'போக்கிரி ராஜா' பட பாடல் வெளியீட்டிற்கு சிவப்பு நிற கவுனில் பளிச்சென்று வந்த ஹன்சிகா!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் நடித்திருக்கும் 'போக்கிரி ராஜா' என்னும் திரைப்படத்தில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியீட்டு விழாவிற்கு நடிகை ஹன்சிகா அற்புதமான கவுனில் வந்திருந்தார்.

எப்போதுமே நடிகைகள் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும் பிரபல டிசைனர்கள் வடிவமைத்த அழகான உடைகளை உடுத்தி வருவார்கள். அந்த வகையில் நடிகை ஹன்சிகாவும் பிரபல டிசைனரான நேகா தனேஜா வடிமைத்த ஸ்லீவ்லெஸ் கொண்ட சிவப்பு நிற கவுனை அணிந்து வந்திருந்தார்.

இங்கு போக்கிரி ராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு நடிகை ஹன்சிகா மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேகா தனேஜா கவுன்

நேகா தனேஜா கவுன்

ஹன்சிகா போக்கிரி ராஜா பாடல் வெளியீட்டிற்கு, இந்த சிவப்பு நிற நேகா தனேஜா ஸ்லீவ்லெஸ் கவுனைத் தான் அணிந்து வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

ஹன்சிகா இந்த சிவப்பு நிற கவுனில் ஏற்கனவே பளிச்சென்று காணப்படுவதால், மேக்கப்பை அளவாக போட்டு வந்திருந்தார். இதனால் அவரது தோற்றம் நன்றாக இருந்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

இது தான் சிவப்பு நிற கவுனில் க்யூட்டாக தெரியும் வண்ணம் ஹன்சிகா மேற்கொண்டு வந்த சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைல்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஹன்சிகா ஆபரணங்கள் ஏதும் அதிகமாக அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார். அதுவும் காதுகளுக்கு கல் பதித்த காதணியையும், கை விரலுக்கு சில்வர் மோதிரமும் அணிந்திருந்தார்.

சிபி மற்றும் ஜீவாவுடன்

சிபி மற்றும் ஜீவாவுடன்

இது விழாவில் சிபி மற்றும் ஜீவாவிற்கு நடுவே ஹன்சிகா அமர்ந்திருந்த போது எடுத்த போட்டோ.

டி.ஆர். ராஜேந்தர்

டி.ஆர். ராஜேந்தர்

இப்படத்தின் முதல் பாடலை டி.ஆர் அவர்கள் வெளியிட்டார். இது அப்போது எடுத்த போட்டோ தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hansika In Neha Taneja at Pokkiri Raja Single Launch

At the unveiling of Pokkiri Raja’s latest song, Hansika was seen in a Neha Taneja dress, one that she wore with simple Burberry t-strap sandals.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter