் இருக்கும் தன்னுடைய குண்டான தொடைகளுடன் பேஷன் உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பிறரது எதிரப்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் என்னை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்று நினைத்த போதிலிருந்து தான் சந்தோஷமாக உணர்கிறேன் என்கிறார் ஆஷ்லி.

Image Courtesy

எய்மி முல்லின்ஸ் :

எய்மி முல்லின்ஸ் :

பிறக்கும் போதே Fibular hemimelia என்ற குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார் தன்னுடைய ஒரு வயதிற்குள்ளாகவே இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். ஆனாலும் தன்னம்பிக்கையுடன் செயற்கை கால்களை பொறுத்திக் கொண்டு ஓட்டப்பந்தைய வீராங்கனையாகவும், ஃபேஷன் மாடலாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

நாற்பது வயதாகும் எய்மி நம் திறமையை வெளிப்படுத்த அழகும்,வயதும் ஓர் தடையில்லை என்கிறார்.

Image Courtesy

சபினா கர்ல்சான் :

சபினா கர்ல்சான் :

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி இவர். தலைமுடி, முகத்தில் மார்க் என்று பார்க்கவே கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறார். அதை விட முன் இரண்டு பற்களுக்கு நடுவில் இருக்கும் இடைவேளி பார்க்க கொஞ்சம் விசித்திரமாகத்தான் தெரிகிறது.

குழந்தையாக இருந்தபோது மற்றவர்களை விட நான் தனித்திருக்கிறேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை இது தான் என்னுடைய ப்ளஸ் என்று ஏற்றுக் கொண்டு மாடலிங் செய்தேன். மாடலிங் துறையில் நுழைந்த போது எனக்கு நான்கு வயது. குழந்தைப் பருவம் என்பதால் என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்று பலரும் காம்ப்ளிமெண்ட் கொடுக்க ஆரம்பித்தார்கள் என்கிறார்.

Image Courtesy

ஜாக்கி ஓ ஷாகுனெஸ்ஸி :

ஜாக்கி ஓ ஷாகுனெஸ்ஸி :

அமெரிக்க நிறுவனங்களின் விளம்பர மாடல் . கேட் வாக்கில் அசத்தும் ஜாக்கியின் வயது எவ்வளவு தெரியுமா? வயது ஜஸ்ட் 65. எனக்கு இதில் எந்த வித்யாசமும் தெரியவில்லை நான் எனக்குப் பிடித்த வேலையை மனப்பூர்வமாக செய்கிறேன்.

முகத்தில் சுருக்கம் இருக்கிறது, தலைமுடி நிறமாறிவிட்டது, உனக்கு வயதாகிவிட்டது என்று என்னை பார்த்து விமர்சிப்பவர்களிடத்தில் நான் கேட்கிற ஒரே கேள்வி யார் நீ? என்பது தான்.

Image Courtesy

வின்னி ஹார்லோ :

வின்னி ஹார்லோ :

விடிலிகோ எனப்பகிற முகம் மற்றும் உடல் முழுவதும் திட்டு திட்டாக வெள்ளை நிறம் தோன்றும் சரும பாதிப்பு குறைப்பாட்டினைக் கொண்டவர். மாடலிங் துறையில் அசத்தி வரும் இவர், இந்த உலகில் உங்களைக் கொண்டாட யாரும் வர மாட்டார்கள். உங்களை நீங்களே கொண்டாடுங்கள்.

நீங்கள் உங்களை நேசித்தால் பிறரும் நேசிப்பார்கள்.

Image Courtesy

ஜிலியன் மெர்கடோ :

ஜிலியன் மெர்கடோ :

ஜிலியன் வீல் சேர் மாடல். மஸ்குலர் டிஸ்ட்ரபி என்னும் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட இவர் மாடலிங் துறையில் எண்ணற்ற சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். ஏராளமான கேம்பைன்களில் பங்கேற்று அசத்திக் கொண்டிருக்கிறார்.

ஒரே இரவில் எல்லாம் மாறியது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன், உங்களை தட்டியெழுப்ப வேண்டியது உங்களுடைய கடமை. முதலில் பத்திரிகைகளில் வரக்கூடிய மாடல்களைப் பார்த்து அவர்களைப் போல நானில்ல்லையே என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வதை நிறுத்துங்கள்.

அதை விட முக்கியமாக உங்களை விமர்சிக்கும் நபர்களுக்கு பதிலளிப்பதை அவர்கள் சொன்னதை நினைத்து வருத்துவதற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தை நிறுத்துங்கள். உங்களுடைய நேரம் பிறருக்கானதல்ல என்பதை உணருங்கள்.

Image Courtesy

டயாண்ட்ரா ஃப்ராஸ்ட் :

டயாண்ட்ரா ஃப்ராஸ்ட் :

டயாண்ட்ரா என்னும் மாடல் அழகி அல்பினோ எனப்படக்கூடிய ஒரு வகை சரும நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அல்பினிசம் என்னோடுச் சேர்ந்தது. என் அழகை மெருகேற்றக்கூடியதாகத் தான் அதை பார்க்கிறேன்.

Image Courtesy

மோஃபி :

மோஃபி :

அழகு, முகம், திறமை,இளமை எல்லாமே பிறரைப் போன்ற சரியாக கொண்டிருக்கும் இந்த மாடல் அழகிக்கும் பிறக்கும் ஒரே வித்யாசம் கண்கள் தான். மோஃபிக்கு ஓரக்கண் குறைப்பாடு இருக்கிறது.

பல மேகசின்கள் மோஃபியை போட்டிக் போட்டுக் கொண்டு தங்கள் நிறுவனதிற்கான மாடலாக வரும்படி விலை பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான் யதார்த்தம்.

