Latest Updates
-
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம் -
மும்பை ஸ்டைல் சன்னா மசாலா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் கங்கனா ரனாவத்!
ஜெயலலிதா அவர்களின் 72 ஆவது பிறந்தநாளான இன்று நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா அவர்களை நினைவுகூறும் வகையில், தலைவி படத்தின் மற்றொரு போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரான ஜெயலலிதா அவர்கள் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். இந்த வருடம் ஜெயலலிதா அவர்களின் 72 ஆவது பிறந்தநாள். தமிழகத்தின் இரும்பு பெண்மணி, புரட்சி தலைவி, இதய தெய்வம், அம்மா என்று பல்வேறு பெயர்களில் அன்போடு அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா. இவரின் வாழ்க்கை வரலாறு வெப் சீரியஸாகவும், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் 'குயின்' என்னும் வெப் சீரியஸை இயக்குநர் கவுதம் மேனன் நடிகை ரம்யா கிருஷ்ணனை ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் வைத்து எடுக்கிறார். 'தலைவி' என்னும் திரைப்படத்தை இயக்குனர் விஜய் எடுக்கிறார். இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், ஜெயலலிதா அவர்களின் 72 ஆவது பிறந்தநாளான இன்று நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா அவர்களை நினைவுகூறும் வகையில், தலைவி படத்தின் மற்றொரு போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் அது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

ஜெயலலிதாவைப் போன்ற தோற்றம்
இது தான் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளன்று கங்கனா ரனாவத் வெளியிட்ட போட்டோ. இந்த போட்டோவைப் பார்க்கும் போது, அச்சு அசலாக ஜெயலலிதா போன்றே கங்கனா காட்சியளிப்பது, பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது எனலாம்.

வெள்ளை நிற புடவை
ஜெயலலிதா அவர்கள் கட்சியின் ஆரம்ப காலத்தில் கட்சிக் கொடியை பார்டராகக் கொண்ட வெள்ளை நிறப் புடவையை அணிந்திருந்தார். அதே தோற்றத்தில் கங்கனாவும் கருப்பு, வெள்ளை, சிவப்பு பார்டர் கொண்ட வெள்ளை நிற புடவையை அணிந்திருந்தார்.

மேக்கப் மற்றும் இதர ஸ்டைல்
மேலும் கங்கனா இந்த வெள்ளை நிற புடவைக்கு ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட ஸ்டைலை அப்படியே பின்பற்றியிருந்ததார். குறிப்பாக வைர கற்கள் பதிக்கப்பட்ட காதணியை அணிந்திருந்தது, அப்படியே ஜெயலலிதாவை பிரதிபலித்தது.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளன்று இந்த போட்டோவை கங்கனா ரனாவத் வெளியிட்டது, பலருக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது எனலாம்.



Click it and Unblock the Notifications
