Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
இதுவரை கோல்டன் நிற கவுனில் படு கிளாமராக வந்த பிரபலங்கள்!
கோல்டன் நிற கவுன்கள் மற்றும் உடைகளை பல வருடங்களாக சிவப்பு கம்பள விழாக்களில் கண்டிருப்போம். இப்போது இதுநாள் வரை சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் அணிந்து வந்த சில கோல்டன் நிற உடைகளைக் காண்போம்.
எப்போதும் போராடடிக்காத, ஒரு ராயல் லுக் கொடுக்கும் ஒரு கிளாமரான நிறம் என்றால் அது கோல்டன் நிறம். பல சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் பலர் ஒரு ராயல் லுக் மற்றும் கிளாமரான லுக்கைக் கொடுப்பதற்கு கோல்டன் நிற உடைகளையே தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்கள். அப்படிப்பட்ட கோல்டன் நிறம் பாலிவுட்டில் மட்டுமின்றி, ஹாலிவுட் பிரபலங்களுக்கும் பிடித்தமான நிறம் என்று கூட கூறலாம்.

இந்த கோல்டன் நிற கவுன்கள் மற்றும் உடைகளை பல வருடங்களாக சிவப்பு கம்பள விழாக்களில் கண்டிருப்போம். இப்போது இதுநாள் வரை சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் அணிந்து வந்த சில கோல்டன் நிற உடைகளைக் காண்போம். இந்த கோல்டன் நிற உடைகள் பிரபலங்களின் தோற்றத்தை மேம்படுத்தி காட்டியதோடு, அதில் சில அவர்களது மறக்க முடியாத தோற்றங்களுள் ஒன்றாகவும் உள்ளது.

பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்
கோல்டன் குளோப் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மின்னும் கோல்டன் நிற ரால்ப் லாரன் கவுன் அணிந்து மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தார். மிகவும் லோ நெக் கொண்ட இந்த உடைக்கு பிரியங்கா சோப்ரா பர்கண்டி நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தது, கூடுதல் அழகைக் கொடுத்தன.

தீபிகா படுகோனே
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான தீபிகா படுகோனே, ஹாலிவுட் திரைப்படமான XXX: The Return of Xander Cage திரைப்படத்தின் ப்ரீமியரின் போது, ஃபுல் ஸ்லீவ் மற்றும் மிகவும் லோ நெக் கொண்ட கோல்டன் நிற கவுன் அணிந்து வந்திருந்தார். தீபிகா அணிந்து வந்த இந்த உடை பலரால் அதிகம் பேசப்பட்டது.

தாரா சுத்தாரியா
SOTY 2 திரைப்படத்தின் நடிகையான தாரா கோல்டன் நிற சாந்தனு மற்றும் நிகில் கவுனில் வந்து அதிர்ச்சியளித்தார். இந்த கவுனில் தாரா ஒரு டிஸ்னி படத்தில் வரும் அழகான தேவதை போன்று காட்சியளித்தார்.

கிருதி சனோன்
இந்தியாவில் நடந்த ஒரு விருது விழாவிற்காக கிருதி சனோன் கோல்டன் நிற ராபர்டோ காவல்லி கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த சிக்கலான தங்க எம்பிராய்டரி கொண்ட கவுனிற்கு கிருதி அழகிய காதணியை மட்டும் அணிந்து க்யூட்டாக இருந்தார்.

சோனம் கபூர்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கேன்ஸ் விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, சோனம் கபூர் கோல்டன் நிற எலிசாப் கவுன் அணிந்து சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை போட்டார். சோனம் கபூர் அணிந்து வந்த கவுன் இனிமையான இதய வடிவ நெக்லைன் கொண்டதோடு, இடுப்பில் லெதர் பெல்ட் அணிந்திருந்தார். கூடுதலாக, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டிருந்தது தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்டியது.

கெய்லி ஜென்னர்
இது ஜஸ்டின் பீபர் மற்றும் ஹெய்லி பீபரின் திருமண விழாவில் கலந்து கொண்ட போது, மங்கோலிய அழகி கெய்லி ஜென்னர் ஒற்றை தோள்பட்டை கொண்ட கட்-அவுட் கோல்டன் கவுன் அணிந்து வந்திருந்த போது எடுத்தது.

டெய்லர் ஸ்விப்ட்
ஹாலிவுட் நடிகையான டெய்லர் ஸ்விப்ட் AMA சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது மின்னும் கோல்டன் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த கவுனிற்கு கழுத்தை ஒட்டி போனிடைல் போட்டு மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அழகிய தோற்றத்தைக் கொடுத்தது.

செலினா கோம்ஸ்
வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டியின் போது, செலினா அனைவரது பார்வையையும் கவரும் வண்ணம் ஹால்டர் நெக் கொண்ட எமிலியோ புச்சி கிரியேஷன் உடையை அணிந்திருந்தார். இந்த உடை மிகவும் லோ நெக் வேறு கொண்டிருந்தது. இந்த ஷீர் மெட்டீரியல் உடை அவரது அழகிய கால்களை பளிச்சென்று காட்டியதுடன், அவரது பழுப்பு நிற சருமத்தின் அழகை மேம்படுத்திக் காட்டியது.
உங்களுக்கு இவர்களுள் யாருடைய லுக் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
