Just In
- 5 hrs ago
உங்க திருமண வாழ்க்கை சூப்பராக இருக்கிறது என்பதை உணர்த்தும் உடல் மொழிகள் இதுதானாம்...!
- 6 hrs ago
இந்த 5 ராசிக்காரங்க படுக்கையில் ரொம்ப 'ஆர்வமா' இருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 6 hrs ago
2021 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கண்கவர் ஆடைகளை அணிந்து கலக்கிய பிரபலங்கள்!
- 7 hrs ago
இரண்டாவது குழந்தை எப்போது பெற்றுகொள்வது நல்லது? நீங்க அதற்கு தயாராக இருக்கீங்களானு எப்படி தெரிஞ்சிக்கிறது?
Don't Miss
- News
அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்கிறார் ஸ்டாலின்... சீதாராம் யெச்சூரி பெருமிதம்..!
- Automobiles
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புடவையிலும் கவர்ச்சியை தெறிக்கவிடும் சமந்தா!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா. பொதுவாக இவர் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்பவர் என்பது கொரோனா லாக்டவுன் காலத்தில் இவரது இன்ஸ்டா பக்கத்தைப் பார்த்தாலே தெரியும். அந்த அளவில் அவர் தனது ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஆர்கானிக் உணவுகளை உண்பதில் இருந்து, யோகா பயிற்சிகளை செய்வது வரை அனைத்தையும் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் தானோ என்னவோ இவர் இன்னும் சிக்கென்று அழகிய உடலமைப்புடன் உள்ளார்.
அதிலும் திருமணத்திற்கு பின் சமந்தா அக்கினேனியின் அழகு மெருகேறிக் கொண்டிருக்கிறது எனலாம். பொதுவாக இவருக்கு எந்த மாதிரியான உடையும் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக சமீப காலமாக இவர் அணிந்த சில புடவைகள் இவருக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுத்து, இவரது அழகை மேலும் அதிகரித்துக் காட்டியது. கீழே நடிகை சமந்தாவை படு செக்ஸியாக காட்டிய சில அசத்தலான புடவைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கோல்டன் புடவை
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது, சமந்தா அக்கினேனி குட் எர்த் என்ற லேபிளில் இருந்து கோல்டன் நில புடவையைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். இந்த புடவையானது கையால் எம்பிராய்டரி செய்யப்பட்ட வடிவங்களையும், ப்ரௌன் நிற பார்டரையும் கொண்டது. இந்த புடவையை இவர் அணிந்து வந்த விதம் மற்றும் இந்த புடவைக்கு அணிந்து வந்திருந்த ஜாக்கெட் இவரை அற்புதமாக காட்டியது. மேலும் இந்த புடவைக்கு இவர் சில்வர் நிற காதணியையும், முத்துக்கள் பதிக்கப்பட்ட மல்டி லேயர் நெக்லேஸையும் அணிந்திருந்தார். அதோடு இந்த புடவைக்கு கொண்டை போட்டு, போல்ட்டான தோற்றத்தைக் கொடுக்கும் படியான மேக்கப்பையும் போட்டிருந்தது, இவரை அழகாக காட்டியது.

பிரிண்ட்டட் புடவை
ஜானு என்ற தனது திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியின் போது, சமந்தா அக்கினேனி டிசைனர் ஊர்வசி சேத்தி வடிவமைத்த பிச்சிகா லேபிளில் இருந்து வெளிரிய பிங்க் நிற புடவையை அணிந்திருந்தார். இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், இந்த புடவையின் மேல் ஜானு என்னும் அவரது திரைப்படத்தின் பெயர் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. இந்த அழகிய புடவைக்கு இவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் ஹால்டர் நெக் மேட்சிங் ஜாக்கெட், அவரை செக்ஸியாக வெளிக்காட்டியது. மேலும் இந்த புடவைக்கு பொருத்தமாக இவர் போனிடைல் ஹேர் ஸ்டைல் மற்றும் பிங்க் ஷேடு மேக்கப்பை போட்டிருந்தார். இது இவரை மிகவும் அழகாக வெளிக்காட்டியது.

கருப்பு நிற லெனின் புடவை
இதுவும் ஜானு திரைப்படத்தை விளம்பரப்படுத்த சமந்தா அக்கினேனி டிசைனர் அனாவிலா வடிவமைத்த கருப்பு நிற லெனின் புடவையை அணிந்திருந்தார். இந்த ப்ளைன் கருப்பு நிற புடவை வெள்ளை நிற சிறிய பார்டர் கொண்டதுடன், இந்த புடவையை இவர் அணிந்திருந்த விதம் அற்புதமாக இருந்தது. முக்கியமாக இந்த புடவைக்கு வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட V-வடிவ நெக்லைன் கொண்ட ஜாக்கெட் அணிந்திருந்தது, இந்த புடவையின் அழகை இன்னும் மேம்படுத்திக் காட்டியது. ஆபரணங்கள் பற்றி கூற வேண்டுமானால், இவர் லாரா மொராகியாவின் காதணிகளை அணிந்திருந்தார்.

ஆர்கன்சா புடவை
இது சமந்தா அக்கினேனி இரட்டை நிறங்களான ராணி பிங்க் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த ஆர்கன்சா புடவையை அணிந்திருந்த போது எடுத்தது. சமந்தா அணிந்துள்ள இந்த புடவையானது நுட்பமான அழகிய பூ வடிவங்களைக் கொண்டது. இந்த புடவையை இவர் அணிந்திருந்த ஸ்டைல் மற்றும் இந்த புடவைக்கான ஜாக்கெட் போன்றவை இவரை கவர்ச்சியாக காட்சியது. முக்கியமாக இந்த புடவைக்கு இவர் பிங்க் நிற கற்கள் பதிக்கப்பட்ட அம்ரபாலி சோக்கர் அணிந்திருந்தார்.

பேபி பிங்க் புடவை
இது சமந்தா போட்டோசூட் ஒன்றிற்கு கிருஷா பஜாஜ் சவேரி என்ற லேபிளில் இருந்து பேபி பிங்க் நிற புடவை அணிந்திருந்த போது எடுத்தது. சமந்தா அக்கினேனி அணிந்திருந்த இந்த புடவையானது எம்பிராய்டரி செய்யப்பட்டது மற்றும் இதை அவர் நிவி ஸ்டைலில் அணிந்திருந்தார். இந்த புடவைக்கு இவர் அணிந்திருந்த முழு கை ஜாக்கெட் அற்புதமாக இருந்ததுடன், கவர்ச்சிகரமான தோற்றத்தையும் கொடுத்தது. அதிலும் இந்த புடவைக்கு இவர் மேற்கொண்டிருந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் இவரது அழகை மேலும் அதிகரித்துக் காட்டியது எனலாம்.