தமன்னா இந்த புடவை அணிந்து வந்து தான் ஷூ அடி வாங்குனாரு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ஹைதராபத்தில் மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நகைக்கடையைத் திறந்து வைப்பதற்காக மிகவும் பிரபலமான தெலுங்கு நடிகையான தமன்னா வந்திருந்தார். தமன்னாவின் வருகையால் அந்த கடையைச் சுற்றி மக்கள் கூட்டம் திரண்டது.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. பால் போன்ற நிறம் கொண்ட இவருக்கு மேக்கப் அதிகம் போட வேண்டிய அவசியமே இருக்காது. இவரது திரைப்படங்கள் எப்போதாவது ஒன்று வந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம் பெறும் வகையில் இருக்கும்.

அவ்வளவு பிரபலமான நடிகை நகைக்கடை திறப்பு விழாவிற்கு அற்புதமான புடவை அணிந்து, பாரம்பரிய தோற்றத்தில் அம்சமாக வந்திருந்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராதவிதமாக தமன்னாவின் ரசிகர் தான் அணிந்திருந்த ஷூவை தமன்னாவின் மீது வீசியது பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இங்கு நடிகை தமன்னா ஹைதராபாத்தில் உள்ள மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வருண் பால் கவுச்சர்

வருண் பால் கவுச்சர்

நடிகை தமன்னா ஹைதராபாத்தில் நடந்த மலபார் தங்க மற்றும் வைர நகைக்கடை திறப்பு விழாவிற்கு டிசைனரான வருண் பால் அவர்களின் கலெக்ஷன்களில் ஒன்றான சிறிய பார்டர் கொண்ட அழகிய பாஸ்டர் பீச் நிற புடவை அணிந்து வந்திருந்தார்.

புடவை பிரிண்ட்

புடவை பிரிண்ட்

தமன்னா அணிந்து வந்த பீச் நிற புடவையின் உடல் முழுவதும் மோதிஃப் பிரிண்ட்டுகள் கொண்டிருந்ததோடு, அந்த புடவையை தமன்னா அணிந்து வந்த விதம், அவரை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டியது எனலாம். மேலும் தமன்னா இந்த புடவைக்கு அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அவரை சற்று கவர்ச்சியாகவும் காட்டியது.

ஆபரணங்கள் மற்றும் மேக்கப்

ஆபரணங்கள் மற்றும் மேக்கப்

நடிகை தமன்னா இந்த புடவைக்கு கழுத்தில் கற்கள் பதிக்கப்பட்ட அழகிய நெக்லேஸ் மற்றும் காதுகளுக்கு பெரிய ஜிமிக்கி அணிந்து, கைகளுக்கு வளையல் ஏதும் அணியாமல் இருந்தார். மேலும் தமன்னா மேக்கப் அதிகம் போடாமல், சிம்பிளாக டச்சப் மட்டும் செய்து கொண்டு, சிறியளவிலான பொட்டு வைத்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

முக்கியமாக தமன்னா இந்த பீச் நிற பிரிண்ட்டட் புடவைக்கு மேற்கொண்டிருந்த ஹேர் ஸ்டைல் அவரை அழகாக காட்டியது. தமன்னா நேர் உச்சி எடுத்து கொண்டை போட்டதுடன், கொண்டையைச் சுற்றி மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு வந்தது, மங்களகரமான தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man Threw A Shoe At Tamannaah Bhatia While She Was Elegantly Decked Up In Sari

Tamannaah was elegantly dressed for a store opening where a man threw shoe at her. Have a look.
Story first published: Tuesday, January 30, 2018, 18:22 [IST]
Subscribe Newsletter