திருமண ஃபேஷன்: ஹம் ஆப் கே ஹை கோன் ஸ்பெஷல்

By: Ramesh Kumar Meyyazhagan
Subscribe to Boldsky

ஹம் ஆப் கே ஹை கோன்? ஆம்,நாங்கள் உங்களுக்குச் சிறந்த ஃபேஷன் மற்றும் ட்ரென்ட் தொடர்பான செய்திகள், குறிப்புகளை உடனுக்குடன் கொண்டுவந்து சேர்ப்பதை எங்கள் கடமையாகக் கொண்டிருக்கிறோம். 90-களில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற, "ஹம் ஆப் கே ஹை கோன்" திரைப்படம் முன்னிறுத்தி பிரபலப்படுத்திய ஃபேஷன் பற்றிப் பேசப் போகிறோம்.

"ஹம் ஆப் கே ஹை கோன்", ஒரு வழக்கமான திரைப்படத்தைப் போல இல்லாமல், வசூலில் நிகரற்ற சாதனை புரிந்து, ஒரு கலாச்சாரம் சார்ந்த புரட்சியை ஏற்படுத்தி, நமது திருமண உடையலங்காரங்களில் அதுவரை இருந்த வழக்கங்களை உடைத்துப் பெரிய மாற்றங்களை உண்டாக்கியது. திருமண சீசன் களைகட்டும் இந்த நேரத்தில், 90-களில் இளைஞர்களாக இருந்தவர்கள் அனைவரையும் வசீகரித்த இந்த ஃபேஷன் திரைப்படத்தைப் பற்றிய சில மலரும் நினைவுகள், இதோ உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பளீர் பச்சை லெஹங்கா:

பளீர் பச்சை லெஹங்கா:

நிஷாவின் அந்தப் பச்சை லெஹங்காவை மறக்க முடியுமா? கழுத்தைச் சுற்றிய எம்ப்ராய்டரி, முழுக்கைகள் கொண்ட டாப்ஸ், பச்சைக் குட்டைப் பாவாடை மற்றும் துப்பட்டா... ஆஹா எத்தனை அழகு! அந்தப் படத்தில் வரும், 'லெஹங்காவும் துப்பட்டாவும் அணிந்த மணமகளின் சகோதரியே' என்ற பாடல் அந்த நாட்களில் திருமணங்களில் ஏற்படுத்திய ஃபேஷன் புரட்சியை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

மயக்கும் மஞ்சள் புடவை:

மயக்கும் மஞ்சள் புடவை:

அந்த நாள் காதல் மன்னர்களான இளைஞர்கள், தங்கள் காதலிகளைக் கனவில் கண்ட போதெல்லாம் அவர்கள் "ஹம் ஆப் கே ஹை கோன்" நாயகியைப் போல மஞ்சள் புடவை உடுத்திய படிதான் தரிசனம் தந்தார்கள். நாயகன் பிரேம் தன் கனவில் காதலியை மஞ்சள் புடவையில் கற்பனை செய்து பாடி ஆடினாலும் பெண்களுக்கான அவனுடைய சிறப்பான ஃபேஷன் தேர்வு ஆச்சரியமளிக்கிறது அல்லவா?

உற்சாகமளிக்கும் ஊதா புடவை:

உற்சாகமளிக்கும் ஊதா புடவை:

'தேரா தேவார் தீவானா' பாடல் பிரபலமடைந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள்: மாதுரி தீட்சித்தின் பின்புறத்தில் பிரேம் ஒரு பூவைக் கொண்டு தட்டுவதும், மாதுரி அணிந்து கொண்டு வரும் அந்த ஊதாப் புடவையும் தான். அந்தக் காலங்களில், அந்தப் புடவையைப் பற்றிப் பேசாத வாய்களும் இல்லை, அதை அணிய விரும்பாத பெண்களும் இல்லை.

பளபளக்கும் பச்சைப் புடவை:

பளபளக்கும் பச்சைப் புடவை:

காதலர்களின் கற்பனைக்கு இது இன்னொரு பரிமாணத்தை அளித்தது. இந்தப் புடவை படத்தின் நிஜ நிகழ்வுகளில் இடம் பெறாமல் பிரேமின் கற்பனைக் காட்சிகளில் மட்டும் நிஷா அணிந்து வருவதால் இது ஒரு கனவுப் புடவையாகப் பிரபலமடைந்தது. பிரேமின் கற்பனை அபாரம் என்று படம் பார்க்கும் நம்மை நினைக்க வைக்கிறது இந்தப் புடவையின் அழகு.

அற்புதமான திருமண உடைகள்

அற்புதமான திருமண உடைகள்

"ஹம் ஆப் கே ஹை கோன்" திரைப்படம் அறிமுகப்படுத்திய புகழ் பெற்ற அற்புதமான திருமண உடைகள் இவைதான். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் நீங்களோ உங்களைச் சார்ந்தவர்களோ இந்த உடைகளை நிச்சயம் அணிந்திருப்பார்கள். உங்கள் வீட்டில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு என்ன உடை உடுத்துவது என்று தீவிரமாக யோசிக்கிறீர்களா? இந்தப் படத்தை ஒரு முறை பாருங்கள்! உங்கள் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் சிறகு முளைக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shaadi Fashion Tips From HUm Apke Hai Kaun

Shaadi In Hum Apke Hai Kaun Style
Subscribe Newsletter