Latest Updates
-
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன?
நீல நிற புடவை போட்டோவை போட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் பார்வதி நாயர்!
சமீபத்தில் நடிகை பார்வதி நாயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராயல் நீல நிற புடவை ஒன்றில் பலவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டதும், பலருக்கும் வீட்டிலேயே இருந்து போர் அடித்திருக்கும். ஆனால் என்ன தான் போர் அடித்தாலும், அதைப் போக்கும் வண்ணம் பல நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வந்தனர்.

அப்படி சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி போட்டோக்களை போட்டு ரசிகர்களை தன் அழகில் மயங்க வைத்தவர் தான் பார்வதி நாயர். மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இவர் தமிழிலும் நடித்துள்ளார். இவர் அவ்வப்போது பல கவர்ச்சிகரமான போட்டோக்களை எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருவார். அப்படி தான் சமீபத்தில் ராயல் நீல நிற புடவை ஒன்றில் பலவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருந்தார்.
இவர் அணிந்திருந்த நீல நிற புடவை இவருக்கு அழகிய தோற்றத்தைக் கொடுத்ததோடு, அவரை படு கவர்ச்சியாகவும் காட்டியது. கீழே நீல நிற புடவையில் பார்வதி நாயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நீல நிற புடவை
இது தான் சமூக வலைத்தள பக்கத்தில், நடிகை பார்வதி நாயர் ஸ்வப்னா ரெட்டியின் ஸ்வாத் பிராண்டில் இருந்து அடர் நீல நிற புடவை அணிந்து வெளியிட்ட போட்டோ. இந்த ப்ளைன் புடவை மெல்லிய எம்பிராய்டரி பார்டரைக் கொண்டிருந்ததுடன், அவரை அட்டகாசமாக காட்டியது.

எம்பிராய்டரி ஜாக்கெட்
அடர் நீல நிற ப்ளைன் புடவைக்கு பார்வதி நாயர் அணிந்திருந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட ஜாக்கெட் அவரது தோற்றத்தை இன்னும் அழகாக வெளிப்படுத்தியது. முக்கியமாக புடவையை அணிந்திருந்த விதம் அவரை படு கவர்ச்சியாக வெளிக்காட்டியது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்
பார்வதி நாயர் இந்த நீல நிற புடவைக்கு பொருத்தமாக கண்களை அழகாக காட்டும் வண்ணம் ஐ-மேக்கப் போட்டிருந்ததுடன், உதடுகளுக்கு வெளிரிய சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தார். மேலும் ஹேர் ஸ்டைல் என்று வரும் போது, உடைக்கு பொருத்தமாக கொண்டை போட்டிருந்தது அவரை இன்னும் அற்புதமாக காட்டியது.

ஆபரணங்கள்
ஆபரணங்களைப் பற்றி பேசுவதானால், இவர் கழுத்திற்கு முத்து மற்றும் சபையர் பதிக்கப்பட்ட சோக்கர் மற்றும் காதுகளுக்கு கோல்டன் ஜமிக்கிகளை அணிந்திருந்தார். அதோடு கால்களில் கோல்டன் நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

ஓணம் லுக்
இது சமீபத்தில் ஓணம் பண்டிகையன்று பாரம்பரிய கேரள புடவையை அணிந்து எடுக்கப்பட்ட சில பார்வதி நாயர் போட்டோக்கள். இந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications