ஆஸ்கர் 2018 : சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2018 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று தொடங்கியது. உலகில் எவ்வளவு விருதுகள் வழங்கப்பட்டாலும், ஆஸ்கர் விருது தான் இன்று வரை பல திரைப்பிரபலங்களும் பெற நினைக்கும் கௌரவமிக்க ஓர் விருதாக பேசப்படுகிறது.

அகாடமி விருது என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இது 90 ஆவது ஆண்டாகும். கோலாகலமாக ஆரம்பமாகிவிட்ட இந்த ஆஸ்கர் விருது விழாவில் பொதுவாக பலரும் எதிர்பார்க்கும் ஓர் விருது இந்த வருடம் யார் சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுவார், யார் சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவார் என்று தான். இப்போது நாம் பார்க்கப் போவது, ஆஸ்கர் விருதில் சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தான்.

இந்த நடிகைகள் ஒவ்வொருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் போது எப்போதும் அவர்களுக்கு என்ற ஒரு ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்டுகளைக் கொண்டிருப்பார்கள். இங்கு இதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த நடிகைக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மேற்கொண்டு வந்தவர்களின் சிறப்பான தோற்றம் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்கோட் ராபி

மார்கோட் ராபி

2017 ஆம் ஆண்டு வெளியான "I, Tonya" திரைப்படத்திற்காக நடிகை மார்கோட் ராபி ஆஸ்கரில் சிறந்த நடிகை விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார். இந்த நடிகை 2015 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு அட்டகாசமான கருப்பு நிற கவுனில் அழகாக வந்திருந்தார். ராபி செயின்ட் லாரண்ட் ஃபுல் ஸ்லீவ் கவுனில் மிகவும் அற்புதமாக காணப்பட்டார். இதுவே இதுவரை நடந்த ஆஸ்கரில் கலந்து கொள்ளும் போது மேற்கொண்டு வந்த ஓர் அற்புதமான தோற்றம். இந்த உடைக்கு வான் கிளீஃப் மற்றும் அர்பெல்ஸ் நெக்லெஸுடன் வந்தது இவரை இன்னும் சிறப்பாக காட்டியது.

சாய்ரஸ் ரோனன்

சாய்ரஸ் ரோனன்

"Lady Bird" என்னும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சாஸ்ரஸ் ரோனன் சிறந்த நடிகைக்கான பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். க்யூட்டான நடிகையான சாய்ரஸ் நல்ல ஃபேஷன் டேஸ்ட் கொண்டவர். 2016 ஆம் ஆண்டு இவர் அணிந்து வந்த கால்வின் க்ளீனின் மின்னும் மரகத பச்சை நிற கவுன், இதுவரை இவர் மேற்கொண்டு வந்த தோற்றத்திலேயே சிறப்பானதாகும். இந்த கவுன் ரோனனிற்கு மிகவும் கச்சிதமாக இருந்தது. இந்த வருடம் சாய்ரஸ் ரோனன் எம்மாதிரியான தோற்றத்தில் வருகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

சாலி ஹாக்கின்ஸ்

சாலி ஹாக்கின்ஸ்

ஹாலிவுட்டில் மிகவும் பிரமாதமான நடிகைகளுள் ஒருவர் தான் சாலி. இவர் எப்போதுமே சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது தனக்கென்று ஓரு பாணியை வைத்திருப்பார். இவர் "The Shape Of Water" என்னும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடந்த ஆஸ்கர் விருதிலேயே 2014 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவின் போது, சாலி அணிந்து வந்த பழுப்பு நிற கவுன் அழகாக இருந்தது. இவரது இந்த வருட தோற்றத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிரான்செஸ் மெக்டோர்மாண்ட்

பிரான்செஸ் மெக்டோர்மாண்ட்

பிரான்செஸ் ஓரு உன்னதமான நடிகையாவார். இவரது அற்புதமான நடிப்பை பல திரைப்படங்களில் காணலாம். 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பிரிவிற்கு "Three Billboards Outside Ebbing, Missouri" திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த நடிகை 1996 ஆம் ஆண்டு மேற்கொண்டு வந்திருந்த ராயல் நீல நிற கவுன் தான், இதுவரை இவர் மேற்கொண்டு வந்த தோற்றத்திலேயே சிறப்பானதாக இருந்தது. இவர் ஏற்கனவே "Fargo" திரைப்படத்தில் சிறப்பாக நடித்தத்ற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடமும் பெறுவரா என்பதைக் காண்போம்.

மெரில் ஸ்ட்ரீப்

மெரில் ஸ்ட்ரீப்

மெரில் ஸ்ட்ரீப் நிச்சயமாக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு மிகவும் தகுதியான வேட்பாளர்களுள் ஒருவராக உள்ளார். இவர் அகாடமி விருது விழாவில் எப்போதுமே அற்புதமான தோற்றத்தில் வந்து அசத்துவார். கடந்த வருடம் கூட, இவர் ராயல் நீற நிற கவுனில் வந்து, பலரையும் கிறங்கடித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Oscar Looks Of 2018 Academy Awards “Best Actress” Nominees

These are the best looks of all the gorgeous Academy Awards nominees from the Oscar red carpet. Have a look.
Story first published: Monday, March 5, 2018, 9:22 [IST]