Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
தில்வாலே படப்பிடிப்பில் இருந்து சாதாரண உடையில் திரும்பிய கஜோல்!
புகழ் பெற்ற டி.டி.எல்.ஜே படத்தின் நாயகியான கஜோல், வரப்போகும் தில்வாலே படத்திற்காக, தன்னுடன் நடிக்கும் பாலிவுட் படவுலகின் புது வரவான வருண் தவானுடன் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். கஜோலை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்க நாம் எல்லோரும் கூட குதூகலத்தில் உள்ளோம்.
கஜோல் ஒரு சிறந்த நடிகையாக விளங்குவது போக, வியக்கத்தக்க வகையில் ஃபேஷனில் கலக்கிக் கொண்டிருக்கிறார். பயணிக்கும் போது கூட எப்படி அதிநவீன மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் திகழ்பவர் இவர். சமீபத்தில் தில்வாலே படப்பிடிப்பில் இருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த கஜோலை நாம் காண நேரிட்டது. மயக்கும் வகையில் காட்சியளித்தார் அவர். பயணிக்கும் போதான அவரின் தோற்றத்தைப் பற்றி வேகமாக பார்க்கலாமா?
சாம்பல் நிற டாப்ஸ் மற்றும் பழங்குடி டிசைன் பேன்ட்

அடர்ந்த சாம்பல் கலந்த நிறத்திலான டாப்ஸ் அணிந்திருந்த அவருக்கு அது மிகவும் எடுப்பாக இருந்தது. அதற்கு துணையாக, பழங்குடி டிசைன் போட்ட பாலாஸ்ஸோ பேன்ட் ஒன்றை அணிந்திருந்தார். இது துடுக்கான தோற்றத்தை ஏற்படுத்தியது.
கழுத்துத்துண்டு மற்றும் ஏவியேட்டர் சன் க்ளாஸ்
வெளிறிய நிறமுடைய கழுத்துத்துண்டுடன் கருமையான ஏவியேட்டர் கண் கண்ணாடியை அணியும் சரியான வழி நம் கஜோலுக்கு தெரியாதா என்ன? ஏவியேட்டர் கண் கண்ணாடியும், கழுத்துத்துண்டும் மிகச்சிறந்த கலவையாகும்.
பக்கெட் பேக்
மிகப்பெரியான கைப்பையான பக்கெட் பேக் இல்லாமல் உங்கள் பயண தோற்றம் முழுமை அடைவதில்லை. இது கஜோலுக்கு நன்றாக தெரியும். மிகவும் ஸ்டைலாக இருக்கக்கூடிய பழுப்பு நிற பக்கெட் பேக் ஒன்றினை அவர் தூக்கிச் செல்வதை நாங்கள் கண்டோம்.
வெட்ஜெஸ் (செருப்பு)
பயணிக்கும் போது வெட்ஜெஸ் வகையான செருப்பு அணியும் போது கிடைக்கும் சொகுசு வேறு எதிலும் கிடைப்பதில்லை. கஜோலும் அவ்வகையான செருப்பையே அணிந்திருந்தார். ஃபேஷனாக காட்சியளிக்க கூடிய கருப்பு நிற வெட்ஜெஸ் வகை செருப்புகளை அவர் அணிந்திருந்தார்.
கஜோலின் தோற்றம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? கண்டிப்பாக எங்களுக்கு பிடித்துள்ளது. உங்கள் கருத்துகளையும் கூறலாமே.



Click it and Unblock the Notifications