Image Courtesy

கேசி லீக்லர் :

கேசி லீக்லர் :

இவர் ஒரு பெண் ஆனால் மென்ஸ்வியருக்கான மாடல். இவருடைய கன்னம் மட்டும் நீளமாக இருப்பதால் நிறைய ரேசர் விளம்பரங்களுக்கு மாடலாக நடித்துக் கொண்டிருக்கிறார் கேசி.

எதேச்சையாக நண்பர் ஒருவருடன் சென்றிருந்த போது நடத்தப்பட்ட போட்டோசூட்டினால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

Image Courtesy

மிகெல் ரூஃபனெல்லி :

மிகெல் ரூஃபனெல்லி :

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்த இவர் மிகப்பெரிய இடுப்பச் சுற்றளவைக் கொண்டிருக்கும் மாடல் அழகியாக இருக்கிறார்.

இன்றைக்கு தொப்பையை குறைக்க வேண்டும் என்று படாதாபாடு பட்டுக் கொண்டிருக்கும் நபர்களுக்கு மத்தியில் தான் இவரும் இருக்கிறார்.

நான்கு குழந்தைகளின் தாயான இவர் தற்போது ஃபேஷன் துறையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் வாசலில் பிறரைப் போன்று நேராக நுழைய முடியாது, விமானத்தில் இரண்டு டிக்கெட்டுகள் வாங்க வேண்டும்,காரில் பயணிக்க முடியாது, எல்லாவகையான நாற்காலியிலும் உட்கார முடியாது என்பன போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் அதனால் மனம் தளராது தன்னுடைய மைனஸ்களை எல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

Image Courtesy

லியூ எக்ஸியன்பிங் :

லியூ எக்ஸியன்பிங் :

73 வயதான சீனாவைச் சேர்ந்த தாத்தாவான லியு பெண்களுக்கான பேஷன் உடைகளை அணிந்து கேலியாக போஸ் கொடுக்க அதனை அது இணையத்தில் பயங்கர வைரலாய் பரவியது.

தற்போது பெண்களுக்கான மாடலாகி விட்டார் லியூ.

Image Courtesy

ஜியார்ஜியா மே ஜேகர் :

ஜியார்ஜியா மே ஜேகர் :

மிக் ஜேகர் மற்றும் ஜெர்ரி ஹாலிஸின் மகளான ஜியார்ஜியாவின் பற்கள் தான் பிறருக்கு விசித்திரமாக தெரியும். ஒவ்வொரு பல்லும் அளவில் பெரிதாக இருப்பதோடு நடுவில் பற்களுக்கு இடையில் கேப் இருக்கிறது.

மாடல் அழகிகளுக்கான ஃபேஷன் பெர்ஃபெக்‌ஷனை மாற்றி தனக்கு விருப்பமான துறைகளில் சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்.

Image Courtesy

சியோபன் அட்வெல் :

சியோபன் அட்வெல் :

இவர் ஒரு திருநங்கை மாடல். நான் திருநங்கை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு உயிர்,ஒரு மாடல், ஒரு பெண் அதை நினைத்தே நான் பெருமைப்படுகிறேன்.

Image Courtesy

மேட்லின் ஸ்டுவர்ட் :

மேட்லின் ஸ்டுவர்ட் :

டவுன் சிண்ட்ரோம் எனப்படக்கூடிய ஓர் மனநல பாதிப்பு கொண்டவர் மேட்லின் ஸ்டூவர்ட்.

பத்திரிக்கை, கேட்வாக் மற்றும் ஃபேஷன் கேம்பைன்களில் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

Image Courtesy

மெலைன் கேய்டோஸ் :

மெலைன் கேய்டோஸ் :

மெலைன் ectodermal dysplasia எனப்படக்கூடிய ஓர் அரிய வகை ஜெனிட்டிக் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு தலைமுடி மற்றும் புருவங்களில் முடி இருக்காது. இன்றைக்கு மாடல் உலகின் கால் பதித்து தொடர்ந்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார்.

Image Courtesy

ட்ரூ ப்ரஸ்டா :

ட்ரூ ப்ரஸ்டா :

இருபத்தியோரு வயது மாடல் அழகி. ட்வார்ஃபிசம் எனப்படக்கூடிய குறைபாட்டினால் achondroplasia பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் மிகவும் உயரம் குறைவாக இருப்பார்கள்.

ட்ரூ குடும்பத்தினர்களிடையே யாருக்கும் இப்பாதிப்பு இல்லாத நிலையில் ட்ரூவுக்கு மட்டும் இப்பாதிப்பு இருக்கிறது. அதனை நினைத்து சோர்ந்து போகாமல் பேஷன் உலகில் அசத்திக் கொண்டிருக்கிறார்.இவருடைய உயரம் வெறும் 3 அடி நான்கு இன்ச்.

Image Courtesy

நியாகிம் கேட்வெசக் :

நியாகிம் கேட்வெசக் :

தெற்கு சூடானைச் சேர்ந்த மாடல் அழகி. அழகு என்றாலே வெள்ளை நிறம் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மனதில் அவர்களின் எண்ணத்தில் தன் நிறத்தால் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அடர் கருப்பு நிறத்தில் இருக்கும் இவர் பேஷன் உலகின் புதிய ஐகான். இவருக்கு குயின் ஆஃப் டார்க் என்ற பட்டப்பெயரும் இருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: fashion
English summary

Amazing unusual models around the world

Amazing unusual models around the world
Story first published: Wednesday, November 22, 2017, 11:23 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more