Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை விற்பதில் கவனமாக முடிவெடுக்கவும்...
- 10 hrs ago
உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த உணவுகள சரியா சாப்பிட்டு வந்தா இனி முடி கொட்டாதாம்!
- 11 hrs ago
இந்த சத்து நிறைந்த உணவுகள தினமும் சாப்பிட்டீங்கனா...உங்க நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்!
- 12 hrs ago
கேரளா ஸ்டைல் சிக்கன் கிரேவி
Don't Miss
- News
"நீங்க இப்படி செய்யலாமா.. கொஞ்சம் யோசிங்க பிளீஸ்!" இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்த சர்வதேச நிதியம்
- Automobiles
சொன்னதை செஞ்சுட்டாங்க... டாடா நிறுவனம் செய்த நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
- Sports
வழுக்கி விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. முதுகில் பலத்த அடியா.. குஜராத் vs ராஜஸ்தான் போட்டி பரபர சம்பவம்!!
- Movies
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
- Finance
உணவு, பிட்காயின், தங்கம், வெள்ளியை வாங்கி வைங்க.. ஏன்.. பிரபல எழுத்தாளர் சொல்லும் காரணத்தை பாருங்க!
- Technology
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளிவரவிருக்கும் 'தலைவி' திரைப்படத்தை விளம்பரப்படுத்த பல அழகான புடவைகளில் கலக்கும் கங்கனா ரனாவத்!
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் மறைந்த நடிகையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட திரைப்படமான 'தலைவி' என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இத்திரைப்படமானது செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கிறது.
இத்திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல அழகிய புடவையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது ஒவ்வொரு தோற்றமும் தலைவிப் படத்தை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றன. இன்று ஐதராபாத்தில் தலைவி திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கூட கங்கனா ரனாவத் அற்புதமான புடவை அணிந்து வந்திருந்தார். கீழே தலைவி திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு கங்கனா அணிந்திருந்த புடவைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கங்கனாவின் ஆரஞ்சு பிங்க் புடவை
சென்னையில் உள்ள புரட்சி தலைவி அம்மாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த போது கங்கனா ரனாவத் ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தார். இந்த புடவைக்கு மேட்ச்சாக ஆரஞ்சு நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அதோடு இதற்கு இவர் அணிந்து வந்த கற்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் மற்றும் காதணி தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. இந்த புடவைக்கு இவர் அதிகமாக மேக்கப் போடாமல், உதட்டிற்கு பிங்க் நிற லிப் ஷேடு மற்றும் கன்னங்களில் பிங்க் பிளஷ் மற்றும் கண்களுக்கு மை போட்டு வந்திருந்தார். முக்கியமாக இந்த புடவைக்கு இவர் கொண்டை போட்டு மல்லிகைப் பூ வைத்தது, இவரது தோற்றத்தை முழுமையாக்கியது.
Image Courtesy: Instagram

கங்கனாவின் சில்வர் நிற புடவை
இது இன்ஸ்டாவில் கங்கனா வெளியிட்ட மற்றொரு போட்டோ. இதில் கங்கனா தலைவி படத்தில் புரட்சித் தலைவியை பிரதிபலிக்கும் வகையில் சில்வர் நிற புடவை அணிந்து, அதற்கு மேட்ச்சாக ஹைஃப் ஸ்லீவ் ஜாக்கெட் போட்டிருந்தார். இந்த புடவைக்கு இவர் அட்டகாசமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் மேற்கொண்டிருந்தார். அதிலும் இந்த புடவைக்கு இவர் எமரால்டு, தங்கம் மற்றும் முத்துக்கள் கொண்ட நெக்லேஸ் மற்றும் காதணியை போட்டிருந்தது, இவரது அழகை அதிகரித்து காட்டியது என்றே கூறலாம். இந்த தோற்றத்தில் ஒரு ஹைலைட் என்றால், அது சைடு ஸ்வெப்ட் ஹை ஹேர் பன் தான்.
Image Courtesy: Instagram

கங்கனாவின் பச்சை நிற புடவை
இது இன்று நடைபெற்ற தலைவி திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழாவின் போது, கங்கனா ரனாவத் அணிந்திருந்த புடவை. கங்கனா அணிந்திருந்த புடவை டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது. இந்த புடவையை கங்கனா மிகவும் அற்புதமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலால் சிறப்பாக வெளிக்காட்டினார். மேலும் இவர் அணிந்து வந்த ஆபரணங்கள் சப்யசாச்சி பிராண்டு நகைகள். மேக்கப் என்று பார்த்தால், இவர் லைட்-பிங்க் லிப் ஷேடு, பிங்க் பிளஷ் மற்றும் கண்களுக்கு மை என்று அளவான மேக்கப்பை போட்டிருந்தார். குறிப்பாக இவர் மேற்கொண்டிருந்த ஹேர் ஸ்டைல் இவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக காட்டியது.
இப்போது ஹைதராபாத்தில் நடந்த விழாவில் எடுத்த வேறு சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு...
Image Courtesy: Instagram

நடிகர் அரவிந்து சாமியுடன் கங்கனா
இது ஹைதராபாத்தில் நடந்த தலைவி திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் நடிகர் அரவிந்து சாமியுடன் கங்கனா ரனாவத் சேர்ந்து எடுத்த போட்டோ.

படக்குழுவினருடன் கங்கனா
இது விழாவின் போது படக்குழுவினருடன் சேர்ந்து கங்கனா ரனாவத் சேர்ந்து எடுத்த போட்டோ.